search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருமானவரி சோதனை"

    • கே.சி.பி. நிறுவனத்தில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடமும் பல்வேறு கேள்விகளை கேட்டு, துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர்.
    • மேலும் சந்திரபிரகாஷின் வீட்டிலும் சோதனை நடந்தது. அப்போது அவரிடமும் வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

    கோவை:

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் என்ஜினீயர் சந்திரசேகர். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக உள்ளார். கடந்த 6-ந்தேதி சந்திரசேகர் வீடு மற்றும் சகோதரர், சகோதரிகள் வீடு உள்பட 6 இடங்களிலும் சோதனை நடந்தது.

    கோவை பீளமேட்டில் கே.சி.பி.நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக சந்திரபிரகாஷ் உள்ளார். இங்கும் வருமானவரித்துறை சோதனை நடந்தது. இதில் கே.சி.பி நிறுவனம் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் சோதனை முடிவடைந்தது.

    தொடர்ந்து கே.சி.பி நிறுவனம் மற்றும் கொடிசியாவில் உள்ள அதன் இயக்குனர் சந்திரபிரகாஷின் வீட்டிலும் 4-வது நாளாக சோதனை நடைபெற்றது. காலையில் தொடங்கிய சோதனையானது, விடிய, விடிய நடந்தது.

    கே.சி.பி. நிறுவனத்தில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடமும் பல்வேறு கேள்விகளை கேட்டு, துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் சந்திரபிரகாஷின் வீட்டிலும் சோதனை நடந்தது. அப்போது அவரிடமும் வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

    இன்று 5-வது நாளாக பீளமேட்டில் உள்ள கே.சி.பி.நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 5 நாட்களாக நடந்து வரும் சோதனையில் பல ஆவணங்களை கைப்பற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதற்கிடையே குனியமுத்தூரில் உள்ள வசந்தகுமார் என்பவரது வீட்டிற்கு நேற்றிரவு 10-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறையினர் காரில் வந்தனர். அவர்கள் வீட்டின் கதவை அடைத்து விட்டு, யாரையும் உள்ளே அனுமதிக்காமல் சோதனையில் ஈடுபட்டனர்.

    இன்று காலையும் தொடர்ந்து வசந்தகுமாரின் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்றது. வீட்டில் அங்குலம், அங்குலமாக சோதனை மேற்கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் அப்போது வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    வசந்தகுமார், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் உதவியாளராக இருக்கும் சந்தோஷ் என்பவரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் 2 முறை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையிட்ட போது சந்திரசேகரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அப்போது சோதனை நடந்தது.
    • தற்போது வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை:

    கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் செயலாளராக இருப்பவர் என்ஜினீயர் சந்திரசேகர். இவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

    என்ஜினீயர் சந்திரசேகரின் வீடு கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ளது. இந்த வீட்டுக்கு இன்று காலை வருமானவரித்துறை அதிகாரிகள் 8 பேர் வந்தனர்.

    அவர் வீட்டில் சோதனை நடத்தினர். பல்வேறு ஆவணங்களை கேட்டு அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையை முன்னிட்டு என்ஜினீயர் சந்திரசேகர் வீட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் 2 முறை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையிட்ட போது சந்திரசேகரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அப்போது சோதனை நடந்தது.

    தற்போது வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    என்ஜினீயர் சந்திரசேகரின் மனைவி சர்மிளா கோவை மாநகராட்சி 38-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

    பெங்களூருவில் வருமான வரித்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்தியது குறித்து விசாரணைக்கு ஆஜராக முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையாவுக்கு நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. #IncomeTaxDepartment #Kumaraswamy #Siddaramaiah
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம்(மார்ச்) 28-ந் தேதி காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்தவர்களை குறி வைத்து நடத்தப்படுவதாக கூறி கூட்டணி தலைவர்கள் குற்றச்சாட்டு கூறினார்கள்.

    அன்றைய தினம் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிராக பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்ட தலைவர்களும், 2 கட்சிகளின் பிரமுகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமாருக்கு, வருமான வரித்துறை இயக்குனர் பாலகிருஷ்ணன் புகார் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதம் மாநில போலீஸ் டி.ஜி.பி நீலமணி ராஜுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸ் டி.ஜி.பி.யின் உத்தரவின் பேரில் வருமான வரித்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) பிளாக் தலைவர்கள் உள்ளிட்ட சிலர் மீது கமர்சியல்தெரு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

    அதே நேரத்தில் இந்த வழக்கு குறித்து விசாரிக்க பானசாவடி உதவி போலீஸ் கமிஷனர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், வருமான வரித்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையா உள்ளிட்ட தலைவர்களுக்கு பானசாவடி உதவி போலீஸ் கமிஷனர் நோட்டீசு அனுப்பி வைத்துள்ளார். மேலும் விசாரணைக்கு ஆஜராக 7 நாட்கள் காலஅவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. குமாரசாமி, சித்தராமையா உள்ளிட்டோருக்கு போலீசார் நோட்டீசு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #IncomeTaxDepartment #Kumaraswamy #Siddaramaiah 
    ×