என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    உண்ணாவிரத போராட்டத்திற்கு சட்டத்தில் இடமில்லை- சென்னை உயர்நீதிமன்றம்
    X

    உண்ணாவிரத போராட்டத்திற்கு சட்டத்தில் இடமில்லை- சென்னை உயர்நீதிமன்றம்

    • சாம்சங் ஊழியர்கள் 91 பேரின் பணி நீக்க உத்தரவையும் ரத்து செய்ய மனுவில் கோரிக்கை.
    • மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.

    சாம்சங் ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ளது.

    சாம்சங் நிறுவன ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி காஞ்சிபுரம் சிஐடியு செயலாளர் முத்துக்குமார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

    மேலும், இதில், சாம்சங் ஊழியர்கள் 91 பேரின் பணி நீக்க உத்தரவையும் ரத்து செய்ய மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.

    இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

    மேலும், மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணை நவம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×