என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மேம்பாட்டுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.
- ஆசிரியர் பள்ளிக்கே வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பிவிட்டது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
பள்ளிக்கூடம் கல்வியை மட்டுமல்ல... நல் ஒழுக்கம், பண்பாடு, நீதிபோதனை போன்றவற்றை கற்றுத்தரும் இடம். அங்கு மாணவர்களை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் உருவாக்கும் போற்றுதலுக்குரிய பணியை செய்து வருபவர்கள் ஆசிரியர்கள்.
எல்லோரும் அவ்வாறு ஆசிரியப்பணியை அறப்பணியாக செய்கிறார்களா என்றால் பதில் கேள்விக்குறிதான்.
எங்காவது ஒருவர் தங்களது பணிக்கு இழுக்கை தேடிக்கொண்டு விடுகிறார்கள். அப்படியொரு ஆசிரியர் செய்த காரியம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மேம்பாட்டுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. பள்ளி மாணவ-மாணவிகள் முறையாக வகுப்புகளுக்கு வரவேண்டும், சிறப்பாக படிக்க வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் பட்ஜெட்டில் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகிறது. அதில் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள், காலை உணவுத்திட்டம் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் திறன் எந்த அளவுக்கு இருக்கிறது? அவர்களுக்கான உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் எந்த அளவில் உள்ளது? மாணவர்களுக்கான அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு கீழ் உள்ள கல்வி அலுவலர்கள் இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் முறையாக ஆய்வு செய்யாத வட்டாரக் கல்வி அலுவலர்களின் பட்டியலையும் கல்வித் துறை வெளிப்படையாக வெளியிட்டது.
இந்த நிலையில் ஆய்வின்போது, கற்பித்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய ஆசிரியர்கள் மீது கடந்த சில மாதங்களாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது, கற்பித்தல் பணிக்கு செல்லாமல் நீண்டநாட்கள் விடுப்பில் இருப்பது, பள்ளிக்கு வந்தது போல் கணக்கு காண்பிப்பது என்பது போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர்களை கல்வித்துறை இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்து வருகிறது.
அந்த வரிசையில் தர்மபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்டத்துக்குட்பட்ட காரிமங்கலம் வட்டாரம், ராமியாம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் கே.பாலாஜி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர் பள்ளிக்கே வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பிவிட்டது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி, ஆசிரியர் பாலாஜி மீது தமிழ்நாடு அரசுப் பணி (ஒழுக்கம் மற்றும் மேல்முறையீடு) 17-வது விதியின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் பல அரசு பள்ளிகளில் இதுபோன்ற நிலைதான் நீடிக்கிறது எனவும், கல்வித்துறை சார்பில் ஆய்வு, கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் பாரபட்சம் காட்டக் கூடாது எனவும் கல்வியாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து இருக்கின்றனர்.
- 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருவார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது. 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்குப்பின் மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் தங்க தேரில் சுவாமி, அம்பாள் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிசேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருவார்.
அங்கு முதலில் சுவாமி ஜெயந்தி நாதர் தன்னிடம் போரிட வரும் யானை முகம் கொண்ட சூரனையும், 2-வதாக சிங்கமுகன், 3-வதாக தன் முகம் கொண்ட சூரனையும் வதம் செய்கிறார். இறுதியில் மரமாக மாறிய சூரனை சுவாமி ஜெயந்தி நாதர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னோடு ஜக்கியமாக்கி கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதையொட்டி சூரசம்ஹாரத்தை காண்பதற்கு லட்சக்கணக்கானோர் அதிகாலை முதலே கோயில் வளாகத்தை நோக்கி வந்துள்ள வண்ணம் உள்ளனர். பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு கடற்கரைகளில் காத்திருக்கின்றனர்.
சூரசம்ஹாரத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். இன்று பிற்பகல் சுமார் 6 லட்சம் பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக திரண்டிருந்தனர்.
பாதுகாப்பிற்கு 4500 போலீசார் சீருடையிலும், சாதாரண உடையிலும் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு காமிரா மூலம் பக்தர்களை கண்காணித்து வருகின்றனர்.
கடலில் புனித நீராடும் பக்தர்கள் வசதிக்காக கடலோர பாதுகாப்பு குழுமம் போலிசார் டி.எஸ்.பி. பிரதாபன் தலைமையில் 90 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மற்றும் பஸ்கள் நிறுத்துவதற்கு புறநகர் பகுதிகளில் 9 இடங்களில் சுமார் 7000 வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் காவல்துறை சார்பில், தயார் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சென்னை போன்ற இடங்களுக்கு செல்லக்கூடிய அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்துவதற்கு திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் மற்றும் அதன் அருகில் தற்காலிக பஸ் நிறுத்து மிடம் அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா வாகனங்கள் கார்கள் நிறுத்துவதற்கு வீரபாண்டியன் பட்டினம் அருகே உள்ள ஜே.ஜே. நகர், அரசு தொழிற்பெயர்ச்சி நிலையம், சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அருகில் ஆகிய மூன்று இடங்களில் தற்காலிக வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப் பட்டுள்ளது.
நெல்லை, தென்காசி செல்லக்கூடிய பஸ்கள் நிறுத்துவதற்கு திருச்செந்தூர் நெல்லை சாலையில் அன்பு நகர், மற்றும் அரசு டாஸ்மாக் அருகில் சுற்றுலா வாகனங்கள் கார்கள் நிறுத்துவதற்கு 2 இடங்களில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி நாகர்கோவில் செல்லக்கூடிய பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் கார்கள் நிறுத்து வதற்கு பரமன்குறிச்சி சாலையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகம் குடோன் அருகிலும் ஆம்னி பஸ்களுக்கும், தற்காலிக பஸ்கள் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
காவல் உதவி மையங்கள், முதலுதவி நிலையங்கள், தற்காலிக பஸ் நிலையங்கள், கழிப்பறைகள், பொது மக்களுக்கான நியமிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து மாற்றுப பாதைகள், வழித்தடங்கள் பற்றிய அத்தியாவசியத் தகவல்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எளிதாக இணையதளத்தில் அறிந்து கொள்ளும் வகையில் கியூ ஆர் கோடு மற்றும் லிங்க் மூலம் பெறும் வசதியை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.
மேலும் அவசர உதவிகளுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், திருச்செந்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் திருச்செந்தூர் கோவில் காவல் ஆய்வாளர் ஆகியோரின் தொலைபேசி எண்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் வளாகத்தில் அவசர சிகிச்சைக்கு தற்காலிக மருத்துவ மனைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் மருத்துவர்கள் உள்ளனர். அம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
நாளை இரவு 11மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- ஏரியில் கூட தாமரை வளரக்கூடாது என அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார்.
- வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரப் போகிறது அதைக் கண்டு அலறப்போகிறீர்கள்.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பில் ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவின் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பூங்கா ஏரியில் தாமரை வளர்ந்திருப்பதை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர் சேகர்பாபு, ஏரியில் கூட தாமரை வளரக்கூடாது என்று கிண்டலாக பேசினார்.
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பாஜகவினர் பல ஆண்டுகளாக கூறிவரும் நிலையில், அதனை கிண்டலடிக்கும் விதமாக சேகர்பாபு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரப் போகிறது என பாஜக-வின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
அதில், குளத்தில் தாமரை மலர்வதைக் கண்டே அலறுகிறீர்களே வருங்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் தாமரை மலரப் போகிறது அதைக் கண்டு அலறப்போகிறீர்கள். அரசு பூங்காவில் தாமரை வேண்டாம் என கூறும் நீங்கள் தாமரை அரசமைக்கும் காலத்தை பார்ப்பீர்கள் என கூறியுள்ளார்.
- மாவட்டங்கள் தோறும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கப்பட வேண்டும்.
- நேற்று மாலை நிலவரப்படி சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.
சென்னை:
தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறையின் கீழ் 34 ஆயிரத்து 774 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுனர் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய கூட்டுறவுத்துறை முடிவு செய்தது.
அதன் படி, தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் என 3 ஆயிரத்து 308 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் 9-ந் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும்.
இதற்காக மாவட்டங்கள் தோறும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கப்பட வேண்டும்.
இதில், ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்பு கல்வித் தகுதியும், கட்டுனர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு கல்வித் தகுதியும் வரையறுக்கப்பட்டு உள்ளது.
அதே போன்று, ரேஷன் கடை விற்பனையாளர் பதவிக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ.6,250 மாதம் வழங்கப்படும். ஓர் ஆண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ.8,600 முதல் ரூ.29,000 வரை வழங்கப்படும். ரேஷன் கடை கட்டுனர் பதவிக்கு தொகுப்பு ஊதியம் ரூ.5,500 வழங்கப்படும். ஓர் ஆண்டுக்கு பிறகு ரூ.7,800 முதல் ரூ.26,000 வரை வழங்கப்படும்.
ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருப்பதாக கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதில், கல்வித் தகுதி 12-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பாக இருந்த போதிலும் பட்டப்படிப்பு படித்த ஏராளமானோர் இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்திருக்கக் கூடும் என தெரிகிறது. மேலும், இந்த பதவிகளுக்கு மொத்தம் எத்தனை பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்று அல்லது நாளை தெரிய வரும்.
- வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு உள்ளது.
- சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை:
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.
- அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஐப்பசி மாதத்தின் சுபமுகூர்த்த தினங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்வது வழக்கம்.
தற்போது ஐப்பசி மாதத்தின் சுபமுகூர்த்த தினங்களான 07.11.2024 மற்றும் 08.11.2024 ஆகிய நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
இதனை ஏற்று ஐப்பசி மாதத்தின் சுபமுகூர்த்த தினங்களான 07.11.2024 மற்றும் 08.11.2024 ஆகிய நாட்களில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
- சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்து இருந்தது.
மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை அண்ணா சதுக்கம், பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், ராயப்பேட்டை, அடையார், கொட்டிவாக்கம், பாலவாக்கம், அண்ணா சாலை, பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
- நடிகை கஸ்தூரி மீது திருச்சி குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது நேற்று 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்த அவதூறு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நடிகை கஸ்தூரி மீது தொடர்ந்து வழக்குகள் பதியப்பட்டு வருகிறது.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில், நடிகை கஸ்தூரி மீது மதுரையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம் சார்பில் அளித்த புகாரில், 6 பிரிவுகளில் திருநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், நடிகை கஸ்தூரி மீது திருச்சி குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது நேற்று 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை, மதுரை, திருச்சியை தொடர்ந்து தேனி மாவட்டத்திலும் நடிகை கஸ்தூரி மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், ஆண்டிப்பட்டியில் நடிகை கஸ்தூரி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கோவையில் அமையவுள்ள பெரியார் நூலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
- அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் "கடவுளே - அஜித்தே" என்று கூறி வருகின்றனர்.
கோவை மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் ரூ.300 கோடியில் மாபெரும் நூலகத்திற்கும், அறிவியல் மையத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
கோவையில் பெரியார் பெயரில் அமையவுள்ள நூலகம் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பில் கட்டப்படவுள்ளது என்றும் 2026ம் ஆண்டு திறக்கப்படும் என்று
அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியின் போது கூடியிருந்த கல்லூரி மாணவர்கள் "கடவுளே அஜித்தே" என கூச்சலிட்டுள்ளனர். மாணவர்கள் கூச்சலிட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சமீப காலங்களில் அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் "கடவுளே - அஜித்தே" என்று கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சாம்சங் ஊழியர்கள் 91 பேரின் பணி நீக்க உத்தரவையும் ரத்து செய்ய மனுவில் கோரிக்கை.
- மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
சாம்சங் ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ளது.
சாம்சங் நிறுவன ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி காஞ்சிபுரம் சிஐடியு செயலாளர் முத்துக்குமார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
மேலும், இதில், சாம்சங் ஊழியர்கள் 91 பேரின் பணி நீக்க உத்தரவையும் ரத்து செய்ய மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
மேலும், மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணை நவம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- ரூ.300 கோடியில் மாபெரும் நூலகத்திற்கும், அறிவியல் மையத்திற்கும் அடிக்கல்.
- கோவையின் எழில்மிகு அடையாளமாக உருவாகி வரும் செம்மொழிப் பூங்கா பணிகளையும் பார்வையிட்டேன்.
கோவை மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் ரூ.300 கோடியில் மாபெரும் நூலகத்திற்கும், அறிவியல் மையத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கோவையின் அறிவுச்சின்னமாக எழவுள்ள 'தந்தை பெரியார் நூலகம் – அறிவியல் மைய'-த்துக்கான அடிக்கல்லை நாட்டி, அப்பொழுதே திறப்பு விழாவுக்கான நாளையும் உறுதியாக அறிவித்தேன்! கோவையின் எழில்மிகு அடையாளமாக உருவாகி வரும் செம்மொழிப் பூங்கா பணிகளையும் பார்வையிட்டேன்!
மாவட்டம்தோறும் - தொகுதிதோறும் – ஒவ்வொரு தனிமனிதரின் தேவையையும் தீர்த்து வைக்கவே நாளும் உழைக்கிறேன்… உங்களின் ஆதரவோடும் ஊக்கத்தோடும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உறவினர் ஒருவருடன் டீ குடித்துக்கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார்.
- தென்காசி மாவட்ட கலெக்டரிடமும் கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.
சாம்பவர்வடகரை:
தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த சாம்பவர்வடகரை உலக்கூட தெருவை சேர்ந்தவர் ஆறுமுகசாமி. இவரது மகன் உமாசங்கர்(வயது 30). இவருக்கு மனைவி மற்றும் 2 வயதில் குழந்தை உள்ளது.
உமாசங்கர் சவுதி அரேபியாவில் கடந்த 1 வருடமாக டிரைவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று அங்கு அவர் தனது உறவினர் ஒருவருடன் டீ குடித்துக்கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் கதறி துடித்தனர். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர அரசு உதவி செய்ய வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து தென்காசி மாவட்ட கலெக்டரிடமும் கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.






