என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.
கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி
- உள்ளே செல்லும் பாதை, வெளியே செல்லும் பாதை அமைய உள்ள இடங்களை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- நேர்முக உதவியாளர் வெங்கடேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஜூன் 3-வது வாரத்தில் 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மா அரங்குகள், அரசு துறை அரங்குகள், பொழுது போக்கு அம்சங்கள், விழா அரங்கம் அமைக்கப்பட உள்ள இடம், மாங்கனி கண்காட்சிக்கு பொதுமக்கள் உள்ளே செல்லும் பாதை, வெளியே செல்லும் பாதை அமைய உள்ள இடங்களை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது உதவி கலெக்டர் பாபு, தோட்ட கலைத்துறை இணை இயக்குனர் பூபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.






