search icon
என் மலர்tooltip icon
    • கடுமையான வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார்.
    • வீட்டில் தனியாக இருந்தபோது மதுமிதா திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி மாரி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் மதுமிதா (வயது16). இவர் கடுமையான வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது மதுமிதா திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே திம்மசந்திரா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாறன். இவரது மகன் சேட்டு என்கிற வெங்கடேஷ் (வயது27). கூலித்தொழிலாளியான இவருக்கு மது குடிப்பழக்கம் இருந்து வந்தது.

    இதனால் சேட்டுவுக்கு அவரது மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதேபோன்று தேன்கனிக்கோட்டை ஜெரகலட்டி பகுதியைச் சேர்ந்தவர் சூடப்பா (71). கூலித்தொழிலாளியான இவருக்கு மதுகுடிப்பழக்கம் இருப்பதால், குடும்பதகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுைடந்த காணப்பட்ட சூடப்பா நேற்று அவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    • மாணவர்கள் 10766 பேரும், மாணவிகள் 11679 பேரும் என மொத்தம் 22445 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • 84 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    தமிழகம் முழுவதும் இன்று எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகின.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 13,467 பேரும், மாணவிகள் 12,886 என மொத்தம் 26293 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்.

    இதில் மாணவர்கள் 10766 பேரும், மாணவிகள் 11679 பேரும் என மொத்தம் 22445 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 85.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாவட்டத்தில் கடந்த ஆண்டு 89.48 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 85.36 பேர் சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பதால் கடந்த ஆண்டைவிட 4.12 சதவீதம் பேர் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஓசூரில் உள்ள 26 பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சியும், கிருஷ்ணகிரியில் உள்ள 58 பள்ளிகளில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சியும் என மாவட்டத்தில் உள்ள 84 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    • வெள்ளையம்மாள் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோத எலிமருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த வீரப்பநாய்க்க ன்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது60). இவருக்கு பக்கவாதம் நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த காணப்பட்ட வெள்ளையம்மாள் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோத எலிமருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சகை்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த அரூர் போலீசார் உடனே அங்கு விரைந்து வெள்ளையம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோன்று தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தும்பலஅள்ளி கிராமத்தில் உள்ள இலங்கை அகதி முகாமைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது37). டிரைவர். இவரது மனைவி சிந்தினி (36).

    கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த காணப்பட்ட ராஜ்குமார் கடந்த 16-ந் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனே தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பதறிப்போன தங்கராஜ் தனது மகனை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தார்.
    • எங்கும் தேடியும் கிடைக்காததால் ஜெயராஜ் மாயமானது தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ராசுவீதி துளுக்கானி மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் ஜெயராஜ் (வயது19). இவர் கடந்த மாதம் 28-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றார். ஆனால் வீடு திரும்பி வரவில்லை. இதனால் பதறிப்போன தங்கராஜ் தனது மகனை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தார்.

    எங்கும் தேடியும் கிடைக்காததால் ஜெயராஜ் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து தங்கராஜ் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜெயராஜை தேடிவருகின்றனர்.

    • சுபாஷ் (29), சுரேஷ் (40) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகளையும், ரூ.1600-யையும் பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்னஎலத்தகிரி பகுதியில் சிலர் சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது36), சண்முகம் (40), செந்தில் (38), நந்திஷ் (31), சுபாஷ் (29), சுரேஷ் (40) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகளையும், ரூ.1600-யையும் பறிமுதல் செய்தனர்.

    • கிரஸர் செல்லும் வழியில் உள்ள குளத்தில் துணிகளை துவைப்பதற்காக சென்றார்.
    • ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த நாகிரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வஜ்ராரெட்டி (வயது50).

    கூலித்தொழிலாளியான இவர் நேற்று அன்னியாலம்-சீனிவாசா கிரஸர் செல்லும் வழியில் உள்ள குளத்தில் துணிகளை துவைப்பதற்காக சென்றார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து வஜ்ரா ரெட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • 19663 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
    • மாவட்டத்தில் மொத்த தேர்ச்சி விகிதம் 89.46 சதவீதம் ஆகும்.

    தருமபுரி,

    தமிழகம் முழுவதும் இன்று 10-ம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகின. தருமபுரி மாவட்டத்தில் 11265 மாணவர்கள், 10715 மாணவிகள் என மொத்தம் 21980 மாணவ மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார்கள். இவர்களில் 9759 மாணவர்கள், 9904 மாணவிகள் என மொத்தம் 19663 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 86.63 சதவீதமும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 92.43. சதவீதமும் என மாவட்டத்தில் மொத்த தேர்ச்சி விகிதம் 89.46 சதவீதம் ஆகும்.

    • வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார்.
    • இதனால் பதறிப்போன பெற்றோர் உடனே அவரை நண்பர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வெங்கடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஷாகுல்அமீது. இவரது மகள் ஹர்வின்பானு (வயது 18). இவர் பொம்மிடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார். ஹர்வின்பானு நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். ஆனால், அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் உடனே அவரை நண்பர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தனர். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் ஹர்வின்பானு மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து சாகுல்அமீது பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடிவருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோன்று காரிமங்கலம் அருகே புதூர் குடியானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் இந்திராணி (18). இவர் பாலக்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார்.

    இவர் கடந்த 15-ந் தேதி வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால், அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பிவரவில்ைல. இதுகுறித்து மாணவியின் தாய் தமிழ்செல்வி காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடிவருகின்றனர்.

    • உள்ளே செல்லும் பாதை, வெளியே செல்லும் பாதை அமைய உள்ள இடங்களை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • நேர்முக உதவியாளர் வெங்கடேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஜூன் 3-வது வாரத்தில் 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மா அரங்குகள், அரசு துறை அரங்குகள், பொழுது போக்கு அம்சங்கள், விழா அரங்கம் அமைக்கப்பட உள்ள இடம், மாங்கனி கண்காட்சிக்கு பொதுமக்கள் உள்ளே செல்லும் பாதை, வெளியே செல்லும் பாதை அமைய உள்ள இடங்களை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது உதவி கலெக்டர் பாபு, தோட்ட கலைத்துறை இணை இயக்குனர் பூபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • பணம் பெறுவதற்கு பணியாளர்கள் ஒருவருக்கு தலா 500 ரூபாய் வரை வாங்குவதாக குற்றசாட்டு தெரிவித்தனர்.
    • வட்டார வளர்ச்சி அலுவலர்கள் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க கூடாது என கூறி கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய குழு தலைவர் உதயா தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன் வரவு, செலவினங்கள் குறித்து அறிக்கை வாசிக்கப்பட்டது.

    அப்போது ஒரு சில பணிகளை செய்யாமலேயே, நிதி எடுப்பதாக மன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

    மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்றிய பொது நிதியிலிருந்து சமையல் கூடம் கட்டுவதற்கு 4 இடங்களுக்கு ஒன்றிய குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாமல், ஒப்பந்தம் விடப்பட்டதாக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

    மேலும் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் இருப்பினும் அந்த பணிகளுக்கு அதிகாரிகள் ஒப்பந்த விடாமல், ஒன்றிய குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு தெரியாமல் நள்ளிரவில் ஒப்பந்தம் வைத்துள்ளனர்.

    அதனை முதலில் ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தனர். அப்பொழுது மன்றத்தில் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களிடையே பெரும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    கடத்தூர் ஒன்றிய பகுதிகளில் கிராம ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் செய்யப்படுகின்ற வேலைகளுக்கு பணியாளர்களை பயன்படுத்தாமல், ஜே.சி.பி. இயந்திரங்களைக் கொண்டு வேலை செய்துவிட்டு, பிறகு பணியாளர்கள் செய்தது போல் ஊராட்சி நிதியில் பணம் பெறுவதற்கு பணியாளர்கள் ஒருவருக்கு தலா 500 ரூபாய் வரை வாங்குவதாக குற்றசாட்டு தெரிவித்தனர்.

    மேலும் பணம் வாங்குவது குறித்து யாரிட மாவது முறையிட்டாலும் அடுத்த நாள் வேலை வழங்க முடியாது என்று தெரிவிப்பதாகவும், மேலும் இதை எங்கு வேண்டுமென்றாலும் புகார் தெரிவிக்கலாம்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரைக்கும் பணம் கொடுப்பதாக வசூல் செய்பவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    ஒன்றிய குழு உறுப்பினர் நேரடியாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலையிலும் பகிரங்கமாக தெரிவித்தனர்.

    முறைகேடுகள் குறித்து உறுப்பினர்கள் தெரிவித்ததால், அங்கிருந்த செய்தியாளர்களை படம் எடுக்கக் கூடாது என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

    இதனை கண்டித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க கூடாது என கூறி கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

    சிறிது நேரம் கழித்து நடைபெற்ற கூட்டத்தில், நள்ளிரவில் விடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், அந்த ஒப்பந்தம் வழங்கிய அதிகாரியை நீதிமன்றம் வரைக்கும் கொண்டு செல்வோம்.

    மேலும் மக்களுக்கு சேவை செய்ய வந்த தங்களுக்கு தெரியாமல், பணிகளை மேற்கொண்டதால் இங்கே கொடுக்கின்ற டீ குடித்தால் கூட அது மக்களுக்கு செய்கின்ற துரோகம் என வாங்க கவுன்சிலர்கள் மறுத்து விட்டனர்.

    மக்களுக்காக அரசு செய்யும் திட்டப்பணிகள், செய்யப்பட உள்ள வேலைகள், தேவையான அடிப்படை தேவைகள், குறைகள் என செய்தி யாளர்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர். அவர்கள் செய்தி எடுப்பதை தடுக்கக் கூடாது. மற்றும் இனிவரும் கூட்டங்களில் அவர்களுக்கு அனுமதி அளித்து இருக்கைகள் வழங்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கவுன்சிலர்கள் பேசினர்.

    அதிகாரிகள் மற்றும் சில பஞ்சாயத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரனை நடத்த வேண்டும் என கூட்டத்தில் பகிரங்கமாக புகார் தெரிவித்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
    • மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்துள்ள மலையாண்டஅள்ளி புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜோதி (வயது39).இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேர்முக தேர்வில் கலந்து கொண்டு தேர்வாகினர்.
    • தேர்வான மாணவர் களுக்கு பணி நியமன ஆணைகளை, கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் வழங்கி, மாணவர் களை பாராட்டினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு கணினி அறிவியல் படித்த மாணவர்க ளுக்கு கெட்ஸ்டெர் சாப்ட்வேர் என்ற தனியார் நிறுவனம் வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது. இதில், 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேர்முக தேர்வில் கலந்து கொண்டு தேர்வாகினர்.

    தேர்வான மாணவர் களுக்கு பணி நியமன ஆணைகளை, கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் வழங்கி, மாணவர் களை பாரட்டினார்.

    மேலும்,கல்லூரியின் மின்னியல் துறை தலைவர் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலர் பாலாஜி பிரகாஷ் மற்றும் துறை தலைவர்கள் புவியரசு, நாகராஜன், திவாகர் ஆகியோர் இம்முகாமில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    ×