10-ம் வகுப்பு தேர்வு முடிவு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 85.36 சதவீதம் தேர்ச்சி

மாணவர்கள் 10766 பேரும், மாணவிகள் 11679 பேரும் என மொத்தம் 22445 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 84 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10-ம் வகுப்பு தேர்வு முடிவு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 85.36 சதவீதம் தேர்ச்சி
Published on

கிருஷ்ணகிரி,

தமிழகம் முழுவதும் இன்று எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகின.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 13,467 பேரும், மாணவிகள் 12,886 என மொத்தம் 26293 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்.

இதில் மாணவர்கள் 10766 பேரும், மாணவிகள் 11679 பேரும் என மொத்தம் 22445 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 85.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த ஆண்டு 89.48 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 85.36 பேர் சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பதால் கடந்த ஆண்டைவிட 4.12 சதவீதம் பேர் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஓசூரில் உள்ள 26 பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சியும், கிருஷ்ணகிரியில் உள்ள 58 பள்ளிகளில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சியும் என மாவட்டத்தில் உள்ள 84 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com