search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகரசம்பட்டி அரசு பள்ளியில் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    நாகரசம்பட்டி அரசு பள்ளியில் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிர்த்து பூமிக்கு நன்மை தருகிற துணி பைகளை பயன்படுத்த வேண்டும்.
    • தமிழக அரசின் மஞ்சப்பை திட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    நாகரசம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தை பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்கு தலைமை ஆசிரியர் சரவணன் தலைமை தாங்கினார். குழந்தை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் வாசவி முன்னிலை வகித்தார்.

    தேசிய பசுமை படை ஒன்றிய செயலாளர் ஆசிரியர் பவுன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் பவுன்ராஜ் பேசும் போது பிளாஸ்டிக் பைகளால் நமது நீர் நிலம் காற்று ஆகியவை மாசு அடைகின்றன. இதனால் எதிர்காலத்தில் பூமியில் மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு மிகவும் கடுமையான சூழல் உருவாகும். எனவே நாம் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிர்த்து பூமிக்கு நன்மை தருகிற துணி பைகளை பயன்படுத்த வேண்டும். தமிழக அரசின் மஞ்சப்பை திட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

    இதில் ஆசிரியர்கள் தேவராஜன், பெருமாள், ராஜேஸ்வரி ,கோப்பெரும் தேவி, ரேவதி, அருட்செல்வம், மணி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. மாணவிகளுக்கு மஞ்சப்பைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×