சர்தார் 2 படப்பிடிப்பில் உயிரிழந்த ஏழுமலை - நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி

சர்தார் 2 கடந்த வாரம் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.
சர்தார் 2 படப்பிடிப்பில் உயிரிழந்த ஏழுமலை - நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி
Published on

கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, இயக்குநர் பிஎஸ் மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சர்தார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சரஸ் நிறுவனம் தயாரித்தது. கார்த்தி இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து இருப்பார். கார்த்தியுடன் ராஷி கன்னா, லைலா, முனிஷ்காந்த், மற்றும் பலர் நடித்து இருந்தனர்.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. சர்தார் 2 திரைப்படம் கடந்த வாரம் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், நேற்று காலை இந்த படத்தின் சண்டை காட்சி படப்பிடிப்பு சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது.

அப்போது எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சண்டை பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படும் சண்டை பயிற்சியாளர் ஏழுமலை 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். உயிரிழிந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உடலுக்கு நடிகர் கார்த்தி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com