செய்திகள்
சட்டசபையில் பாஜக அமளி

இன்று இரவுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் - சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தல்

Published On 2019-07-18 12:45 GMT   |   Update On 2019-07-18 12:45 GMT
கர்நாடக சட்டசபையில் இன்று இரவுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என சபாநாயகருக்கு மாநில ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு:

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசு பதவி ஏற்றதில் இருந்தே பிரச்சனைகளை சந்தித்து வந்தது. 

இதற்கிடையே, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த 15க்கு மேற்பட்ட எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பா.ஜ.க. கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில், கர்நாடகாவில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என பா.ஜ.க.வினர் ஆளுநரை சந்தித்து கோரிக்கை வைத்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து இன்று இரவுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என சபாநாயகருக்கு கர்நாடக மாநில ஆளுநர் வேண்டுகோள் அறிவுறுத்தியுள்ளார். மேலும், முதலமைச்சர் என்பவருக்கு எப்போதும், பெரும்பான்மை இருப்பது அவசியம் என்றும் கடிதம் எழுதியுள்ளார்.
Tags:    

Similar News