search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றசாட்டு"

    • பணம் பெறுவதற்கு பணியாளர்கள் ஒருவருக்கு தலா 500 ரூபாய் வரை வாங்குவதாக குற்றசாட்டு தெரிவித்தனர்.
    • வட்டார வளர்ச்சி அலுவலர்கள் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க கூடாது என கூறி கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய குழு தலைவர் உதயா தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன் வரவு, செலவினங்கள் குறித்து அறிக்கை வாசிக்கப்பட்டது.

    அப்போது ஒரு சில பணிகளை செய்யாமலேயே, நிதி எடுப்பதாக மன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

    மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்றிய பொது நிதியிலிருந்து சமையல் கூடம் கட்டுவதற்கு 4 இடங்களுக்கு ஒன்றிய குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாமல், ஒப்பந்தம் விடப்பட்டதாக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

    மேலும் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் இருப்பினும் அந்த பணிகளுக்கு அதிகாரிகள் ஒப்பந்த விடாமல், ஒன்றிய குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு தெரியாமல் நள்ளிரவில் ஒப்பந்தம் வைத்துள்ளனர்.

    அதனை முதலில் ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தனர். அப்பொழுது மன்றத்தில் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களிடையே பெரும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    கடத்தூர் ஒன்றிய பகுதிகளில் கிராம ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் செய்யப்படுகின்ற வேலைகளுக்கு பணியாளர்களை பயன்படுத்தாமல், ஜே.சி.பி. இயந்திரங்களைக் கொண்டு வேலை செய்துவிட்டு, பிறகு பணியாளர்கள் செய்தது போல் ஊராட்சி நிதியில் பணம் பெறுவதற்கு பணியாளர்கள் ஒருவருக்கு தலா 500 ரூபாய் வரை வாங்குவதாக குற்றசாட்டு தெரிவித்தனர்.

    மேலும் பணம் வாங்குவது குறித்து யாரிட மாவது முறையிட்டாலும் அடுத்த நாள் வேலை வழங்க முடியாது என்று தெரிவிப்பதாகவும், மேலும் இதை எங்கு வேண்டுமென்றாலும் புகார் தெரிவிக்கலாம்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரைக்கும் பணம் கொடுப்பதாக வசூல் செய்பவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    ஒன்றிய குழு உறுப்பினர் நேரடியாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலையிலும் பகிரங்கமாக தெரிவித்தனர்.

    முறைகேடுகள் குறித்து உறுப்பினர்கள் தெரிவித்ததால், அங்கிருந்த செய்தியாளர்களை படம் எடுக்கக் கூடாது என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

    இதனை கண்டித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க கூடாது என கூறி கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

    சிறிது நேரம் கழித்து நடைபெற்ற கூட்டத்தில், நள்ளிரவில் விடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், அந்த ஒப்பந்தம் வழங்கிய அதிகாரியை நீதிமன்றம் வரைக்கும் கொண்டு செல்வோம்.

    மேலும் மக்களுக்கு சேவை செய்ய வந்த தங்களுக்கு தெரியாமல், பணிகளை மேற்கொண்டதால் இங்கே கொடுக்கின்ற டீ குடித்தால் கூட அது மக்களுக்கு செய்கின்ற துரோகம் என வாங்க கவுன்சிலர்கள் மறுத்து விட்டனர்.

    மக்களுக்காக அரசு செய்யும் திட்டப்பணிகள், செய்யப்பட உள்ள வேலைகள், தேவையான அடிப்படை தேவைகள், குறைகள் என செய்தி யாளர்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர். அவர்கள் செய்தி எடுப்பதை தடுக்கக் கூடாது. மற்றும் இனிவரும் கூட்டங்களில் அவர்களுக்கு அனுமதி அளித்து இருக்கைகள் வழங்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கவுன்சிலர்கள் பேசினர்.

    அதிகாரிகள் மற்றும் சில பஞ்சாயத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரனை நடத்த வேண்டும் என கூட்டத்தில் பகிரங்கமாக புகார் தெரிவித்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பிளஸ்-2 தேர்வை நிர்வாக குளறுபடியால் 50 ஆயிரம் பேர் எழுதவில்லை.
    • அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டினார்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள மதுரை மேற்கு (தெற்கு), அலங்கா நல்லூர், வாடிப்பட்டி ஆகிய ஒன்றிய அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி படம் பொறிக்கப்பட்ட, புதிய உறுப்பினர்கள் அடையாள அட்டையை, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், மாவட்ட செயலாளருமான

    ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், திருப்பதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, நிர்வாகிகள் அரியூர் ராதா கிருஷ்ணன், ரவிச்சந்திரன், காளிதாஸ், கொரியர் கணேசன், அசோக், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    தமிழகத்தின் நிர்வாக குளறுபடியால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்வில் ஹால் டிக்கெட் வழங்கியும், 50 ஆயிரம் பேர் தமிழ் தேர்வை எழுதவில்லை. தமிழ் மொழி காப்போம், தமிழை காப்போம் என்று கூறியவர்கள் இந்த அவல நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.

    தகவல் தொழில்நுட்பத் துறையில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட திட்டங்களை எல்லாம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் எடப்பாடியார் செய்த சாதனைகளை மறைத்து கருணாநிதி காலத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்டதாக முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.

    டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலமாக 2020-ம் ஆண்டு மத்திய அரசிடம் தங்க விருதை எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு பெற்று தந்தார்.

    கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, ஓசூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில், 1,321ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.664 கோடி முதலீட்டில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கினார். இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், ஒரு கோடி பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு களும் உருவாக்கி கொடுக்கப்பட்டது.

    கொரோனா காலகட்ட ங்களில் வொர்க் ப்ரம் ஹோம் என்பதை செயல்படுத்தினார். அது போல் வேலைவாய்ப்பு, கல்வி, வர்த்தகம் போன்றவற்றில் ஆன்லைன் வர்த்தகத்தை செயல்ப டுத்தினார்.

    அது மட்டுமல்ல அ.தி.மு.க. 51 ஆண்டுகால வரலாற்றில் 31 ஆண்டுகள் கால ஆட்சியில் தான் தகவல்தொழில்நுட்ப கட்டமைப்பில் 100 சதவீதம் உள் கட்டமைப்பு அடிப்படை வசதிகளை உருவாக்க ப்பட்டது. அந்த சாதனைகள் எல்லாம் முதல்-அமைச்சர் மறைத்து விட்டார்.

    நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் அரிசி மிகவும் தரமற்றதாக இருக்கிறது. கால்நடைகளுக்கு கூட வழங்க முடியாமல் இருக்கிறது. இதுகுறித்து என்னிடம் தெரிவித்தார்கள். ஆனால் அரசு மெத்தனப்போக்கு காட்டி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×