செய்திகள்

அரசியலில் இருந்து மோடியை அகற்ற காங்கிரசும், பாகிஸ்தானும் விரும்புகிறது - பாஜக

Published On 2018-09-24 10:36 GMT   |   Update On 2018-09-24 12:51 GMT
இந்திய அரசியலில் இருந்து மோடியை அகற்ற வேண்டும் என காங்கிரசும், பாகிஸ்தானும் விரும்புகிறது என பாஜக குற்றம் சாட்டியுள்ளது. #Congress #BJP #RahulGandhi
புதுடெல்லி:

ரபேல் முறைகேடு உள்ளிட்ட பல விவகாரங்களில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மோடி மீதும் மத்திய பாஜக அரசு மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், பாஜகவின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராகுல் காந்தி பெரிய தலைவராக வர வேண்டும் என சிலர் விரும்புகின்றனர். அவர்கள் யார் என பார்த்தால்? பாகிஸ்தான் நாட்டு அரசியல்வாதிகளாக உள்ளனர். மேலும், அவர்கள் ஊழல், வாரிசு அரசியலுக்கு துணை நிற்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியும் பாகிஸ்தான் தலைவர்களுக்கும் ஒரே குறிக்கோள்தான். அது மோடியை இந்திய அரசியலில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே. ஆனால், ஏழை மக்கள் மோடியின் பின்னால் நிற்கின்றனர். அவரை அகற்ற முடியாது. எதிர்க்கட்சிகள் தங்களது மகா கூட்டணியில் பாகிஸ்தானையும் இணைத்துள்ளது. 

என அவர் பேசினார். 
Tags:    

Similar News