என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • காசாவிற்கு உதவிகளை வழங்குவதற்காக சில சிறப்பு வழிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாதுகாப்பானவை என அடையாளம் காணப்படும்
    • இங்கிலாந்து உட்பட பல நாடுகள் காசாவிற்கு அத்தியாவசியப் பொருட்களை பெரிய அளவில் நகர்த்தி வருகின்றன.

    காசாவில் பஞ்சம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. உணவு மற்றும் மருந்து காசாவிற்குள் நுழைய அனுமதிக்க மூன்று பகுதிகள் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

    காசாவில் பட்டினியால் உயிரிழநதோர் எண்ணிக்கை 128 ஆக  உயர்ந்துள்ள நிலையில் சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாக இந்த முடிவுக்கு இஸ்ரேல் தள்ளப்பட்டுள்ளது.  

    மனிதாபிமான உதவிகள் அந்தப் பகுதியை அடைய அனுமதிக்க ஒவ்வொரு நாளும் சில மணிநேரங்களுக்கு தாக்குதல்களை நிறுத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

    இந்த குறுகிய கால போர்நிறுத்தம் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளுக்குப் பொருந்தும் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேலிய அறிக்கையின்படி, அல்-மவாசி, டேயர் அல்-பலா மற்றும் காசா நகரில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இஸ்ரேல் எந்த இராணுவ நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது.

    மற்ற பகுதிகளில், வழக்கம் போல் தாக்குதல்கள் தொடரும். மறு அறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும். காசாவிற்கு உதவிகளை வழங்குவதற்காக சில சிறப்பு வழிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாதுகாப்பானவை என அடையாளம் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை தினமும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த வழித்தடங்கள் வழியாக எடுத்துச் செல்லலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    வெள்ளிக்கிழமை மனிதாபிமான உதவிகளை விமானம் மூலம் இறக்கி அனுப்ப மற்ற நாடுகளை இஸ்ரேல் அனுமதித்தது. இந்தச் சூழலில், இங்கிலாந்து உட்பட பல நாடுகள் காசாவிற்கு அத்தியாவசியப் பொருட்களை பெரிய அளவில் நகர்த்தி வருகின்றன. எகிப்திலிருந்தும் அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து தொடங்கியுள்ளது. 

    • அடுத்ததாக துல்கர் சல்மான் காந்தா என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார்.

    மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான லக்கி பாஸ்கர் படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

    அடுத்ததாக துல்கர் சல்மான் காந்தா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.

    இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு நாளை மாலை 3 மணிக்கு வெளியிட இருக்கின்றனர்.

    • நிலவின் தென்துருவத்தில் இந்தியா கால் பதித்த பகுதியை சிவசக்தி என பெயர் சூட்டினோம்
    • பாரதத்தின் எதிரிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்தோம்.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்தவர் மாமன்னன் ராஜேந்திர சோழன். இவரது பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு விழா ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா, தெற்காசியா நாடுகள் மீது படையெடுத்த ஆயிரமாவது ஆண்டு விழா, பிரகதீஸ்வரர் கோவில் கட்டுமான பணிகள் தொடக்க ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த 23-ந் தேதி தமிழக அரசு சார்பில் விழா தொடங்கப்பட்டது.

    மத்திய அரசின் தொல்லியல்துறை, கலாச்சாரத்துறை சார்பில் கடந்த 5 நாட்களாக விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. இதன் நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

    பின்னர் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றார். கோவிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலின் முக மண்டபம், அர்த்த மண்டபம், முன்மண்டபத்தை பார்வையிட்டார்.

    இதையடுத்து பிரதமர் மோடி உரையாற்றினார். விழாவில் 'வணக்கம் சோழ மண்டலம்' எனக்கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் வலிமையை வெளிப்படுத்தியது. பாரதத்தின் எதிரிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்தோம். நாம் வளர்ச்சியடைந்த தேசத்தை உருவாக்க ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

    * நிலவின் தென்துருவத்தில் இந்தியா கால் பதித்த பகுதியை சிவசக்தி என பெயர் சூட்டினோம்

    * ராஜேந்திர சோழன் புனித கங்கை நீரை எடுத்து பொன்னேரியை நிரப்பினார். காசியிலிருந்து கங்கை நீரை, மீண்டும் கொண்டு வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது

    * தமிழகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும்

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சுமார் 3 ஆயிரத்து 870 பேர் வெளியேற்றப்படுகிறார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
    • பெரும்பாலானோர் சிறப்பு திறன்கள் மற்றும் நிர்வாக திறன்களை கொண்டவர்கள்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14 ஆயிரம் ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அதிரடி நடவடிக்கையால் பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்யப்பட்டு வருகிறது. நாசாவிலும் ஏற்கனவே ஒருமுறை ஆட்குறைப்பு செய்யப்பட்டது.

    தற்போது 2-வது முறையாக பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் 20 சதவீத ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. அதாவது சுமார் 3 ஆயிரத்து 870 பேர் வெளியேற்றப்படுகிறார்கள் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

    இந்த மாத தொடக்கத்தில் டிரம்ப் நிர்வாகம் குறைந்தது 2 ஆயிரத்து 145 நாசாவின் மூத்த ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கடிதம் அனுப்பியது. அவர்களில் பெரும்பாலானோர் சிறப்பு திறன்கள் மற்றும் நிர்வாக திறன்களை கொண்டவர்கள்.

    இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், உலகின் முன்னணி விண்வெளி நிறுவனம், ஜனாதிபதி டிரம்ப் பதவியேற்ற பிறகு ஜனவரியில் வெளியிடப்பட்ட நிர்வாக உத்தரவுகளுக்கு இணங்க குறைந்தது 3 துறைகளை மூடப்போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் மீண்டும் இரண்டாம் கட்ட ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல்கள் வெளியானதால் நாசா ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். இன்னும் சில நாட்களில் 20 சதவீதம் வரை ஆட்குறைப்பு இருக்கும் என்றும், எண்ணிக்கை வேறுபடலாம் என்றும் செய்திதொடர்பு அதிகாரி ஒருவர் நேற்று கூறி உள்ளார்.

    இதற்கிடையே கடந்த 20-ந்தேதி நூற்றுக்கணக்கான நாசா ஊழியர்கள், விண்வெளி அருங்காட்சியகம் அருகே திரண்டு போராட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அளிக்கப்பட வேண்டிய கோரிக்கை மனுவிற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்தார்.
    • திருச்சியில் பிரதமரிடம் முதலமைச்சரின் கோரிக்கை மனுவை வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-ந் தேதியன்று தலை சுற்றல் காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்களின் பரிந்துரையின்படி அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. இதையடுத்து டாக்டர்களின் ஆலோசனையின்பேரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதைதொடர்ந்து, மருத்துவமனையில் இருந்தபடியே அரசு பணிகளில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

    தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியிடம், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கோரிக்கை மனு அளிக்கஆலோசனை நடத்தினார்.

    பின்னர், தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அளிக்கப்பட வேண்டிய கோரிக்கை மனுவிற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்தார்.

    அப்போது கனிமொழி எம்.பி. மற்றும் முதல்-அமைச்சரின் செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில்,"மருத்துவமனையில் இருப்பதால், பிரதமரிடம் வழங்குவதற்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமைச் செயலாளர் மூலமாக கொடுத்து அனுப்பியுள்ளேன். நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அதை பிரதமரிடம் வழங்குவார்' என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சரின் இந்த கோரிக்கை மனுவை திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

    அதில், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் ரூ.2,151.59 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    PM SHRI புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை நிபந்தனை ஆக்காமல் நிதியை விடுவிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டுக்கான ரெயில்வே திட்ட்ஙகளுக்கு உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும். மேலும், கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.



    • ஒவ்வொரு பெண்ணிடமும் அம்பிகையின் அம்சம் நிறைந்துள்ளது.
    • ஆடி பூரத்தன்று அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம்.

    ஆடி மாதம் முழுவதுமே அம்மனை வழிபடக்கூடிய மாதமாக உள்ளது. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளை, 'ஆடிப்பூரம்' என்ற பெயரில் அம்மன் ஆலயங்கள் தோறும் கொண்டாடுவார்கள். பூமியில் அவதரித்த அம்மன், ஆடி மாதத்தில் தான் பூப்படைந்ததாகவும், சூலுக்கு தயாரானதாகவும் கூறப்படுகிறது. அதை குறிப்பதாக ஆடிப்பூரம் திருவிழா நடைபெறும் 10 நாட்களும், அம்மன் தினமும் ஒரு கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவதாக நம்பிக்கை.

    ஆடிப்பூரம் அன்று தான் சித்தர்களும், யோகிகளும் தங்களுடைய தவத்தைத் தொடங்குகின்றனர் என புராணங்கள் குறிப்பிடுகின்றன. தேவிக்குரிய திருநாள்களில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் 'ஆடிப் பூரம் திருநாள்' மிகவும் சிறப்பானது. பெண்களுக்கு வளையல் காப்பு நடத்துவதுபோல, நம்மைப் படைத்த அன்னைக்கு ஆடிப்பூர நாளில் வளைகாப்பு நடத்தப்படுவது வாடிக்கை.

    இந்த நாளில் அனைத்து அம்மன் கோவில்களிலும், அம்பிகைக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபடுவார்கள். பின்னர் அம்மனை அலங்கரிக்கப் பயன்படுத்திய வளையல்கள், தரிசிக்க வந்த பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அவ்வாரு பிரசாதமாக சில வளையல்களைப் பெற்று அணிந்து கொண்டால், மனம்போல மாங்கல்யம் அமையவும், மங்கலங்கள் நிலைக்கவும் செய்யும். அதோடு, அம்பிகை தாய்மைக் கோலம் கொண்ட நாள் என்பதால் குழந்தை பாக்கியமும் நிச்சயம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது.

    ஒவ்வொரு பெண்ணிடமும் அம்பிகையின் அம்சம் நிறைந்துள்ளது. எனவே ஆடிப்பூரம் தினத்தன்று அம்பிகையின் அருள் முழுமையாக நிறைந்திருக்கும் என்பதால், எந்த பேதமும் இன்றி இயன்ற அளவு மற்ற பெண்களுக்கு வளையல்கள், குங்குமம், மஞ்சள், ரவிக்கைத் துணி, புடவை போன்ற மங்கலப் பொருட்களை வாங்கித் தர வேண்டும். அப்படி செய்தால் இல்லற வாழ்வு சிறப்பாக அமையும். தாலி பாக்கியம் சிறக்க, தாயாகும் பேறுபெற, வளமும் நலமும் பெருக, வேறு எந்த வேண்டுதல்களும் தேவையில்லை. ஆடிப்பூர நாளில் அம்மனுக்கு வளையல் வாங்கிக் கொடுத்தாலே போதுமானது. அனைத்து வளங்களையும் அம்பிகை நிச்சயம் தந்தருள்வாள்.

    ஆடி பூரத்தன்று அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம். திருமணமாகாத பெண்கள், நல்ல கணவன் துணையாக அமைய வேண்டும் என்றும், தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டால், அந்த வரத்தை ஆதிசக்தியான அன்னை அருள்வதாக நம்பிக்கை. இந்த அற்புத திருநாளில், பலர் மஞ்சள் தாலி கட்டிக் கொள்வதும் உண்டு.

    ஆடி மாதத்தில், பூரம் நட்சத்திரம் உச்சமாக இருக்கும். ஆடிப்பூரம் அன்று சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படும் அம்மன் ஆலங்களுக்குச் சென்று வழிபட்டால், கேட்ட வரம் கிடைக்கும். ஆரோக்கியமும், செல்வ செழிப்பும் உண்டாகும்.

    ஆடிப்பூரம் அன்று ஆலயத்திற்குச் சென்று அம்மனை வழிபட இயலாதவர்கள், தங்கள் வீடுகளில் பூஜை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு, பட்டு வஸ்திரம், வளையல், பூக்கள் படைத்து வணங்கலாம். இளம்பெண்கள், திருமணமான பெண்களுக்கு வளையல் கொடுத்தால் நம்முடைய வீட்டிலும் வளைகாப்பு நடைபெறும் என்பது நம்பிக்கையாகும். அன்னைக்கு பிரியமான பிரசாதமாக பானகம், நீர் மோர், சர்க்கரைப் பொங்கல், கூழ் ஆகியவற்றை படைத்து வேண்டிக்கொண்டால் சகலவிதமான நன்மைகளையும் பெறலாம்.

    • இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
    • ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் சதமடித்து அசத்தினர்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது.

    முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து, ஆடிய இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்து ஆல் அவுட்ட்டானது.

    311 ரன்கள் பின் தங்கிய நிலையில் களமிறங்கிய நான்காம் நாள் முடிவில் இந்தியா 2வது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில், இந்திய கேப்டன் சுப்மன் கில் நடப்பு தொடரில் இதுவரை 3 சதம், ஒரு அரை சதம் உள்பட 697 ரன்கள் சேர்த்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்ற சாதனை பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த விராட் கோலியை (2016-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 655 ரன்) பின்னுக்குத் தள்ளினார்.

    1978-79-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சுனில் கவாஸ்கர் 732 ரன்கள் எடுத்ததே இந்திய கேப்டன் ஒருவரின் அதிகபட்சமாகும். அவரது சாதனையும் சுப்மன் கில் தகர்த்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்திய தேர்தல் கமிஷன் ஒரு ஒருதலைபட்சமான நடுவராக செயல்படுகிறது.
    • அதனால்தான் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி அடைந்து வருகிறது என்றார் ராகுல் காந்தி.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கூறியதாவது:

    தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமான நடுவர் போல செயல்படுவதே காங்கிரசின் தேர்தல் தோல்விகளுக்கு காரணம்.

    காங்கிரஸ் தொண்டர்களுடன் கட்சி மேலிடம் உறுதியாக இருக்கும். தேர்தலை முன்னிட்டு மக்களின் பிரச்சனைகளைக் கையில் எடுத்து போராடுங்கள்.

    சட்டசபை தேர்தல் உள்பட பல்வேறு தேர்தல்களுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது மாவட்ட மற்றும் நகர காங்கிரஸ் தலைவர்களிடம் நிச்சயம் கருத்து கேட்கப்படும்.

    கிரிக்கெட்டில் நீங்கள் மீண்டும் மீண்டும் அவுட் ஆகும்போது நீங்களே உங்களை சந்தேகிக்கலாம். அப்போது நீங்கள் அவுட் ஆவது உங்கள் தவறல்ல, மாறாக நடுவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதே காரணம் என்பதை கண்டறியலாம்.

    அதைப்போலவே, இந்திய தேர்தல் ஆணையம் ஒரு ஒருதலைபட்சமான நடுவராக செயல்படுகிறது. அதனால்தான் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோல்வி அடைந்து வருகிறது. அதை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் கட்டுப்படுத்துகின்றன.

    தேர்தல் ஆணையத்தின் சந்தேகத்துக்குரிய வாக்காளர் பட்டியல் காரணமாகவே 2017-ம் ஆண்டு குஜராத் தேர்தலில் நாம் தோல்வி அடைந்தோம்.

    இந்த நாடு ஒரு கோவில் போல. அதில் எல்லாரும் வந்து பிரார்த்தனை செய்யலாம். ஆனால் பிரசாதம் யாருக்கு, என்ன கிடைக்க வேண்டும் என்பதை பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகின்றன என தெரிவித்தார்.

    • இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
    • வளர்ச்சி அடைந்த பாரதத்தையும், வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டையும் உருவாக்குவோம்.

    தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி ரூ.4,900 பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, வணக்கம் என்று தமிழில் சொல்லி தனது சிறப்புரையை பிரதமர் மோடி தொடங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இன்று கார்கில் வெற்றித்திருநாள், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு தலை வணங்குகிறேன்.

    4 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணத்திற்கு பிறகு புன்னிய பூமியில் கால் பதிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது.

    திருச்செந்தூர் முருகன், ராமேஸ்வரம் சிவனின் ஆசீர்வாதத்துடன் தமிழ்நாட்டின் திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன்.

    திருச்செந்தூர் முருகன் துணையுடன் தமிழ்நாட்டில் புதிய தொழில் அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

    வளர்ச்சி அடைந்த பாரதத்தையும், வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டையும் உருவாக்குவோம்.

    அனைத்து துறைகளிலும் இந்தியா தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. உள்கட்டமைப்பு, எரிசக்தி எந்தவொரு மாநிலத்திற்கும் முதுகெலும்பு போன்றது.

    தமிழக மக்கள் பல நூற்றாண்டுகளாக தன்னிறைவு பெற்ற பாரத்ததிற்காக உழைத்து வருகின்றனர். சக்திவாய்ந்த இந்தியாவிற்கு தூத்துக்குடியின் பங்களிப்பு அதிகம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இட்லி கடை படம் வரும் அக்டோபர் மாதம் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது.
    • ‘இட்லி கடை’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ளது.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் ஆடியோ உரிமையை சரிகம இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

    'இட்லி கடை' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 27-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த பாடலுக்காக தனுஷ் உடன் சேர்ந்து இசையமைக்கும் வீடியோவை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் குற்றவாளிகளில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
    • தாக்குதலுக்கு "ஜெய்ஷ் அல்-அடல்" என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது.

    தென்கிழக்கு ஈரானில் இன்று நீதிமன்றக் கட்டடத்தின் மீது மரம் நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் கையெறி குண்டு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். மேலும், 20 பேர் காயமடைந்தனர்.

    தெற்கு மாகாணமான சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜாஹெதான் நகரில் உள்ள நீதிமன்ற கட்டடத்தில் இந்த தாக்குதல் நடந்தது. பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் குற்றவாளிகளில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

    தாக்குதலுக்கு "ஜெய்ஷ் அல்-அடல்" என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றுள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இந்த மாகாணம் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைகளை ஒட்டியுள்ளது. இங்கு தீவிரவாதக் குழுக்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஈரானிய பாதுகாப்புப் படையினரிடையே அடிக்கடி மோதல்கள் நடைபெறுகின்றன. 

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது.
    • இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்சம் இரு அணிகளும் 3 போட்டிகளில் நேருக்கு நேர் மோதலாம்

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 தொடங்கி செப்டம்பர் 28 வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வி அறிவித்துள்ளார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் A-வில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் நாடுகள் இடம்பெற்றுள்ளன.

    குரூப் B-ல் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்தியா - பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ல் நடைபெறுகிறது. குரூப் பிரிவில் முன்னேறி அரையிறுதி இறுதி போட்டிக்கு இந்தியா, பாகிஸ்தான் அணிகள் சென்றால் 2 அணிகளும் மீண்டும் மொத வாய்ப்புள்ளது. அவ்வகையில் 3 முறை இரு அணிகளும் நேருக்கு நேர் மொத வாய்ப்புள்ளது. 

    ×