என் மலர்
உள்ளூர் செய்திகள்

10-ம் வகுப்பு தேர்வு முடிவு: தருமபுரி மாவட்டத்தில் 89.46 சதவீதம் பேர் தேர்ச்சி
- 19663 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
- மாவட்டத்தில் மொத்த தேர்ச்சி விகிதம் 89.46 சதவீதம் ஆகும்.
தருமபுரி,
தமிழகம் முழுவதும் இன்று 10-ம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகின. தருமபுரி மாவட்டத்தில் 11265 மாணவர்கள், 10715 மாணவிகள் என மொத்தம் 21980 மாணவ மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார்கள். இவர்களில் 9759 மாணவர்கள், 9904 மாணவிகள் என மொத்தம் 19663 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 86.63 சதவீதமும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 92.43. சதவீதமும் என மாவட்டத்தில் மொத்த தேர்ச்சி விகிதம் 89.46 சதவீதம் ஆகும்.
Next Story






