இஸ்ரேலுடன் நின்றதற்காக சிறந்த நண்பர் இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி: நெதன்யாகு

நான் எங்களுடைய சிறந்த நண்பர் இந்திய பிரதமர் மோடியுடன் பேசினேன்.இஸ்ரேலுடன் அவர் காட்டிய நிலைப்பாட்டிற்கும், உண்மைக்காக நின்றதற்கும் நன்றி தெரிவித்தேன்.
இஸ்ரேலுடன் நின்றதற்காக சிறந்த நண்பர் இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி: நெதன்யாகு
Published on

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆங்கில செய்தி சேனல் என்.டி.டி.வி.க்கு பிரத்யேக பேட்டி அளித்தார். ஈரான் தாக்குதலால் சேதம் அடைந்த கட்டிட இடிபாடுகளில் பலத்த பாதுகாப்பு காவலர்களுக்கு மத்தியில் நடந்தவாறு நெதன்யாகு கூறியதாவது:-

நான் எங்களுடைய சிறந்த நண்பர் இந்திய பிரதமர் மோடியுடன் பேசினேன். நேற்று நீண்ட நேரம் அவரிடம் பேசினேன். ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலுடன் அவர் காட்டிய நிலைப்பாட்டிற்கும், உண்மைக்காக நின்றதற்கும், இந்திய மக்களின் மகத்தான நட்புக்கும் அவருக்கு நன்றி தெரிவித்தேன்.

அவர்கள் இஸ்ரேலில் மிகவும் போற்றப்படுகிறார்கள், நேசிக்கப்படுகிறார்கள். உரையாடலின் விவரங்களுக்குள் நான் செல்லமாட்டேன். ஆனால் நான் அவருடன் பேசியுள்ளேன், மேலும் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள பல தலைவர்களுடன் பேசியுள்ளேன்.

இவ்வாறு நெதன்யாகு தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com