செய்திகள்

அன்புமணி ராமதாசை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்போம்- ஜி.கே.மணி

Published On 2018-08-14 10:38 GMT   |   Update On 2018-08-14 10:38 GMT
அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தி வருகிற தேர்தலை சந்திப்போம் என்று பா.ம.க. கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். #PMK #AnbumaniRamadoss #GKMani
மதுரை:

மதுரையில் இன்று பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் கட்சி தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டார்.

வருகிற செப்டம்பர் மாதம் 1,2-ந் தேதிகளில் ‘வைகையை காப்போம், விழிப்புணர்வு கொள்வோம்’ என்ற பெயரில் விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது.

இதில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்கிறார். இந்த பிரசாரம் வைகை அணையில் தொடங்கி ராமநாதபுரத்தில் முடிவடைகிறது.

மேட்டூர் அணையில் இருந்து தற்போது 40 டி.எம்.சி. நீர் கடலில் வீணாக கலக்கிறது. இதற்கு அணையை பராமரிக்காததும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாததும் தான் காரணம்.

வைகை நதியை பராமரித்து பாதுகாத்தால் தேனி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 3.46 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் எந்த அணையும் கட்டப்படவில்லை. இருக்கின்ற அணையையும் பராமரிக்கவில்லை. இதனால் தான் மழை காலங்களில் 40 டி.எம்.சி. நீர் வீணாக கடலில் கலக்கிறது.

கொள்கை சார்ந்த கூட்டணி என்பது தற்போது தமிழகத்தில் இல்லை. கூட்டணி குறித்து தேர்தல் அறிவிப்புக்கு பின் ராமதாஸ் முடிவு எடுப்பார்.


மக்கள் பிரச்சனைகளை முன் வைத்து கூட்டணி அமைப்போம். அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தி வருகிற தேர்தலை சந்திப்போம்.

ஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலை நடத்துவது சாத்தியமா? என்பது தெரியவில்லை.

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடுமா என்பதை தற்போது கூற முடியாது. விரைவில் இது தொடர்பாக ராமதாஸ் முடிவு எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார். #PMK #Ramadoss #AnbumaniRamadoss #GKMani
Tags:    

Similar News