search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீட் தேர்வு"

    • இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்றே அறிவிக்கவில்லை. தலை இல்லாத முண்டம் போல அந்த கூட்டணி உள்ளது.
    • பொய்யான வாக்குறுதிகளை அளித்து வரும் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.ம.மு.க. வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான டி.டி.வி. தினகரன் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

    பெரியகுளம் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி கொடுத்துள்ளேன். அதே போல் மீண்டும் என்னை வெற்றி பெற வைத்தால் தேனி தொகுதியின் வளர்ச்சிக்கு வார்டு உறுப்பினர் போல் செயல்படுவேன்.

    ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அதே சின்னத்தில் இங்கும் போட்டியிடுகிறேன். ஜெயலலிதா இருந்த போது அவரிடம் தேனி தொகுதிக்கான திட்டங்களை பெற்றுத்தந்தது போல மீண்டும் வெற்றி பெற்றால் பிரதமர் மோடியிடம் கூறி வளர்ச்சிக்கான நிதியை வாங்கித் தருவேன்.

    தமிழ்நாட்டுக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை பெற மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும். இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்றே அறிவிக்கவில்லை. தலை இல்லாத முண்டம் போல அந்த கூட்டணி உள்ளது. பிரதமர் வேட்பாளரை ஒரு வேளை அறிவித்தால் அந்த கூட்டணி கட்சிகள் சிதறி ஓடி விடும்.

    தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.

    கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் ஒற்றை செங்கலை கையில் தூக்கியபடி பேசினார். தற்போது மீண்டும் அதே செங்கலை தூக்கி வருகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று உறுதியளித்தார். இதற்காக 1 கோடி பேரிடம் கையெழுத்து பெற்றும் அவர்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. அந்த ரகசியம் எங்களிடம்தான் உள்ளது என தி.மு.க.வினர் கூறி வந்த நிலையில் தற்போது பதில் கூற மறுத்து வருகின்றனர். இது போன்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து வரும் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அரசுப் பள்ளிகளை சேர்ந்த 850 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 9 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • கடந்த ஆண்டை விட 7 ஆயிரம் மாணவர்கள் அதிகம் விண்ணப்பித்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வை எழுதுவதற்காக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்பில் சேருபவர்களுக்கான நீட் நுழைவுத் தேர்வு வருகிற மே 5-ந்தேதி நடக்கிறது.

    இதையடுத்து நீட் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்த அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. மே 2-ந்தேதி வரை சுமார் 1 மாதம் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இந்த பயிற்சிக்காக தமிழகம் முழுவதும் 330 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நீட் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 13,304 மாணவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னையில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த 850 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 9 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மார்ச் 25-ந்தேதி முதல் மே 2 வரையிலான நீட் நுழைவு தேர்வு பயிற்சிக்கான அட்டவணையை ஆசிரியர்கள் ஏற்கெனவே தயாரித்துள்ளனர். மாணவர்களுக்கு தினமும் தேர்வுகள் நடைபெறும். நீட் நுழைவுத்தேர்வுக்கு முன்னதாக மாணவர்கள் 3 முழுமையான மாதிரி தேர்வுகளையும் எழுதுவார்கள்.

    மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்காக, நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை பள்ளிக் கல்வித் துறை நியமித்துள்ளது. ஒவ்வொரு நாளும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகிய 4 பாடங்களையும் படிக்க உள்ளனர்.

    தமிழகத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் மொத்தம் 1 லட்சத்து 55 ஆயிரத்து 210 மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 7 ஆயிரம் மாணவர்கள் அதிகம் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளிகளை சேர்ந்த 12,997 மாணவர்களில் 3,982 பேர் தேர்ச்சி பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • வரும் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித்தனியாக நீட் தேர்வு நடைபெறுகிறது.

    இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியாக உள்ளது. நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி தொடங்கிய நிலையில் நேற்று இரவுடன் நிறைவு பெற இருந்தது.

    இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 16-ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மார்ச் 16-ம் தேதி இரவு 10.50 மணி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இரவு 11.50 மணி வரை அதற்கான கட்டணத்தைச் செலுத்தலாம் என தெரிவித்துள்ளது.

    • ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை.
    • அவர் தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வை நுழைய விடவில்லை.

    மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக மூன்று நாட்களுக்கு பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    * புதிய கல்விக் கொள்கையில் 8-ம் வகுப்பு, 5-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்கிறார்கள். நமது குழந்தைகள் படிக்கக் கூடாது என புதிய தேர்வுகளை திணிக்கிறார்கள்.

    * ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை. அவர் தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வை நுழைய விடவில்லை. நீட் விவகாரத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும்

    * அவர் மறைந்ததும், திருட்டுத்தனமாக மத்திய அரசான பா.ஜனதாவுக்கு பயந்து அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வந்தது.

    * நீட் தொடர்பாக அனிதா முதல் ஜெகதீசன் வரை 21 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

    * நீட் தேர்வு ரத்து தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்த இருக்கிறோம், தமிழ்நாட்டில் இருந்து என்றைக்கு நீட்தேர்வு விலக்கு ஏற்படுமோ, அதுதான் முதல் வெற்றி.

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீட் தேர்வுக்கு மாணவ-மாணவிகள் கடந்த சில மாதங்களாக தயாராகி வருகிறார்கள்.
    • நீட் தேர்வுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை:

    எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கல்லூரிகளில் சேர தகுதி உள்ளவர்களாக கருதப்படுவார்கள். அந்த அடிப்படையில் நாடு முழுவதும் நீட் தேர்வு ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டிற்கான தேர்வு மே மாதம் 5-ந் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

    இன்று முதல் ஆன்லைன் வழியாக மாணவ-மாணவிகள் விண்ணப்பப் பதிவை மேற்கொள்ளலாம். nta.ac.exams, nta.ac.in.neet ஆகிய இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். மார்ச் மாதம் 9-ந் தேதி இரவு 9 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேர் எழுதி வருகிறார்கள்.

    அதில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர முடிகிறது.

    நீட் தேர்வுக்கு மாணவ-மாணவிகள் கடந்த சில மாதங்களாக தயாராகி வருகிறார்கள். தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதக் கூடியவர்கள் மற்றும் ஏற்கனவே தேர்வு எழுதி எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காமல் வாய்ப்பை இழந்தவர்கள் மீண்டும் தேர்வு எழுத தயாராகி வருகின்றனர். நீட் தேர்வுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    • போக்குவரத்து தொழிலாளர்களை ஏமாற்றும் ஆட்சி தான் திராவிட மாடல் அரசு.
    • சேலம் தி.மு.க. மாநாட்டில் இருக்கைகள் காலியாக கிடந்தன என தெரிவித்தார்.

    சேலம்:

    சேலத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் 15 லட்சம் பேர் திரண்டனர். ஆனால், சேலம் தி.மு.க. மாநாட்டில் இருக்கைகள் காலியாக கிடந்தன.

    நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து வாங்கிய பிரதிகள் மாநாட்டு திடலில் கிடந்தன. அவை குப்பைத்தொட்டிக்கு சென்றன. இவர்களா நீட் தேர்வை ரத்து செய்வார்கள். அவர்கள் ஏமாற்றுவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இந்நிகழ்வு நீட் தேர்வில், தி.மு.க. எவ்வளவு அக்கறை செலுத்துகிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. நீட் விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் நாடகத்தை ஸ்டாலினும், அவரது மகனும் அரங்கேற்றுகின்றனர்.

    மக்களுக்கு உதவும் வகையில் தி.மு.க. தீர்மானங்களில் எந்த தீர்மானமும் இல்லை. திட்டமிட்டு மக்களையும் ஊடகத்தையும் ஏமாற்றும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது. அக்கட்சி அளித்த வாக்குறுதிகள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக பொய் சொல்கின்றனர்.

    வெவ்வேறு கருத்துகள் கொண்ட கட்சிகள் தான் இண்டியா கூட்டணியில் இணைந்துள்ளன. அது எப்படி சரியாக இருக்கும்? அந்தக் கட்சிகள் இணைந்து செயல்படுவது கடினம். இன்னும் எத்தனை கட்சிகள் வெளியே செல்லும் என்பதைப் பார்ப்போம்.

    கோவில்களை கட்டி வாக்குகளைப் பெறலாம் என பா.ஜ.க. நினைக்கிறதா? ராமர் கோவில் கட்டியதால் பா.ஜ.க. எப்படி வெற்றி பெறமுடியும்?

    பாராளுமன்ற தேர்தலில் சூழ்நிலைக்கேற்ப கூட்டணி அமைக்கப்படும்.

    5 ஆயிரம் பஸ்கள் வாங்குவோம் என ஒவ்வொரு ஆண்டும் சொல்கின்றனர். ஆனால் ஒரு பஸ் கூட வாங்கியதாக தெரியவில்லை. போக்குவரத்து கழகம் முற்றிலும் செயலிழந்து காணப்படுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களை ஏமாற்றும் ஆட்சி தான் திராவிட மாடல் அரசு. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை பணி ஆரம்பமாகி உள்ளது என தெரிவித்தார்.

    • மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும்படி பாடம் நடத்தக்கூடாது.
    • குற்ற வழக்குகளில் சிக்கி தண்டனை பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க தடை.

    புதுடெல்லி:

    நீட், ஜே.இ.இ. பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில்,

    * 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு பயிற்சி மையங்களில் அனுமதி இல்லை. 16 வயது நிரம்பியவர்கள் அல்லது 12ம் வகுப்பு முடித்தவர்களையே நீட் பயிற்சி மையத்தில் சேர்க்க வேண்டும்.

    * மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும்படி பாடம் நடத்தக்கூடாது.

    * குற்ற வழங்குகளில் சிக்கி தண்டனை பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க தடை.

    * விதிமுறைகளை மீறும் பயிற்சி நிறுவனங்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும். ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தகுதித்தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.
    • நாடு முழுவதும் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

    இளநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தகுதித்தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.

    நாடு முழுவதும் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், மார்ச் 3-ந்தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, ஜூலை 7-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெற இலக்கு நிர்ணயம்.
    • இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

    தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்வதாகவும் இதற்கான பணிகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும் தி.மு.க. தெரிவித்து வருகிறது. அந்த வகையில், நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

    மேலும், இந்த திட்டத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவங்கி வைத்தார். அதன்படி கையெழுத்து இயக்கம் துவங்கி இன்றுடன் (டிசம்பர் 09) 50 நாட்கள் ஆகிறது. இதையொட்டி தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

     


    அதில், "மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கடந்த அக்டோபர் 21 அன்று தொடங்கி வைத்த #நீட்_விலக்கு_நம்_இலக்கு கையெழுத்து இயக்கம் மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது."

    "'50 நாட்கள் - 50 லட்சம் கையெழுத்துகள்' என்ற இலக்கோடு தொடங்கப்பட்ட இந்த கையெழுத்து இயக்கம், இன்றோடு 50 நாட்களை கடந்திருக்கிறது."

    "இணையத்தில் 56 லட்சம் - அஞ்சல் வழியே 16 லட்சம் என 72 லட்சத்துக்கும் அதிகமான கையெழுத்துகள் பெறப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டு மக்கள் நீட் அநீதிக்கு எதிராக தொடர்ந்து கையெழுத்திட்டு வருகின்றனர்."

    "இந்த கையெழுத்துகளை எல்லாம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் சேலத்தில் நடைபெறவுள்ள தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டில் ஒப்படைக்கவுள்ளோம். இதற்காக களத்திலும் - இணையத்திலும் அயராது உழைத்து வரும் மாவட்டக் கழக செயலாளர்கள், ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - கிளைக் கழக நிர்வாகிகள், தி.மு.க. ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்."

    "நீட் ஒழிப்புக்கான இந்த கையெழுத்து இயக்கம் மகத்தான வெற்றியை பெறுகிற வகையில் உழைத்திடுவோம் - நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவை நனவாக்குவோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.



    • நாம் நீட்டை எதிர்க்கும் நேரத்தில், நெக்ஸ்ட் தேர்வு என்று அடுத்த ஆபத்து நுழைகிறது.
    • உரிமைப் போரில் நாம் நிச்சயம் வெல்வோம்.

    சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 4-வது மாநாடு மற்றும் 20-ம் ஆண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வாழ்த்து தெரிவித்து பேசியதாவது:-

    உலகளவில் அறிவியல் துறையில் நடக்கும் புதிய ஆராய்ச்சிகளையும் மருத்துவத்துறையில் ஏற்படுகிற வளர்ச்சிகளையும் உடனுக்குடன் கவனித்து, தமிழ்நாட்டில் செயல்படுத்துவதன் விளைவாகத்தான் பன்னோக்கு மருத்துவமனைகள், சிறப்பு நோக்கு மருத்துவமனைகள் தமிழ்நாட்டில் சிறப்பான சிகிச்சையை வழங்கி வருகிறது.

    தமிழ்நாட்டில் உருவாக்கப் பட்டிருக்கும் மருத்துவக் கட்டமைப்புகளை சிதைக்கும் வகையில், முதலில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது. மாணவி அனிதா தொடங்கி மாணவர் ஜெகதீஸ்வரன் வரை பல பேரின் உயிரை நீட் என்கிற கொடுவாள் பறித்தது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்டப் போராட்டத்தை நாம் உறுதியோடு முன்னெடுத்திருக்கிறோம்.

    நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்ற ஆணவத்தோடு யார் பேசினாலும், எந்தப் பதவியில் இருப்பவர்கள் சொன்னாலும், நீட் விலக்கு என்கிற நம் இலக்கு, மக்களின் பேராதரவுடன் நிறைவேறியே தீரும். அதற்காக தி.மு.க.வின் இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி இணைந்து உங்களைப் போன்றவர்களின் ஆதரவோடு தொடங்கிய கையெழுத்து இயக்கம், இன்றைக்கு மக்கள் இயக்கமாக மாறியிருக்கிறது.

    நாம் நீட்டை எதிர்க்கும் நேரத்தில், நெக்ஸ்ட் தேர்வு என்று அடுத்த ஆபத்து நுழைகிறது. அதையும் வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

    மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள் என்பதை நிரூபித்து காட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதன் காரணமாக, தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு வலுப்பெற்றுள்ள நிலையில், எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்புக்கான இடங்களைக் குறைப்பதற்கும், புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதற்கும் ஒன்றிய அரசு தடை விதிக்கும் போக்கையும் எதிர்த்தோம்.

    அதுபோலவே, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவ இடங்களுக்கான ஒற்றைச் சாளர முறையிலான மாணவர் சேர்க்கையை ஒன்றிய அரசு தனதாக்கிக் கொள்ளும் எதேச்சதிகாரப் போக்கை மேற்கொண்டிருக்கிறது. எல்லா வகையிலும் மாநில உரிமைகளையும், மருத்துவக் கட்டமைப்பையும் சிதைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரான ஜனநாயக அறப்போர்க் களமாக சமூக சமத்துவ டாக்டர்கள் மாநாடு நடை பெறுகிறது.

    இது உங்கள் போராட்டம் இல்லை, எங்கள் போராட்டம்! தமிழ்நாட்டின் போராட்டம்! மாநில உரிமைகளுக்கான போராட்டம்! அந்த உரிமைப் போராட்டத்தில் எப்போதும் துணைநிற்போம். நீட் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு, மருத்துவக் கல்வியில் மாநிலத்தின் உரிமை ஆகியவற்றோடு, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இந்த உரிமைப் போரில் நாம் நிச்சயம் வெல்வோம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    • மறைமுகமாக எதிர்க்கட்சிகளை குறிவைப்பதாகத்தான் அர்த்தம் என்றனர்.
    • நீட்டுக்கு எதிரான ஹேஷ்டேக்கிற்கு எதிராக தாங்கள் எதுவும் செய்யவில்லை என்று நிறுவனம் சார்பில் கூறப்பட்டு உள்ளது.

    சென்னை:

    நீட் தேர்வுக்கு எதிராக நீட் விலக்கு நமது இலக்கு என்ற பெயரில் தி.மு.க.வினர் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறார்கள்.

    இது தொடர்பாக கட்சி தொண்டர்கள் வெளியிடும் பதிவுகளை முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கி வருவதாக தி.மு.க.வினர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    மாநில துணை அமைப்பு செயலாளரான எஸ்.ஆஸ்டின் தனது முகநூல் பதிவு நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஊடக தள பதிவுகளை அகற்ற அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ என்று சந்தேகிப்பதாக அவர் கூறினார்.

    தி.மு.க.வின் மகளிர் பிரிவு சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் யாழினியும் புகார் தெரிவித்துள்ளார். உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை பேஸ்புக் 'தவறாக வழி நடத்துவது' என்று எப்படி கூற முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    மத்தியில் ஆளும் பா.ஜனதாவின் தவறான முடிவுகளை தடுக்க போராடும் பதிவுகளை அகற்றுவது மறைமுகமாக எதிர்க்கட்சிகளை குறிவைப்பதாகத்தான் அர்த்தம் என்றனர்.

    இந்தி திணிப்பு, பகுத்தறிவு அல்லது நீட் உள்ளிட்ட அரசியல் தலைப்புகளில் வெளியிடப்படும் பதிவுகளை கடந்த காலங்களிலும் இது போன்று தன்னிச்சையாக நீக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்கள்.

    ஆனால் நீட்டுக்கு எதிரான ஹேஷ்டேக்கிற்கு எதிராக தாங்கள் எதுவும் செய்யவில்லை என்று நிறுவனம் சார்பில் கூறப்பட்டு உள்ளது.

    • நீட் தேர்வு எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.
    • கையெழுத்து இயக்கத்தை ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    மாணவ-மாணவிகளின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நீட் தேர்வு எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை தி.மு.க. இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் சென்னையில் தொடங்கி வைத்தார்.

    தென்காசி வடக்கு மாவட்ட சிறுபான்மை உரிமை நல அணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான ஆயுதம் கையெழுத்திட்ட அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறுபான்மை உரிமை நல அணி மாவட்ட அமைப்பா ளர் நாகூர் கனி, மாவட்ட தலைவர் மரியலூஸ் பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    நீட் எதிர்ப்பு கையெழுத்து பெற்ற 1,000 அட்டைகளை சிறுபான்மை உரிமை நல அணி மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் வழங்கினர்.

    தொடர்ந்து தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்டம் சார்பாக கையெழுத்து இயக்கத்தை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட அவைத்தலைவர் பத்ம நாபன், நகர செயலாளர் பிரகாஷ், சிறுபான்மை உரிமை நல அணி மாவட்ட துணைத் தலைவர் ஞானையா எழிலன், மாவட்ட துணை அமைப்பா ளர்கள் பாதுஷா, அப்துல் காதர், திவான் அலி, பாண்டித்துரை, மைதீன் கனி, அப்துல் ஜாபர், மாவட்ட விளையாட்டு மேம் பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் தொ.மு.ச. மகாராஜன், கேபிள் கணேசன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×