செய்திகள்

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு அநீதியை இழைத்துள்ளது- வைகோ

Published On 2018-05-05 08:07 GMT   |   Update On 2018-05-05 08:07 GMT
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு அநீதியை இழைத்துள்ளது என்று வைகோ குற்றம் சாட்டியுள்ளார். #vaiko #neet #centralgovernment

திருச்சி விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘நீட்’ தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு அநீதியை இழைத்துள்ளது. நீட் தேர்வு ஏழை, எளிய மாணவர்கள், பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோரை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

நம் கல்வி முறையில் கற்று தலைச்சிறந்த மருத்துவராக வந்த நிலையில் தற்பொழுது நீட் தேர்வு மூலம் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தை புகுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதனால் 80 சதவிதம் மாணவர்கள் மருத்துவ படிப்பில் தேர்ச்சி பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.

இது மட்டுமல்லாமல் தமிழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழகத்தில் நீட் தேர்வு எழுத அனுமதி அளிக்காமல் மாறாக கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அனுமதி அளித்தது மனிதாபிமானமற்ற செயல். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக மாணவர்கள் வெளி மாநிலத்தில் தேர்வு எழுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் அரசு பதில் மனு தாக்கல் செய்த மனுவில் ஈவு இரக்கமற்ற தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கினர்.


மேலும் காலம் கடந்ததால் ‘நீட்’ தேர்வு எழுதும் மையத்தை மாற்ற முடியாது என்று கூறியிருப்பது துரதிருஷ்டவசமானது.

தமிழக அரசு ஆயிரம் ரூபாய் பணம் ஊக்க தொகை தருவதாக கூறியுள்ளது. வெளி மாநிலத்திற்கு மாணவிகள் எப்படி? யாருடன் சென்று தேர்வு எழுதுவார்கள் தேர்வு மையத்தை வேறு மாநிலத்திற்கு மாற்றினால் மாணவர்களுடைய மன நிலை நிச்சயம் பாதிப்படையும். மன நிலை பாதித்தால் சரியாக தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்படும்.

இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு முன்பே ஒழுங்கு படுத்தியிருக்க வேண்டும். தமிழகத்திற்கு நீட் தேர்வே வேண்டாம் என்றும் கூறிய நிலையில் மத்திய அரசு அவசரமாக ஜனாதிபதியிடம் மசோதாவை தாக்கல் செய்து அமல்படுத்தியுள்ளது தமிழகத்திற்கு பல விசயங்களில் மத்திய அரசு வஞ்சகம் செய்து வருகிறது. எதிர்கால தலைமுறைகள் மத்திய அரசை நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள். வெளி மாநிலத்தில் கஷ்டப்பட்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

பேட்டியில் போது மாவட்ட பொறுப்பாளர்கள் வெல்லமண்டி சோமு, ரொகையா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். #vaiko #neet #centralgovernment

Tags:    

Similar News