என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மலர்க்கொடி சேகரை அதிமுக-விலிருந்து நீக்கம் செய்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
    • அதிமுக பிரமுகர் மலர்க்கொடி பிரபல தாதாவின் மனைவி ஆனார்.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அ.தி.மு.க. இணை செயலாளர் மலர் கொடி கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். 

    இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம், திருவல்லிக்கேணி மேற்கு பகுதி கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த மலர்கொடி சேகர் ( திருவல்லிக்கேணி மேற்கு பகுதிக் கழக இணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் அவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • சுற்றுலாப் பயணிகள் குளிக்க செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

    கோவை:

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக கோவை குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த ஜூன் மாதம் 26-ந்தேதி முதல் அருவிக்கான பாதை மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருவதால் கோவை குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    மேலும் சாடிவயல் பகுதியில் நொய்யல் ஆற்றுக்கு செல்லும் வழிப்பாதையிலும் வெள்ள நீரின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கோவை குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை விதித்த தடை தொடர்ந்து நீடிக்கிறது.

    இதுதொடர்பாக வனஅதிகாரிகள் கூறுகையில், கோவை குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அருவிக்கு செல்ல விதிக்கப்பட்டு உள்ள தடை உத்தரவு தொடரும்.

    மேலும் மறுஉத்தரவு வரும்வரை பொதுமக்கள் யாரும் குற்றாலம் அருவியில் குளிக்க வர வேண்டாமென தெரிவித்து உள்ளனர்.

    • திம்பம் மலைபாதை வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
    • 4-வது நாட்களாக அவதிபட்டு வருகின்றனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் மலை கிராமங்களுக்கு சத்தியமங்கலம் ராஜன் நகர் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு திம்பம் மலைபாதை வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த 4 நாட்கள் முன்பு ஆசனூர் அடுத்த மாவள்ளம் பிரிவு அருகே மின்கம்பி மீது மரம் விழுந்து மின்கம்பி துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சாரமும் தடைப்பட்டது. மலைகிராம மக்கள் அடர்ந்த வனப்பகு தியில் மின்சாரம் இல்லாமல் 4-வது நாட்களாக அவதிபட்டு வருகின்றனர்.

    மலை கிராமம் கேர்மாளம், ஒசட்டி, காடட்டி, சுஜில்கரை, திங்களூர், கோட்டமாளம், மாவநத்தம், பெஜலட்டி, காளிதிம்பம், தடசலட்டி என 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் மின் தடை ஏற்பட்டு உள்ளது. மின் தடையால் ஊராட்சிக்கு செந்தமான மின் மோட்டார் இயக்க முடியாததால் குடிநீர் இல்லாமல் அவதி பட்டு வருகின்றனர்.

    மின் மோட்டார்களை இயக்க முடியாததால் அருகிலுள்ள குட்டை மட்டும் ஆங்காங்கே பள்ளத்தில் தேங்கியுள்ள நீரை எடுத்து குடித்து வருகின்றனர். இதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 3 நாட்கள் மின்சாரம் இல்லாததால் மாவநத்தம், தடசலட்டி, இட்டரை ஆகிய பகுதிகளில் குட்டை நீரை குடித்து வாந்தி, பேதி ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    தற்போது 4 நாட்களாக மின்சாரம் இல்லாததால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் 4 நாட்களாக எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    சத்தியமங்கலம் இருந்து கேர்மாளம் வரை உள்ள மின் கம்பிகள் மிகவும் பழைமையானதாக இருப்பதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக கூறுகின்றனர். மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மழைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • மழை பெய்து வருவதால் ரம்யமான சூழல் நிலவுகிறது.
    • ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைய தொடங்கியுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடித்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் இரவு முழுவதும் இதமான குளிர் காற்று வீசியது. திற்பரப்பு அருவி பகுதியிலும் மழை பெய்து வருவதால் ரம்யமான சூழல் நிலவுகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மழை கொட்டி தீர்த்து வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

    அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் கோதை ஆறு, குழித்துறை ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறையத் தொடங்கியுள்ளது.

    திற்பரப்பு அருவியில் கடந்த 2 நாட்களாக குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்றும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 3-வது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.82 அடியாக உள்ளது. அணைக்கு 1061 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 582 கன அடி தண்ணீர் மதகு வழியாகவும், 256 கன அடி தண்ணீர் உபரி நீராகவும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.15 அடியாக உள்ளது. அணைக்கு 696 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து 460 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 15.43 அடியாக உள்ளது. அணைக்கு 163 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. நாகர்கோவில் நகரில் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு சூறைக்காற்று வீசியதால் மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் பரித விப்பிற்கு ஆளானார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்கம் விலை கிராமும் 6 ஆயிரத்து 905 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளியின் விலை குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கட்டுக்குள் வராமல் தறிக்கெட்டு உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு மாதமும் பெரும்பாலான நாட்களில் உயர்வும், அவ்வப்போது சற்று விலை குறைந்தும் என ஏற்ற, இறக்கத்துடனேயே அது இருந்து வருகிறது.

    இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 55 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 905 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 30 காசு குறைந்து 99 ரூபாய் 20 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

    • பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது வெட்கம்.
    • வெட்கப்படுவதற்கு இணையாக கோபப்படும் போதும் கன்னங்கள் சிவக்கின்றன.

    பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது வெட்கம். குறிப்பாக திரைப்படங்களிலும், கதை புத்தகங்களிலும் வெட்கப்படும்போது முகம் சிவக்கும் அழகை வர்ணிக்காதவர்களே இல்லை. அதேவேளையில், வெட்கப்படுவதற்கு இணையாக கோபப்படும் போதும் கன்னங்கள் சிவக்கின்றன.

    குறிப்பாக டீன் ஏஜ் பருவம் என கூறப்படும் இளம்பெண்களுக்கு வெட்கத்தில் கன்னங்கள் சிவப்பாக மாறும். இது அவர்களின் அழகை மெருகூட்டுவதாக அமைந்துள்ளது.

    சிலருக்கு சிலரை பார்த்தால் இந்த வெட்கம் ஏற்படுகிறது. இந்த வெட்கத்தின் போது முகம் சிவப்பு நிறத்தை அடைகிறது. அது ஏன் அப்படி சிவப்பு நிறத்தை அடைகிறது என்ற ஆராய்ச்சியில் நெதர்லாந்தை சேர்ந்த அம்ஹர் டாம் பல்க லைக்கழகத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

    40 டீன் ஏஜ் பருவ இளம் பெண்களை ஆய்விற்காக எடுத்துக் கொண்டனர். சினிமா பாடல்களை ஒளிபரப்பி அதனோடு இளம்பெண்களை பாடுமாறு கூறினார்கள். அவ்வாறு பாடும் போது அவர்களின் கன்னங்கள் வெப்பம் மற்றும் மூளையில் ஏற்பட்ட சந்தோசத்தால் சிவப்பது கண்டறியப்பட்டது. மேலும் பெண்கள் தங்களுக்குள் பாடல்களை பாடும் போது கன்னங்கள் தானாகவே சிவந்ததை கண்டனர்.

    பாடல் வரிகளை கேட்டு வெட்கத்தில் பெண்களுக்கு கன்னம் சிவப்பதையும் கண்டனர். கூச்சத்தின் முக்கிய பங்கான வெட்கத்தை கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியந்தனர்.

    இந்த ஆராய்ச்சியில் வெட்கத்தில் கன்னம் சிவப்பதற்கான முழுமையான காரணத்தை அவர்கள் வெளியிடவில்லை.

    • 585 பஸ்களும் இயக்கப் பட உள்ளன.
    • நாளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 260 பஸ்களும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) 585 பஸ்களும் இயக்கப் பட உள்ளன.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் தலா 45 பஸ்கள் என 90 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    மேலும், பெங்களூா், திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    இதுமட்டுமன்றி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் இருக்கை, படுக்கை மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட 50 பஸ்கள் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூா், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மேலும், வார இறுதி நாள்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை 15 பஸ்களும், நாளை மறுநாள் பவுா்ணமி தினத்தை முன்னிட்டு 15 பஸ்களும் என 30 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பவுர்ணமியை முன்னிட்டு சென்னை மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை மறுநாள் 30 சிறப்பு பஸ்கள் என ஆக மொத்தம் 1,245 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வழக்கு விசாரணை நீதி மன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.
    • அடுத்த வாரத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு வெளியாகும்.

    சென்னை:

    இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக் கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

    வழக்கமாக, நீட் தோ்வு முடிவுகள் வெளியான ஓரிரு நாள்களில் அகில இந்திய கலந்தாய்வு மற்றும் மாநில அரசுகளின் கலந் தாய்வுக்கு விண்ணப்பிப்பது தொடங்கிவிடும். இந்த ஆண்டு நீட் தோ்வு முடிவுகள் கடந்த ஜூன் 4-ந் தேதி வெளியானது.

    நீட் தோ்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது, அடுத்தடுத்த பதிவெண்களைக் கொண்ட 6 போ் முழு மதிப்பெண் பெற்றது போன்றவை நாடுமுழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

    இது தொடா்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றதால், நீட் தோ்வு முடிவுகள் வெளியாகி ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பை மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

    நீட் தோ்வு தொடா்பான வழக்கு விசாரணை நீதி மன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. அதனால், அடுத்த வாரத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு தொடா்பான அறிவிப்பை மத்திய அரசு அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் மாநில அரசு நடத்தும் கலந்தாய்வுக்கான அறிவிப்பு வெளியாகும்.

    • 8 போலீஸ் நிலையங்கள் உள்ளன.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய 5 போலீஸ் உட்கோட்டங்கள் உள்ளன. கிருஷ்ணகிரி உட்கோட்டத்தில் கிருஷ்ணகிரி டவுன், தாலுகா, கே.ஆர்.பி. டேம், மகராஜகடை, காவேரிப்பட்டணம், குருபரப்பள்ளி, வேப்பனப்பள்ளி ஆகிய 7 போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    ஓசூர் உட்கோட்டத்தில் ஓசூர் டவுன், அட்கோ, சிப்காட், மத்திகிரி, பாகலூர், பேரிகை, சூளகிரி, நல்லூர் ஆகிய 8 போலீஸ் நிலையங்கள் உள்ளன. தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில் தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, கெலமங்கலம் ஆகிய 6 போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    இதேபோல பர்கூர் உட்கோட்டத்தில் பர்கூர், கந்திகுப்பம், பாரூர், நாகரசம்பட்டி, போச்சம்பள்ளி ஆகிய 5 போலீஸ் நிலையங்களும், ஊத்தங்கரை உட்கோட்டத்தில் ஊத்தங்கரை, கல்லாவி, சாமல்பட்டி, சிங்காரப்பேட்டை, மத்தூர் ஆகிய 5 போலீஸ் நிலையங்களும் உள்ளன.

    இதைத் தவிர ஓசூரில் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் அலுவலகமும், ஓசூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி, பர்கூரில் தலா ஒரு மகளிர் போலீஸ் நிலையங்களும் இயங்கி வருகின்றன. இவற்றில் மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில், மாவட்டத்தில் பணியாற்றும் போலீசாரில் 206 பேர் இடமாற்றம் செய்யப்பட்டள்ளனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு, போலீஸ் என பல நிலைகளில் பணியாற்ற கூடிய போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டள்ளனர்.

    இதில் பலர் உட்கோட்டத்திற்குள் உள்ள போலீஸ் நிலையங்களிலும், சிலர் உட்கோட்டம் விட்டு மற்றொரு உட்கோட்டத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை பிறப்பித்துள்ளார்.

    இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, போலீசார் பலர் தங்களின் குடும்ப சூழ்நிலை கருதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் இடமாறுதல் கோரி, விண்ணப்பித்த கோரிக்கை மனுக்களின் அடிப்படையிலும், நிர்வாக காரணங்களுக்காகவும் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த இடமாற்ற உத்தரவு வழக்கமான நடைமுறை தான் என்றும் தெரிவித்தனர்.

    • விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • 2 நாள்கள் பணிக்காலத்தை ஈடுசெய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் (20-ந்தேதி) விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    மகளிா் உரிமைத் தொகைத் திட்டப் பணிகளுக்காக வேலை செய்த நிலையில், அதற்கு ஈடாக விடுமுறை விடப்படுவதாக உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

    மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ், பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியை கடந்த ஆண்டு ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் ரேஷன் கடை பணியாளா்கள் மேற்கொண்டனா்.

    2 நாள்கள் பணிக்காலத்தை ஈடுசெய்யும் வகையில், கடந்த ஜூன் 15-ந்தேதி ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த மாதம் நாளை மறுநாள் விடுமுறை விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    • சர்தார் 2 கடந்த வாரம் பூஜையுடன் துவங்கியது.
    • இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

    கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, இயக்குநர் பிஎஸ் மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சர்தார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சரஸ் நிறுவனம் தயாரித்தது. கார்த்தி இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து இருப்பார். கார்த்தியுடன் ராஷி கன்னா, லைலா, முனிஷ்காந்த், மற்றும் பலர் நடித்து இருந்தனர்.

    இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. சர்தார் 2 திரைப்படம் கடந்த வாரம் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், நேற்று காலை இந்த படத்தின் சண்டை காட்சி படப்பிடிப்பு சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது.

    அப்போது எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சண்டை பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படும் சண்டை பயிற்சியாளர் ஏழுமலை 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். உயிரிழிந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உடலுக்கு நடிகர் கார்த்தி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் உருவாகலாம்.
    • தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

    * புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் உருவாகலாம்.

    * தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    * தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

    ×