search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police transfer"

    • கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்- 2 போலீசார் பற்றி தொடர் புகார்கள் ஐ.ஜி. அலுவலகத்தின் தனி பிரிவுக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
    • இந்த புகார்கள் குறித்து நடத்திய விசாரணையின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர்- 2 போலீசாரை பணி மாறுதல் செய்து தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் காளிராஜ்.

    மேலும் இந்த காவல் நிலையத்தில் காவலர்களாக பணிபுரிந்து வந்தவர்கள் ராமர் பாண்டி மற்றும் சுவாதிராஜ். இவர்களைப் பற்றி தொடர் புகார்கள் ஐ.ஜி. அலுவலகத்தின் தனி பிரிவுக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த புகார்கள் குறித்து நடத்திய விசாரணையின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் காளிராஜ் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், போலீசார் ராமர்பாண்டியன், சுவாதிராஜ் ஆகியோரை சிவகங்கை மாவட்டத்திற்கும் பணி மாறுதல் செய்து தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் 41 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பிறப்பித்துள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சூரியநாராயணன் மயிலம் போலீஸ் நிலையத்திற்கும், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய ஏட்டு மஞ்சுளா உளுந்தூர்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏட்டுகள் ராஜதுரை திருநாவலூர் போலீஸ் நிலையத்திற்கும், காளிதாசன் உளுந்தூர்பேட்டை போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கும், ராஜேந்திரன் கிளியனூர் போலீஸ் நிலையத்திற்கும், ஆரோக்கியதாஸ் விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கும், கண்ணன் சங்கராபுரத்திற்கும், போலீஸ்காரர்கள் ரவி கீழ்குப்பத்திற்கும், சக்திவேல் வளவனூருக்கும், ராமலிங்கம் கரியாலூருக்கும், வசந்தராஜன், ரமேஷ் ஆகியோர் திருவெண்ணைநல்லூருக்கும், பசுபதி மரக்காணத்திற்கும், பூங்கொடி ஒலக்கூருக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

    இதேபோல் விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை பிரிவில் 5 ஆண்டுகளாக போலீஸ்காரராக பணியாற்றி வந்த சுரேஷ், பிரகாஷ்குமார், சத்தியநாராயணன், சுபாஷ், சரவணன், கோபிநாதன், செல்வத்துரை உள்ளிட்ட 27 பேர் மாவட்டத்திற்குள் வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பிறப்பித்துள்ளார். 

    திருவள்ளூர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளாக ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 130 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 29 காவல் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 8 சப்-இன்ஸ்பெக்டர்கள், 31 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் என 130 பேர் கணக்கெடுக்கப்பட்டனர்.

    அவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு உடனடியாக பணியிட மாறுதல் உத்தரவை போலீஸ் சூப்பிரண்டு சிபி.சக்கரவர்த்தி பிறப்பித்து உள்ளார்.
    ×