search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்பரீஷ்"

    பிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கத்தில் உருவாகி இருக்கும் குருஷேத்திரா படத்தின் டீசர் வெளியாகி இருக்கும் நிலையில், சினேகா இந்த படத்தில் திரவுபதியாக நடித்திருக்கிறார்.
    அர்ஜுன் கர்ணனாகவும், சினேகா திரவுபதியாகவும் நடித்துள்ள குருஷேத்திரா என்ற கன்னட திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மகாபாரத புராணத்தை அடிப்படையாக கொண்ட மெகா பட்ஜெட் படம் இது. 

    துரியோதணனை கதாநாயகனாக காட்டும் இந்த படத்தில் தர்‌ஷன் அந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் கர்ணனாகவும், சினேகா திரவுபதியாகவும், வி.ரவிச்சந்திரன் கிருஷ்ணராகவும், அம்பரீஷ் பீஷ்மராகவும், சோனு சூத் அர்ஜுனனாகவும் நடித்துள்ளனர். நிகில் குமார், பி.ரவி ஷங்கர், ஹரிப்பிரியபா, பாரதி விஷ்ணுவர்தன், மேக்னா ராஜ், பிரக்யா ஜெய்ஸ்வால், ரம்யா நம்பீசன், அனசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


     
    பிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கியிருக்கும் இந்த படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

    எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் எனது மகன் அபிஷேக் கவுடா, நடிகர்கள் தர்ஷன், யஷ் ஆகியோர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்வதாக நடிகை சுமலதா குற்றம் சாட்டியுள்ளார். #ActressSumalatha #Mandya
    மண்டியா :

    கர்நாடக மாநிலம் மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சுயேச்சையாக நடிகை சுமலதா அம்பரீஷ் களமிறங்கியுள்ளார். இந்த நிலையில் மண்டியாவில் பிரசாரம் செய்த நடிகை சுமலதா பேசியதாவது:-

    எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் எனது மகன் அபிஷேக் கவுடா, நடிகர்கள் தர்ஷன், யஷ் ஆகியோரை அச்சுறுத்தும் வகையில் குமாரசாமி பேசி வருகிறார். எங்கள் மீது ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் எத்தகைய தாக்குதலும் நடத்த தயாராக உள்ளனர்.

    மேலும் எனது உயிருக்கும், எனது குடும்பத்தினருக்கும், நடிகர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மேலும் இறுதி பிரசார நாளான 16-ந் தேதி என் மீது கல்வீசி தாக்குதல் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். தனது மகன் நிகில் தேர்தலில் தோற்றுவிடுவார் என்ற பயத்தில் குமாரசாமி எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தி வருகிறார். எனவே எனது உயிருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #ActressSumalatha #Mandya 
    மண்டியா மக்களை ஏமாற்ற ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது என்று நடிகை சுமலதாவை நிகில்குமாரசாமி மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். #ParliamentElection #MandyaConstituency #NikhilKumaraswamy
    ஹலகூர் :

    பாராளுமன்ற தேர்தலை கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சி கூட்டணி அமைத்து எதிர்கொள்கிறது. இந்த கூட்டணியில், மண்டியா தொகுதி ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். இதே தொகுதியில் நடிகை சுமலதா காங்கிரஸ் சார்பில் போட்டியிட டிக்கெட் கேட்டார். ஆனால் கூட்டணியில் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கியதால் அதிருப்தி அடைந்த சுமலதா சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

    இதனால் நடிகை சுமலதா, நிகில் குமாரசாமி இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் மண்டியாவில் சூறாவளி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா கரடகெரே கிராமத்தில்நிகில் குமாரசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

    விவசாயிகள் தான் ஹீரோக்கள்

    நான் எந்த சுயநலத்திற்காகவும் இங்கு போட்டியிட வரவில்லை. எனது தாத்தா தேவேகவுடா, தந்தை குமாரசாமி வழியில் மக்கள் சேவை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன். அதனால் தான் மண்டியா தொகுதியில் போட்டியிடுகிறேன்.

    மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் ஜனதாதளம்(எஸ்) கட்சி வெற்றி பெற்றுள்ளது. மண்டியா மாவட்டத்தை பற்றிய அறிவு எங்களிடம் இருக்கிறது. எனவே என்னை உங்கள் வீட்டுபிள்ளை என நினைத்து ஆசிர்வதித்து தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும். விவசாயிகள் தான் நமது ஹீரோக்கள். தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற இடமெல்லாம் திரண்டு வந்து விவசாயிகள் என்னை உற்சாகமாக வரவேற்றனர்.

    என்னை தோற்கடிக்க எதிரிகள் தந்திரங்களை கையாளுகிறார்கள். அந்த கூட்டம் மண்டியா மாவட்ட மக்களை ஏமாற்ற புறப்பட்டுள்ளனர். எந்த காரணத்தை கொண்டும் அவர்களுக்கு நீங்கள் (மக்கள்) ஆதரவு கொடுக்காதீர்கள். (அதாவது நடிகை சுமலதாவை தான் நிகில்குமாரசாமி மறைமுகமாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.)

    இன்று (அதாவது நேற்று) தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பு தடை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஆனால் இதுபோன்ற கீழ்த்தரமான அரசியலை தேவேகவுடா குடும்பத்தினர் செய்ததில்லை. செய்யமாட்டோம். போராடி வெற்றி பெறுவேனே தவிர, கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடமாட்டேன்.

    யார் குற்றச்சாட்டு கூறுகிறார்களோ, அவர்களே தொலைக்காட்சி ஒளிபரப்பை தடை செய்துவிட்டு எங்கள் மீது ஏன் குற்றம்சாட்டக் கூடாது?. எனவே அதை நீங்கள் சிந்தித்து பாருங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக அந்த கிராமத்தில் உள்ள ஆஞ்சநேய சாமி கோவிலில் நிகில் குமாரசாமி சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் மந்திரி டி.சி.தம்மண்ணா உள்பட பலர் இருந்தனர். #ParliamentElection #MandyaConstituency #NikhilKumaraswamy 
    விவசாயிகளுக்காக மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தவர் அம்பரீஷ் என்று சுமலதா ஆவேசமாக கூறியுள்ளார். #Sumalatha #MandyaConstituency
    பெங்களூரு :

    நடிகை சுமலதா, மாண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று மாண்டியா கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மஞ்சுஸ்ரீயிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் நடிகர் தர்ஷன், யஷ் உள்பட கன்னட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    அதன் பிறகு மாண்டியா சில்வர் ஜூப்ளி பூங்காவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகை சுமலதா கலந்துகொண்டு பேசியதாவது:-

    நான் இன்று (அதாவது நேற்று) வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். அரசியலுக்கு வர வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருக்கவில்லை. ஆனால் எனது கணவர் மாண்டியாவுக்கு செய்ய வேண்டிய பணிகளில் இன்னும் சிலவற்றை விட்டுச் சென்றுள்ளார். அது என்ன என்பது எனக்கு தெரியும்.

    அந்த பணிகளையும், அம்பரீசின் கனவுகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரசியலுக்கு வந்துள்ளேன். நான் இங்கு வெற்றி பெற்றுவிட்டால், வெளிநாட்டுக்கு சென்றுவிடுவேன் என்றெல்லாம் சொல்கிறார்கள்.

    நான் ஏற்கனவே எல்லா நாடுகளுக்கும் சென்று வந்துவிட்டேன். நான் கன்னடம் உள்பட 5 மொழி படங்களில் நடித்துள்ளேன். எனக்கு அதில் இருந்து போதுமான அளவுக்கு புகழ் கிடைத்துள்ளது. அதனால் அரசியலுக்கு வந்து தான் புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை.

    மாண்டியா மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்பது தான் எனது நோக்கம். நான் மாண்டியாவில் கிராமம், கிராமமாக சென்று மக்களிடம் கருத்துகளை கேட்டேன். அவர்கள், நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறினார்கள். அதை ஏற்று நான், காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசினேன்.

    மக்களின் விருப்பப்படி நான் மாண்டியா தொகுதியில் போட்டியிட டிக்கெட் வழங்குமாறு கேட்டேன். ஆனால் கூட்டணி தர்மத்தை பின்பற்ற வேண்டும், டிக்கெட் கிடைக்க வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டனர்.

    அதனால் நான் சுயேச்சையாக போட்டியிட்டு உள்ளேன். இன்று (நேற்று) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். நான் யார் என்று கேட்கிறார்கள். நான் அம்பரீசின் மனைவி. இந்த மண்ணின் மகள், மருமகள். நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, என்னை பற்றி பல்வேறு விமர்சனங்கள் வந்தன. எனக்கு அவமானங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதற்கு நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை. நீங்களே (மக்கள்) பதில் சொல்லுங்கள்.



    என் முன்னால் இமயமலை அளவுக்கு பெரிய சவால் உள்ளது. அந்த சவாலை உங்களின் ஆதரவுடன் எதிர்கொண்டு வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. என்னை இந்த தொகுதியில் நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்.

    அம்பரீஷ் இந்த தொகுதிக்கு என்ன செய்தார் என்று கேட்கிறார்கள். மாண்டியா மருத்துவ கல்லூரியை கொண்டு வந்தது அவர் தான். பள்ளி கட்டிடங்களை கட்டி கொடுத்தார். கிராமங்களில் சமுதாய கூடங்களை கட்டினார். இப்படி பல்வேறு பணிகளை செய்துள்ளார். கிராமங்களுக்கு சென்று மக்களிடம் கேட்டால் அவர்கள் சொல்கிறார்கள்.

    வேறு தொகுதியில் டிக்கெட் தருவதாகவும், எம்.எல்.சி. பதவி, மந்திரி பதவி தருவதாக என்னிடம் கூறினர். மாண்டியா தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று கூறினர். பதவி ஆசை இருந்திருந்தால், அதை ஏற்றுக்கொண்டு போய் இருப்பேன். இங்கு போட்டியிட்டு இருக்கமாட்டேன். மாண்டியா தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய நன்றிக்கடன் உள்ளது. அதை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன்.

    எனக்கு மிரட்டல் விடுத்தனர். எங்கள் ஆதரவாளர்களை மிரட்டுகிறார்கள். உங்களின் அன்புக்கு முன்னால் அது எடுபடாது. அதை பற்றி நான் கவலைப்படவில்லை. நான் இந்த தொகுதி மக்களின் பிரச்சினைகள் பற்றி பாராளுமன்றத்தில் குரல்கொடுப்பேன். விவசாயிகளின் பிரச்சினைகளை பற்றி பேசுவேன்.

    நடிகர்கள் தர்ஷன், யஷ் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இதையும் விமர்சனம் செய்கிறார்கள். அவர்கள் எனது குழந்தைகளை போன்றவர்கள். ஒரு தாய்க்கு ஆதரவாக குழந்தைகள் பிரசாரம் செய்வது தவறா?. உங்கள் (குமாரசாமி) மகனுக்கு ஆதரவாக நீங்கள் பிரசாரம் செய்யவில்லையா?.

    அம்பரீஷ் விவசாயிகளுக்கு என்ன செய்தார் என்று கேட்கிறார்கள். விவசாயிகள் கஷ்டத்தில் இருந்தபோது, மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தார்.

    இவ்வாறு சுமலதா பேசினார்.

    இதில் சுமலதாவின் மகன் அபிஷேக், நடிகர் தர்ஷன், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்பட கன்னட திரைத்துறையினர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். #Sumalatha #MandyaConstituency 
    கர்நாடக மாநில முன்னாள் மந்திரியும் பிரபல கன்னட நடிகருமான அம்பரீஷ் உடல் பெங்களூருவில் உள்ள கன்ட்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. #ActorAmbareesh #Ambareeshlaidtorest
    பெங்களூரு:

    சுமார் 200 திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ்(66) பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு காலமானார்.

    நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பரான அம்பரீஷ் கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் முன்னர் மந்திரியாகவும் பதவி வகித்தவர். 

    உடல்நலக்குறைவால் பெங்களூரு நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அம்பரீஷ் மறைந்த செய்தியைக் அறிந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று பெங்களூருக்கு சென்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

    இந்நிலையில், பெங்களூரு நகரில் உள்ள கன்ட்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் அம்ரீஷின் உடல் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.  அவரது உடல் வைக்கப்பட்டிருந்த சிதைக்கு அம்ரீஷின் மகன் அபிஷேக் தீமூட்டினார்.

    முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல் மந்திரிகள் எடியூரப்பா, சித்தராமையா உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர். #ActorAmbareesh #Ambareeshlaidtorest
    உள்நாட்டு பிரச்சினைகளுக்கு போக மாட்டார். மக்கள் பற்றி மோடிக்கு கவலை கிடையாது என சரத்குமார் குற்றம் சாட்டினார். #sarathkumar #gajacyclone #pmmodi
    ஆலந்தூர்:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரான நடிகர் சரத்குமார், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு வந்துள்ளேன். ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நான் இன்னும் ஆய்வு செய்யவில்லை. நாகப்பட்டினம், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) நேரில் சென்று மக்களை சந்திக்க உள்ளேன்.

    மத்திய ஆய்வுக்குழு இரவு நேரத்தில் எப்படி ஆய்வு செய்கிறார்கள்? என்று தெரியவில்லை. பகல் நேரத்தில் சென்று ஆய்வு செய்து அங்கு என்ன நடந்து உள்ளது என அறியவேண்டும். அதிகாரிகள் அங்குதான் தொடர்ந்து பணியாற்றுகிறார்கள். அவர்களிடமும் கேட்கவேண்டும். மக்களையும் சந்தித்து பேசவேண்டும். உண்மை நிலவரத்தை புரிந்த ஆய்வாக இருக்கவேண்டும்.

    பிரதமர் மோடி, தமிழகம் உள்பட உள்நாட்டில் நடக்கும் எந்த பிரச்சினைகளுக்கும் போக மாட்டார். அவர் வெளிநாட்டுக்குத்தான் போவார். அதிகாரிகள் எல்லாம் பார்த்து கொள்வார்கள். மக்கள் பற்றி அவருக்கு கவலை கிடையாது.

    சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சரியில்லை என்று முதன் முதலில் கூறினேன். பாரம்பரியத்துடன் ஆகம விதியுடன் உருவாக்கப்பட்ட கோவில். நம்பிக்கையின் அடிப்படையில் பல ஆண்டுகளாக இருந்து வருவதால் அதை சீர்குலைக்க கூடாது. அங்கு நடக்கும் போராட்டத்தை பார்க்கும் போது மக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அந்த தீர்ப்புக்கு ஆதரவு இல்லை என்று தெரிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #sarathkumar #gajacyclone #pmmodi
    பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் நேற்று காலமானார். அவரது உடலுக்கு நடிகர் ரஜினி காந்த், கர்நாடக முதல்வர் குமாரசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். #ActorAmbareesh
    அம்பரீஷ் பிரபல கன்னட நடிகர் ஆவார். அவர் கன்னட படங்களில் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பர் ஆவார். அவர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக பதவி வகித்தவர்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அம்பரீஷ் நேற்றிரவு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இந்த செய்தியைக் அறிந்த நடிகர் ரஜினிகாந்த் ஆழந்த இரங்கலை தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில் இன்று கர்நாடகா சென்ற ரஜினிகாந்த், அம்பரீஷ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். கர்நாடக முதல்வர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினார். அம்பரீஷ் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. #ActorAmbareesh
    குமாரசாமி தாக்கல் செய்துள்ள கர்நாடக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்று நடிகரும், முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் பிரமுகருமான அம்பரீஷ் கூறினார்.
    மண்டியா :

    மண்டியாவில் நடிகரும், முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் பிரமுகருமான அம்பரீஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் மண்டியா மாவட்டத்தின் வளர்ச்சிக்காக குறைந்தது ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வெறும் ரூ.162 கோடி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மண்டியா மாவட்ட மக்களுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை.

    சுற்றுலாத்துறை மற்றும் தொழில் துறைக்காவது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று நினைத்தேன். அதுவும் இல்லை. புதிய திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

    கே.ஆர்.எஸ். அணை அருகே அமைந்துள்ள பிருந்தாவன் பூங்காவை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது அறிவிக்கப்பட்டதுதான். அதைத்தான் குமாரசாமியும் அறிவித்துள்ளார். ககனசுக்கி நீரீவீழ்ச்சி சுற்றுலா தலத்தை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதுவும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ஒன்றுதான்.

    மண்டியாவில் உள்ள மிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்தவும், கிராமங்களில் குடிநீர் பிரச்சினையை போக்க, குடிநீர் திட்டத்தை செயல்படுத்தவும் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இது 2 மட்டும்தான் மண்டியா மாவட்டத்திற்கு கிடைத்துள்ள புதிய திட்டங்கள் ஆகும்.

    இவ்வாறு அம்பரீஷ் கூறினார். 
    ×