என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • அனைத்து நாட்டினருக்கான வழங்கப்பட்ட புகலிட விண்ணப்பங்களை பரிசீலிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
    • 3-ம் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறுவோருக்கு நிரந்தரமாக தடை விதிக்க முடிவு செய்துள்ளேன்.

    அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் பாதுகாப்பு படை அதிகாரி உயிரிழந்தார். மற்றொரு வீரர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தையடுத்து அங்கீகரிக்கப்படாத குடியேற்றத்தை கட்டுப்படுத்துவது, வெளிநாட்டினர் மீதான சோதனையை தீவிரப்படுத்துவது என தனது குடியேற்ற கொள்கையை மறுசீரமைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    இந்த நிலையில் அனைத்து புகலிட விண்ணப்பங்களையும் டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. அனைத்து நாட்டினருக்கான வழங்கப்பட்ட புகலிட விண்ணப்பங்களை பரிசீலிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடி வரவு சேவைகள் இயக்குனர் ஜோசப் எட்லோ கூறியதாவது:-

    ஒவ்வொரு வெளிநாட்டவரும் அதிகபட்சமாக சரிபார்க்கப்பட்டு பரிசோதிக்கப்படுவதை நாங்கள் உறுதிசெய்யும் வரை புகலிட கோரிக்கைகளின் இடை நிறுத்தம் அமலில் இருக்கும் என்றார். 3-ம் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறுவோருக்கு நிரந்தரமாக தடை விதிக்க முடிவு செய்துள்ளேன் என்று டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களுக்கு பிறகு புகலிட விண்ணப்ப நிறுத்தம் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    • சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்கரா இணைந்து பணியாற்றும் முதல் திரைப்படம் இதுவாகும்.
    • இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவை தயாரிப்பு நிறுவனமான ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

    வீடியோவில், சிவகார்த்திகேயன் டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளதையும், படத்தின் சில காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

    சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப் படம் 1960-ம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 'பராசக்தி' படத்தில் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்கரா இணைந்து பணியாற்றும் முதல் திரைப்படம் இதுவாகும். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.



    • இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தவுடன் தமிழகம் முழுவதும் இருக்கும் கல்லூரி மாணவர்கள் அரசின் லேப்டாப்பை பெறுவார்கள்.
    • உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் வெளிவர வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால், தமிழக அரசால் புதிய திட்டப்பணிகளை அறிவித்து செயல்படுத்த முடியாது. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிதாக செயல்படுத்த வேண்டிய திட்டங்களை விரைவில் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கி உள்ளார். தற்போதைய நிலையில் அடுத்த மாதம் (டிசம்பர்) மாதம் 3 மெகா திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    அதில் முதலாவது கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம். கடந்த பட்ஜெட்டில், 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினினின் நேரடி கண்காணிப்பில் இந்த திட்டப்பணிகள் நடப்பதால் அதிகாரிகள் பம்பரமாக சுழன்று செய்து வருகின்றனர். தற்போது இந்த திட்டம் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது. முதல்கட்டமாக 10 லட்சம் லேப்டாப்கள் ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கப்பட்டு விடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார். இந்த லேப்டாப்களை தயாரிக்கும் பணி ஏசர், டெல், எச்.பி. ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள் இந்த லேப்டாப்களை தயார் செய்து வைத்திருக்கின்றனர். ஒரு லேப்டாப் ரூ.21 ஆயிரத்து 650 என்ற விலையில் வாங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தவுடன் தமிழகம் முழுவதும் இருக்கும் கல்லூரி மாணவர்கள் அரசின் லேப்டாப்பை பெறுவார்கள்.

    இரண்டாவது மகளிர் உரிமை தொகை திட்ட விரிவாக்கம். தமிழகத்தில் தற்போது ஒரு கோடியே 14 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இவர்களது வங்கி கணக்கிற்கு மாதம்தோறும் 15-ந் தேதி தலா ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. எனவே இந்த திட்டத்தின்கீழ் விடுப்பட்ட மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதற்காக உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 28 லட்சம் பெண்கள், இந்த திட்டத்தின் கீழ் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளனர்.

    இந்த மனுக்கள் பரிசீலனை தற்போது இறுதிகட்டத்தை எட்டி பட்டியல் தயாராகி வருகிறது. ஏற்கனவே அரசின் அறிவிப்புப்படி, இந்த திட்டத்தின்கீழ் உள்ள தகுதி வரையறை அடிப்படையில் தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி இவர்களுக்கு டிசம்பர் மாதம் 15-ந் தேதி முதல் வங்கிக்கணக்கில் பணம் போடப்படும். ஆனால் எத்தனை பெண்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று அறிவிக்கப்படவில்லை.

    மூன்றாவது பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம். இந்த திட்டம், ஜனவரி மாதம் செயல்படுத்தப்படும் என்றாலும், இந்த திட்டப்பணிக்கான முடிவுகள் டிசம்பரிலேயே எடுக்கப்பட்டுவிடும். 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் தொகுப்புடன், ரொக்க தொகையும் வழங்கப்படும் என்ற பேச்சு பரவலாக எழுந்து உள்ளது. அதற்கு காரணம், ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடப்பதுதான். ஆனால் அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருந்தாலும், தேர்தல் காரணமாக நிச்சயம் அரசு சார்பில் ரொக்கத்தொகை கொடுப்பார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது. தமிழக அரசுக்கு நிதி சுமை இருந்தாலும், இந்த பொங்கலுக்கு ரொக்கத்தொகை நிச்சயம் வழங்கப்படும் என்று சிலர் உறுதியாக கூறுகின்றனர்.

    தமிழகத்தில் மொத்தம் 2.27 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. ஒரு குடும்பத்திற்கு ரூ.3 ஆயிரம் வழங்கினால் அரசுக்கு மொத்த செலவு ரூ.6 ஆயிரத்து 800 கோடி ஆகும் என்றும், ரூ.6 ஆயிரம் வழங்கினால் ரூ.13 ஆயிரத்து 620 கோடி தான் ஆகும். எனவே இது தமிழக அரசுக்கு மிகப்பெரிய சுமை கிடையாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் இறுதி முடிவு எடுப்பார் என்று அதிகாரிகள் சொல்கின்றனர்.

    எனவே டிசம்பர் மாதத்தில் லேப்டாப் வழங்கும் திட்டம், மகளிர் உரிமைத்தொகை விரிவாக்க திட்டம் மற்றும் பொங்கல் தொகுப்பு ரொக்கத்தொகை திட்டம் ஆகிய 3 மெகா திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    • பக்தர்கள் இருமுடியை தங்களுடன் எடுத்துச் செல்வது தொடர்பாக சர்ச்சை நிலவியது.
    • தேவையான அனைத்து பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும் என்றார்.

    புதுடெல்லி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தற்போது பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டிக் கொண்டு சென்று வருகின்றனர்.

    ஆனால் விமானங்களில் ஐயப்ப பத்கர்கள் பயணிக்கும்போது இருமுடி கட்டிக் கொண்டு செல்ல அனுமதி இல்லை. அவர்கள் இருமுடியை தங்களுடன் எடுத்துச் செல்வது தொடர்பாக சர்ச்சை நிலவி வந்தது.

    இந்நிலையில், இருமுடி பைகளை பக்தர்கள் கொண்டு செல்ல மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.

    இதுதொடர்பாக, மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராமமோகன் நாயுடு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், விமானங்களில் ஐயப்ப பக்தர்கள் தங்களுடன் இருமுடியை எடுத்துச் செல்ல அனுமதிப்பது என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. பக்தர்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் பாதிக்கப்படாமல் இருப்பது உறுதிசெய்யப்படும். தேவையான அனைத்து பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும் என தெரிவித்தார்.

    • இரண்டு முறை சாம்பியனான இந்திய அணி பி பிரிவில் இடம் பிடித்துள்ளது.
    • முதல் போட்டியில் அதிரடியாக ஆடிய இந்திய வீரர்கள் கோல் அடித்து கலக்கினர்.

    சென்னை:

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி முதல் முறையாக தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. சென்னை, மதுரை ஆகிய 2 நகரங்களில் டிசம்பர் 10-ம் தேதி வரை 13 நாள் ஹாக்கி போட்டிகள் பெறுகிறது.

    இந்தப் போட்டியில் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. முதல் முறையாக 24 அணிகள் கலந்துகொண்டன. இதுவரை 16 நாடுகள் மட்டுமே பங்கேற்றன. இந்த 24 நாடுகளும் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன.

    இரண்டு முறை சாம்பியனான இந்திய அணி பி பிரிவில் உள்ளது. சுவிட்சர்லாந்து, சிலி, ஓமன் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இடம் பெற்று பெற்றுள்ளன.

    இந்நிலையில், சென்னையில் நேற்று ரோகித் தலைமையிலான இந்திய ஜூனியர் ஹாக்கி அணி முதல் போட்டியில் சிலியை எதிர்கொண்டது. அதிரடியாக ஆடிய இந்திய வீரர்கள் கோல் அடித்து கலக்கினர்.

    இறுதியில், இந்தியா 7-0 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கியது.

    • சர்வதேச கடல்சார் அமைப்பின் நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது.
    • மொத்தமுள்ள 169 வாக்குகளில் 154 வாக்குகள் இந்தியாவுக்கு கிடைத்தது.

    லண்டன்:

    சர்வதேச கடல்சார் அமைப்பு (ஐ.எம்.ஓ) கடல்சார் தொழிலை ஒழுங்குபடுத்தும் முன்னணி அதிகார அமைப்பாகும். இது உலகளாவிய கடல்சார் வர்த்தகம், போக்குவரத்து மற்றும் அனைத்து கடல்சார் நடவடிக்கைகளையும் மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

    இந்நிலையில், சர்வதேச கடல்சார் அமைப்பின் நிர்வாகக் கூட்டம் லண்டனில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது சர்வதேச கடல்சார் அமைப்பின் (ஐ.எம்.ஓ) கவுன்சிலுக்கு இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. மொத்தமுள்ள 169 வாக்குகளில் 154 வாக்குகள் இந்தியாவுக்கு ஆதரவாகக் கிடைத்தது.

    இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளாவிய கடல்சார் களத்தில் தொடர்ந்து சேவை செய்வதற்காக, இந்தியாவிற்கான சர்வதேச கடல்சார் அமைப்பில் சர்வதேச சமூகத்தின் பெரிய அளவிலான ஆதரவை இந்தியா பெற்றுள்ளது என தெரிவித்தது.

    • பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது.
    • மழை நிலவரத்தைப் பொறுத்து விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட நிர்வாகமே அறிவிக்கும்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை காலண்டரில் நாளை விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டி அறிவிறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என்பது தவறான தகவல் என தமிழ்நாடு அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

    மேலும், மழை நிலவரத்தைப் பொறுத்து விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட நிர்வாகமே அறிவிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

    • அதிபர் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு கவிழ்ந்தது.
    • ஐ.நா. கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியுள்ளது.

    சிரியாவில் இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.

    சிரியாவில் அதிபர் அல் ஆசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு கவிழ்ந்தது. இதையடுத்து அந்நாட்டின் அதிபராக அகமது அல் ஷரா பொறுப்பேற்றார்.

    ஆசாத் ஆட்சி கவிழ்ந்தபோது சிரியாவில் ஐ.நா. கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், சிரியாவில் ரைப் டிமாஷ்கியு மாகாணம் குவாண்டனா மாவட்டம் பெட் ஜின் கிராமத்தில் இன்று இஸ்ரேல் படையினருக்கும், உள்ளூர் ஆயுதக்குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இந்த மோதலில் பொதுமக்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் படையினர் 6 பேர் காயமடைந்தனர். 

    • என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி.
    • 100 ஜென்மம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் ஒரு நடிகனாக, ரஜினிகாந்தாகவே பிறக்க விரும்புகிறேன்.

    கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் இதுவும் ஒன்று. இது உலகளாவிய திரைப்படங்களையும், உள்ளூர் திறமைகளையும் வெளிப்படுத்துகிறது.

    அந்தவகையில் இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா, கோவாவில் 20-ந்தேதி தொடங்கியது. இதில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

    மேலும் திரைப்படம் சார்ந்த ஆவணப்படங்கள், ஆய்வறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன. சிறப்பு ஆய்வரங்குகள், பயிற்சி பட்டறைகளும் நடைபெற்றன.

    இந்நிலையில் விழாவின் இறுதி நாளான இன்றைய நிகழ்வில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளதைச் சிறப்பிக்கும் வகையில் வாழ்நாள் சாத்தையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

    விருது பெற்றது குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி.  நான் நடிப்பையும் சினிமாவையும் காதலிக்கிறேன். 100 ஜென்மம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் ஒரு நடிகனாக, ரஜினிகாந்தாகவே பிறக்க விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் எல். முருகன், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இந்த விழாவை இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் மற்றும் கோவா மாநில அரசு ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படுகிறது.

    • நால்வரும் சந்தேகப்படும்படி நடந்து கொண்டதால், உள்ளூர்வாசிகள் தகனத்தை நிறுத்தினர்.
    • பிரீமியத்தை தவறாமல் செலுத்தினார்.

    உத்தர பிரதேசத்தில் காப்பீட்டுப் பணத்திற்காக போலியான இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    உத்தர பிரதேசத்தில் உள்ள கர்முக்தேஷ்வர் கங்கா காட் பகுதிக்கு நான்கு பேர் ஒரு இறந்த உடலை தகனத்திற்காக கொண்டு வந்தனர்.

    சடங்குகளின்படி இறுதிச் சடங்கை செய்வதற்குப் பதிலாக, உடலை நேரடியாகச் சிதைக்கு எடுத்துச் சென்று தகனத்தைத் தொடங்கினர்.

    நால்வரும் சந்தேகப்படும்படி நடந்து கொண்டதால், உள்ளூர்வாசிகள் தகனத்தை நிறுத்தினர். உடலில் இருந்த துணிகள் அகற்றப்பட்டபோது, ஒரு பிளாஸ்டிக் போலி உடல் கண்டெடுக்கப்பட்டது.

    அவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்ற நிலையில் உள்ளூர்வாசிகள் அவர்களில் இருவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் இருவர் தப்பி ஓடிவிட்டனர்.

    போலீசார் பிடிபட்ட இருவரை விசாரித்தபோது, அதிர்ச்சியூட்டும் விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

    கைது செய்யப்பட்ட டெல்லியின் கைலாஸ்புரியைச் சேர்ந்த துணிக்கடை நடத்தி வந்த கமல் சோமானி ரூ.50 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கியிருப்பது கண்டறியப்பட்டது. அதிலிருந்து தப்பிக்க, அவர் தனது நண்பர் ஆஷிஷ் குரானாவுடன் ஒரு திட்டம் தீட்டினார்.

    இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கமல் சோமானி, முன்பு தன்னிடம் பணிபுரிந்த அன்ஷுல் குமாரின் ஆதார் மற்றும் பான் கார்டுகளை பய்னபடுத்தி ஒரு வருடம் முன்பு, அன்ஷுலின் பெயரில் ரூ.50 லட்சத்திற்கான ஆயுள் காப்பீட்டுக் கொள்கையை வாங்கி, பிரீமியத்தை தவறாமல் செலுத்தினார். காப்பீட்டுத் தொகையைப் பெற, அன்ஷுல் இறந்துவிட்டதாகக் காட்ட போலி இறப்புச் சான்றிதழைப் பெற்றார்.

    பின்னர், நண்பர்களின் உதவியுடன், தான் உடலை தகனம் செய்வதாக அனைவரையும் நம்ப வைக்க போலி இறுதிச் சடங்கு செய்ய முயன்றார்.

    போலீசார் அன்ஷுலைத் தொடர்பு கொண்டபோது, அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், தனது பெயரில் பாலிசி இருப்பது கூட தெரியாது என்றும் கூறினார்.

    இதன் மூலம், கமல் சோமானி மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர். 

    • தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
    • உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை.

    தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை காலண்டரில் நாளை விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டி அறிவிறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது.
    • ஆண்களுக்கான காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி மற்றும் பிரியான்ஷு ரஜாவத் மோதினர்.

    லக்னோ:

    சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி மற்றும் பிரியான்ஷு ரஜாவத் மோதினர்.

    இந்த பரபரப்பான ஆட்டத்தில் 21-14, 21-4 என்ற செட் கணக்கில் கிடாம்பி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மஞ்சுநாத்- மன்ராஜ் ஆகியோர் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் மஞ்சுநாத் 21-18, 21-13 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

    ×