செய்திகள்

மக்கள் பற்றி மோடிக்கு கவலை கிடையாது- சரத்குமார் குற்றச்சாட்டு

Published On 2018-11-25 20:04 GMT   |   Update On 2018-11-25 20:04 GMT
உள்நாட்டு பிரச்சினைகளுக்கு போக மாட்டார். மக்கள் பற்றி மோடிக்கு கவலை கிடையாது என சரத்குமார் குற்றம் சாட்டினார். #sarathkumar #gajacyclone #pmmodi
ஆலந்தூர்:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரான நடிகர் சரத்குமார், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு வந்துள்ளேன். ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நான் இன்னும் ஆய்வு செய்யவில்லை. நாகப்பட்டினம், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) நேரில் சென்று மக்களை சந்திக்க உள்ளேன்.

மத்திய ஆய்வுக்குழு இரவு நேரத்தில் எப்படி ஆய்வு செய்கிறார்கள்? என்று தெரியவில்லை. பகல் நேரத்தில் சென்று ஆய்வு செய்து அங்கு என்ன நடந்து உள்ளது என அறியவேண்டும். அதிகாரிகள் அங்குதான் தொடர்ந்து பணியாற்றுகிறார்கள். அவர்களிடமும் கேட்கவேண்டும். மக்களையும் சந்தித்து பேசவேண்டும். உண்மை நிலவரத்தை புரிந்த ஆய்வாக இருக்கவேண்டும்.

பிரதமர் மோடி, தமிழகம் உள்பட உள்நாட்டில் நடக்கும் எந்த பிரச்சினைகளுக்கும் போக மாட்டார். அவர் வெளிநாட்டுக்குத்தான் போவார். அதிகாரிகள் எல்லாம் பார்த்து கொள்வார்கள். மக்கள் பற்றி அவருக்கு கவலை கிடையாது.

சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சரியில்லை என்று முதன் முதலில் கூறினேன். பாரம்பரியத்துடன் ஆகம விதியுடன் உருவாக்கப்பட்ட கோவில். நம்பிக்கையின் அடிப்படையில் பல ஆண்டுகளாக இருந்து வருவதால் அதை சீர்குலைக்க கூடாது. அங்கு நடக்கும் போராட்டத்தை பார்க்கும் போது மக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அந்த தீர்ப்புக்கு ஆதரவு இல்லை என்று தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #sarathkumar #gajacyclone #pmmodi
Tags:    

Similar News