search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு நிகழ்ச்சி"

    • மோகனூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மோகனூர் போலீசார் சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மோகனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தமிழகன் பங்கேற்று மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அறிவுறைகளை வழங்கினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மோகனூர் போலீசார் சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மோகனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தமிழகன் பங்கேற்று மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அறிவுறைகளை வழங்கினார்.

    பெண் குழந்தைகளை பாதுகாப்பாகவும் இயல்பாகவும் வாழ்வதை உறுதி செய்வது குறித்தும் விளக்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை ரேவா குமாரி மற்றும் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • பட்டாசு வைத்திருக்கும் பகுதியில் தண்ணீர், மணல், தீயணைக்கும் கருவி கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
    • மின் சம்பந்தமாக குறைபாடுகள் இருந்தால் அதனை சரிசெய்துகொள்ள வேண்டும்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தில், பட்டாசு வியாபாரிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டாசு கிடங்கில் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பட்டாசுக் கடைகளை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார்,வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து அரசு வழிகாட்டு முறையில் பட்டாசுக் கடைகளை நடத்த வேண்டும் என விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், ஓசூர் அட்கோ போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள், வியாபாரிகளுக்கு அட்கோ போலீஸ் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    மேலும் இதில், மின் வாரிய அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பட்டாசுக் கடைகளை அரசு விதிமுறை களுக்கு உட்பட்டு நடத்த வேண்டும். உரிமம் இல்லாமல் பட்டாசு கடைகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    குறிப்பிட்ட அளவுக்கு மேல் பட்டாசுகளை வைத்திருக்க கூடாது. பட்டாசு வைத்திருக்கும் பகுதியில் தண்ணீர், மணல், தீயணைக்கும் கருவி கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மேலும் மின் சம்பந்தமாக குறைபாடுகள் இருந்தால் அதனை சரிசெய்துகொள்ள வேண்டும்.

    மின் மீட்டர் பெட்டியை அறையின் உள்ளே வைக்காமல், வெளியே வைக்க வேண்டும். அப்போது தான் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மின்சாரத்தை துண்டிக்க முடியும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில், சப்- இன்ஸ்பெக்டர் சபரி வேலன் மற்றும் பட்டாசு கடை வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    • பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிர்த்து பூமிக்கு நன்மை தருகிற துணி பைகளை பயன்படுத்த வேண்டும்.
    • தமிழக அரசின் மஞ்சப்பை திட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    நாகரசம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தை பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்கு தலைமை ஆசிரியர் சரவணன் தலைமை தாங்கினார். குழந்தை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் வாசவி முன்னிலை வகித்தார்.

    தேசிய பசுமை படை ஒன்றிய செயலாளர் ஆசிரியர் பவுன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் பவுன்ராஜ் பேசும் போது பிளாஸ்டிக் பைகளால் நமது நீர் நிலம் காற்று ஆகியவை மாசு அடைகின்றன. இதனால் எதிர்காலத்தில் பூமியில் மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு மிகவும் கடுமையான சூழல் உருவாகும். எனவே நாம் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிர்த்து பூமிக்கு நன்மை தருகிற துணி பைகளை பயன்படுத்த வேண்டும். தமிழக அரசின் மஞ்சப்பை திட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

    இதில் ஆசிரியர்கள் தேவராஜன், பெருமாள், ராஜேஸ்வரி ,கோப்பெரும் தேவி, ரேவதி, அருட்செல்வம், மணி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. மாணவிகளுக்கு மஞ்சப்பைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    • தீ விபத்து விழிப்புணர்வு குறித்த பயிற்சி போலீசாருக்கு அளிக்கப்பட்டது.
    • தீவிபத்து ஏற்பட்டால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் தீயணைப்பு விளக்கினர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் கிழக்கு, மேற்கு, தாலுகா, சுவாமி மலை, பட்டீஸ்வரம், போக்குவரத்து ஒழுங்கு பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்களில் வேலை பார்க்கும் போலீசாருக்கு, தீ விபத்து விழிப்புணர்வு குறித்த பயிற்சி கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டது.

    தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக பெரும் சேதம் ஏற்படாமல் எவ்வாறு தடுப்பது, தீவிபத்து ஏற்பட்டால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் தீயணைப்பு கருவிகளை எவ்வாறு கையாளுவது என்பது குறித்தும் கும்பகோணம் தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர்.

    பயிற்சியில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் அழகேசன், செந்தில்குமார், கவிதா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வளர் இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்த வயதில் உடல் அளவிலும் மனதளவிலும் பல்வேறு விதமான எண்ணங்க ளாலும், சிந்தனைகளாலும் மாற்றங்கள் ஏற்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வளர் இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பொறுப்பு பாலமுருகன் தலைமை வகித்தார்.

    ஆசிரியர் மீனாட்சி சுந்தரம், பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

    ஆசிரியை தமிழ்ச்செல்வி வரவேற்றார்.

    வட்டார வளமைய சிறப்பு பயிற்றுநர் ராஜலட்சுமி பேசுகையில், பதின் வயது என்றாலே ஒரு விதமான மகிழ்ச்சியையும், பதற்றத்தையும் தரக்கூடிய வயது.

    இந்த வயதில் உடல் அளவிலும் மனதளவிலும் பல்வேறு விதமான எண்ணங்க ளாலும், சிந்தனைகளாலும் மாற்றங்கள் ஏற்படும்.

    இந்த மாற்றங்கள் ஏற்படும் பொழுது குடும்ப சூழல் சமுதாய பழக்கங்கள் நிறைந்த பகுதியில் உள்ளவர்கள் நல்ல நட்பு வட்டத்தின் காரணமாக உரிய வழிகாட்டுதலோடு இப்பருவத்தை எளிதில் கடந்து விடுகின்றனர்.

    பலர் சமூக ஊடகங்களின் தாக்கத்தினாலும் தவறான நட்பு, திரைப்படங்களின் பாதிப்பு, கலாச்சாரம் போன்ற போலியான பிம்பங்கள் மூலமாக தடுமாற்றத்தை சந்திக்கின்றனர்.

    இந்த நிலை மாற்றுவதற்கு இப்பருவத்தில் சற்று தடுமாறினாலும் எதிர்கால வாழ்வு கேள்விக்குறியாகிவிடும்.

    பெற்றோர்கள் ஆரோக்கியமான உணவு முறைகள் கட்டுப்பாடான உடை, அலங்காரங்கள் மனநலம் மற்றும் உடல் நலம் சார்ந்த கருத்துக்கள் ஆகியவற்றை தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்து ரைக்க வேண்டும். என்றார்.

    முடிவில் ஆசிரியை அஜிதா கனி நன்றி கூறினார்.

    ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஆடின் மெடோனா, உமா மகேஸ்வரி செய்திருந்தனர்.

    • குப்பைகளை தரம் பிரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • பின்னர் மாணவிகளுக்கு அங்கேயே விளைவிக்கப்பட்ட சுரைக்காயை வழங்கினார்.

    மானாமதுரை

    மானாமதுரை நகராட்சி சார்பில் தாயமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள வளமீட்பு பூங்காவில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகளுக்கு குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது, குப்பையிலிருந்து உரம் தயாரிப்பது குறித்த விழிப் புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. துப்புரவு ஆய்வாளர் பாண்டிசெல்வம் தலைமை தாங்கி. பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமைகள். அதை எவ்வாறு கையாள வேண்டும். குப்பைகளை எவ்வாறு தரம் பிரிக்க வேண்டும். குறிப்பாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை எவ்வாறு தரம் பிரித்து, எவ்வாறு வழங்கிட வேண்டும், குப்பைகள் மூலம் உரங்கள் தயாரித்து, இந்த வளம்மீட்பு பூங்காவில் வளர்க்கப்பட்ட காய், கனிகள், முலிகை செடிகள், பூக்கள் பற்றி விளக்கி பேசினார். பின்னர் மாணவிகளுக்கு அங்கேயே விளைவிக்கப்பட்ட சுரைக்காயை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர் கார்த்தி ஹரிணி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • 300 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் போக்சோ மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி தீரன்பாசறை சாார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    நிகழ்ச்சியில் ஈரோடு அரசு குழந்தைகள் காப்பக முன்னாள் மருத்துவர்.அசோக் ஆலோசனைகள் வழங்கினார். பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    கோபி மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி கலந்து கொண்டு கருத்துக்களை கூறினார். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்.

    தீரன்பாசறை செயலாளர் துளசிமணி நன்றி கூறினார். 300 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • ரெயில் நிலையத்தில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 35க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ மாணவிகள் கலந்து கொண்டுனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மதுவிலக்கு அமலாக்கத்துறை, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மற்றும் தென்னக ெரயில்வே திருப்பூர் ரெயில் நிலையம் இணைந்து போதை அரக்கன் போல் வேடமிட்டு இன்று திருப்பூர் ெரயில் நிலையத்தில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் ரெயில் நிலைய துணை மேலாளர் சங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    துணை மேலாளர் பேசுகையில்,போதை பழக்கத்தைத் தடுப்பதிலும், போதைக்கு அடிமையானவர்களை மீட்பதிலும் யோகாவும் தியானமும் பயனளிக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதை பொருட்களை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அதை முற்றிலும் நிறுத்த வேண்டும் .

    போதை அதற்கு அடிமையானவர்களையும், அவர்களை சுற்றியுள்ள மக்களையும் பாதிக்கும்.போதையை ஒழித்து பாதையை வளர்ப்போம் என்று பேசினார். வணிக ஆய்வாளர் ராம்நாத், ரெயில்வே ஊழியர் ராஜ்குமார் கலந்து கொண்டனர்.

    மாணவச் செயலர்கள் சுந்தரம், விஜய், ராஜபிரபு, காமராஜ், ஜெயசந்திரன், விக்னேஷ், மதுகார்த்திக் ஆகியோர் தலைமையில் 35க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போதை அரக்கன் போல் வேடமிட்டும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும், உறுதிமொழி எடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    திருச்சுழி

    சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சுழியில் வைத்தியலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளியில் உறுதிமொழி ஏற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கணேசன் தலைமையில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் திருச்சுழி வருவாய் வட்டாட்சியர் பாண்டி சங்கர் ராஜா, பள்ளி தலைமை ஆசிரியை கவிதா மற்றும் ஆசிரியர்கள் கனகராஜ், செல்வராஜ், கதிரேசன், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன், கிராம உதவியாளர் இளவரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பொது மக்கள் மத்தியில் பேரணியாக வீதி வீதியாக சென்று போதை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • மாண வர்கள் போதை விழிப்புணர்வு பதாகை களை ஏந்தி கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம் பேரிகை காவல் நிலையமும் அத்தி முகம் அதியமான் வேளாண்கல்லூரியும் இணைந்து அத்திமுகம், பேரிகை பகுதியில் பொது மக்கள் மத்தியில் பேரணியாக வீதி வீதியாக சென்று போதை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்நிகழ்ச்சிக்கு பேரிகை காவல் உதவி ஆய்வாளர் கண்ணன், போலீசார் மற்றும் அத்திமுகம் பகுதியில் அமைந்த அதியமான் வேளாண் கல்லூரி முதல்வர் ஸ்ரீரிதரன், கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாண வர்கள் போதை விழிப்புணர்வு பதாகை களை ஏந்தி கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தனர். 

    • ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவர்கள், மது ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வினை பொதுமக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும்.

    ஓசூர்,

    உலக போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு, ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஓசூர் பஸ் நிலையம், பத்தலப்பள்ளி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு, மது மற்றும் போதைக்கு அடிமையாகாமல் இருத்தலும், போதைப் பொருட்களைக் கடத்துவது குற்றம் என்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, எம்.ஜி.ஆர் கல்லூரி வளாகத்தில் உலக போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினக்கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கி பேசுகையில், "மாணவர்கள், மது ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வினை பொதுமக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும் என்றும், போதைப் பொருள் கடத்தலுக்குத் துணைப்போகக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.

    இதில், ஓசூர் அட்கோ போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபரிநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, இன்றைய சூழலில் எவ்வாறான நிலையில் போதைக்கு மக்கள் அடிமை ஆகின்றனர் என்பதையும், அதனால் ஏற்படும் துன்பங்கள் குறித்தும் விரிவாக பேசினார். இந்தக்கருத்தரங்க நிகழ்வில், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் 100 பேர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, திட்ட அலுவலர் லெனின் செய்திருந்தார்.

    • விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்

    செய்யாறு:

    செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பள்ளி தலைமை ஆசிரியர் க.ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வழக்கறிஞர் அசோக், முதுகலை ஆசிரியர் குமரவேல், உடற்கல்வி இயக்குனர் சூரியநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக டி எஸ் பி வெங்கடேசன் கலந்துகொண்டு , போதைப் பொருள் பயன்படுத்துவதால் உடல் மற்றும் மனதிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கமாக கூறினார். தொடர்ந்து மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

    பள்ளி வளாகத்தில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலத்தினை போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    விழிப்புணர்வு ஊர்வலம் பிரதான சாலையான காந்தி சாலை, ஆற்காடு சாலையில் உழவர் சந்தை வரை சென்றது. ஊர்வலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு, சப் இன்ஸ்பெக்டர் சங்கர், உடற்கல்வி ஆசிரியர்கள் பி.சரவணன், டி.ரகுராமன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×