search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருமானம்"

    • 3 நாள் தொடர் விடுமுறை மதுரை ரெயில்வேக்கு கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.
    • ரூ.15லட்சத்து18,946 என்ற அளவில் வருமானம், முன்பதிவில்லாத பயணச்சீட்டு விற்பனை மூலம் கிடைத்து உள்ளது.

    மதுரை

    சுதந்திர தினத்தை முன்னிட்டு 3 நாள் விடுமுறை என்பதால் ரெயிலில் பெரும்பாலானோர் பயணம் செய்தனர். அதிலும் குறிப்பாக மதுரை ரெயில் நிலையத்தில் முன்பதிவு இல்லாத பயண சீட்டு அதிகம் விற்பனையாகி உள்ளன. பொதுவாக மதுரை ரெயில் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.8.5 லட்சம் என்ற அளவுக்கு முன்பதிவில்லாத பயணச் சீட்டுகள் விற்பனை ஆகும்.

    ஆனால் சுதந்திர தின விடுமுறை காரணமாக சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் முறையே ரூ. 16 லட்சத்து 50,144, ரூ.15லட்சத்து01 734, ரூ.15லட்சத்து18,946 என்ற அளவில் வருமானம், முன்பதிவில்லாத பயணச்சீட்டு விற்பனை மூலம் கிடைத்து உள்ளது.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • விபத்து ஒன்றில் இவரது வலது காலில் முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் ஆட்டோ ஓட்ட முடியாமல் போனது.
    • பல்வேறு இடங்களில் தனக்கு வேலை வாய்ப்பு வேண்டி சென்றும் வேலை கிடைக்கவில்லை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் சிக்கல் அருகே மஞ்சகொள்ளை பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ். ஆட்டோ டிரைவர். இவருக்கு சுபா என்ற மனைவியும் 4 பிள்ளைகளும் உள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த விபத்து ஒன்றில் இவரது வலது காலில் முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் ஆட்டோ ஓட்ட முடியாமல் போனது. இவர் பல்வேறு இடங்களில் தனக்கு வேலை வாய்ப்பு வேண்டி சென்றுள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.

    மேலும் தனக்கோ அல்லது மனைவிக்கோ அரசு வேலை வழங்க கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்துள்ளார். பிள்ளைகளுக்கு சீருடை மற்றும் தினம்தோறும் உணவுக்கு வழியில்லாமல் வாழ்ந்து வருவதாகவும், அரசோ அல்லது தனியார் நிறுவனங்களோ தனக்கு வேலை வாய்ப்பு வழங்கி உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    • சரக்கு ரெயில்கள் மூலம் ரூ.78.54 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை

    மதுரை கோட்ட வர்த்தக வளர்ச்சி குழுவின் தொடர் முயற்சியால் புதிய, புதிய பொருட்கள் சரக்கு ெரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இவற்றில் கட்டுமானத்துக்கான சரளை கற்கள் (0.34 லட்சம்), உணவு தயாரிப்புக்கான சோயா பீன்ஸ், விவசாயத்துக்கான உரம் (3.26 லட்சம்), வடகிழக்கு மாநிலங்களுக்கு மரக்கரி (0.55 லட்சம்), தென்மேற்கு ராஜஸ்தானுக்கு டிராக்டர்கள் (0.7 லட்சம்), சிமெண்ட் தயாரிப்புக்கான சுண்ணாம்புக்கல் (1.04 லட்சம்), ஜிப்சம் (0.08 லட்சம்) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

    மதுரை கோட்டத்தில் ஒட்டுமொத்தமாக 7.16 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டு உள்ளன. இதன் மூலம் நடப்பு காலாண்டில் ரூ.78.54 கோடி வருமானம் ஈட்டப்பட்டு உள்ளது.

    அதிலும் குறிப்பாக கடந்த ஜூன் மாதம் மட்டும் 2.55 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டு உள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 36.78 சதவீதம் அதிகம். ரெயில்வே வாரிய இலக்கை விட 30.34 சதவீதம் அதிகம்.

    கடந்த ஜூன் மாதம் மட்டும் 2.55 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டு உள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 36.78 சதவீதம் அதிகம். ெரயில்வே வாரிய இலக்கை விட 30.34 சதவீதம் அதிகம்.

    தென்னக ரெயில்வே சரக்கு போக்குவரத்து வருமானமாக ரூ.922 கோடி ஈட்டி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 36 சதவீதம் அதிகம். கடந்த ஜூன் மாதம் மட்டும் 3.114 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு உள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 53 சதவீதம் அதிகம்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • நாம் விளைவித்த நெல்லை அவல், பொரி, இட்லி மாவு, இடியப்பம் மாவு என பல விதங்களில் மதிப்புக்கூட்டி விற்பதன் மூலம் நமக்கு வருடம் முழுவதும் சீரான வருமானம் கிடைக்கும்.
    • பயறு வகை பயிர்களான உளுந்து, பச்சைப்பயிறு ஆகியவற்றை முழு தானியமாக விற்பனை செய்யாமல் உடைத்து அல்லது மாவாக அரைத்து விற்பனை செய்யலாம்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் (அட்மா) கேத்தனூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிர் அறுவடைக்கு பின்சார் தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நடைபெற்றது.

    இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் விக்னேஷ் வரவேற்புரை ஆற்றி பயிற்சியை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக நீடாமங்கலம் அறிவியல் நிலையம் பேராசிரியை கமல சுந்தரி கலந்துகொண்டு அறுவடைக்குப்பின் செய்யும் தொழில்நுட்பங்களை பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்:-

    விளைவித்த பயிர்களை முழு தானியங்களாக விற்பதன் மூலம் கிடைக்க கூடிய லாபம் குறைவு தான். இதுவே விளைவித்த பயிர்களை மதிப்புக்கூட்டி விற்பதன் மூலம் அதிக லாபம் பெறலாம். உதாரணமாக நமது பகுதியில் பிரதான பயிரான நெல்லை அனைத்து விவசாயிகளும் பயிர் செய்து கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்கின்றனர். இதனால் லாபம் கிடைத்தாலும் பயிர் செய்த பருவங்களை மட்டுமே வருமானம் கிடைக்கும். இதுவே நாம் விளைவித்த நெல்லை அவல், பொரி, இட்லி மாவு, இடியப்பம் மாவு, இப்படி பல விதங்களில் மதிப்புக்கூட்டி விற்பதன் மூலம் நமக்கு வருடம் முழுவதும் சீரான வருமானம் கிடைக்கும். பயறு வகை பயிர்களான உளுந்து,பச்சைப்பயிறு ஆகியவற்றை முழு தானியமாக விற்பனை செய்யாமல் உடைத்து அல்லது மாவாக அரைத்து விற்பனை செய்யலாம்.

    பெருநகரங்களில் முருங்கைக்கீரை போன்ற கிராமங்களில் விளையக் கூடிய பொருள்கள் கிடைப்பது அரிது. அதை நிறம் மற்றும் தரம் குறையாமல் பதப்படுத்தி விற்கலாம். இது போன்று அனைத்து பயிர்களிலும் அறுவடைக்குப்பின் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மதிப்பு கூட்டிய பொருளாக மாற்றலாம். விவசாயிகளாகிய நீங்களும் புதிய தொழில் முனைவோராக மாறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் கேத்தனூர் பகுதி வேளாண்மை உதவி அலுவலர் மோகன்ராஜ் விவசாயிகளுக்கு நெல் மற்றும் இதர பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்குதலை பற்றி எடுத்து கூறினார். மேலும் ஆலங்குடி வேளாண்மை உதவி அலுவலர் சப்தகிரி வாசன் உடன் இருந்தார். பயிற்சியின் நிறைவாக உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரியங்கா நன்றியுரை கூறி நிறைவு செய்தார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சதீஷ் குமார் செய்திருந்தார்.

    • மதுரை கோட்டம் சார்பில் 67-வது ெரயில்வே வாரவிழா நடந்தது.
    • மதுரை கோட்டத்தின் ஒட்டு மொத்த வருமானம் ரூ.700.10 கோடி ஆகும்

    மதுரை

    மதுரை கோட்டம் சார்பில் 67-வது ெரயில்வே வாரவிழா நடந்தது. இதில் கடந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய 165 ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் சான்றிதழும், 21 குழு விருதுகளும் வழங்கப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து மதுரை கோட்ட ெரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் கூறியதாவது:-

    மதுரை கோட்ட ெரயில்களில் கடந்த ஆண்டு 14.02 மில்லியன் பேர் பயணித்தனர்‌. இதன் மூலம் ரூ.403.37 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் ரூ.265.19 கோடி அதிகம்.அடுத்தபடியாக 2.18 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டதன் மூலம் போக்குவரத்து வருவாயாக ரூ.237.28 கோடி ஈட்டப்பட்டு உள்ளது. கடந்த நிதியாண்டில் மதுரை கோட்டத்தின் ஒட்டு மொத்த வருமானம் ரூ.700.10 கோடி ஆகும். இது முந்தைய ஆண்டை காட்டிலும் 62 சதவீதம் அதிகம்.

    மதுரை கோட்டத்தில் 98 சதவீத பயணிகள் ெரயில்கள் காலம் தவறாமல் இயக்கப்பட்டது. சரக்கு ெரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு தற்போது மணிக்கு 49 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. மதுரை கோட்டத்தில் 247 கி.மீ. ெரயில் பாதை மின்மயம் ஆக்கப்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டு 922 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளன. 94 ஓய்வூதியர்களின் குறைகள் களையப்பட்டு, ரூ.7.08 லட்சம் பணப்பயன்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஊழியர்களின் குறைகளை அலைபேசி வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகள் மூலம் உடனடியாக தீர்க்க தொலைபேசி உதவி எண்கள் பயன்பாட்டில் உள்ளது என்றார்.

    விழாவில் கூடுதல் கோட்ட மேலாளர் தண்ணீரு ரமேஷ்பாபு, முதுநிலை கோட்ட ஊழியர் நல அதிகாரி சுதாகரன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    விளையாட்டு வீரர்களின் வருமானத்தில் ஒரு பங்கை அரசுக்கு செலுத்த வேண்டும் என்ற அரியானா அரசு உத்தரவை அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் ரத்து செய்துள்ளார்.
    சண்டிகர்:

    அரியனா மாநில அரசு விளையாட்டு துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. விளையாட்டு துறையை மேம்படுத்தும் ஒரு பகுதியாக அம்மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தாங்கள் சம்பாதிக்கும் தொகையில் 3-ல் ஒரு பங்கை மாநில விளையாட்டு மேம்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டது.

    விளம்பர வருவாய், தொழில்முறை போட்டிகளில் வரும் வருமானத்திலும் பங்கு செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு அம்மாநில விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திட்டம் அதிகமாக சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு சரியாக இருக்கும். ஆனால் மற்றவர்கள் பெரிய அளவில் சம்பாதிப்பதில்லை என்பதால் அவர்களை இந்த திட்டமானது பாதிக்கும் என கருத்து தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், விளையாட்டு துறையின் இந்த உத்தரவை அம்மாநில முதல்வர் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 30-ம் தேதியிட்ட அந்த அரசு உத்தரவை நிறுத்தி வைக்க தான் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் 22 பதக்கங்கள் வென்று அசத்தினர். இதையடுத்து அவர்களுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அதே சமயம் அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகையை குறைக்க மாநில அரசு திட்டமிட்டது. 

    இதன்காரணமாக வீரர்கள் அந்த விழாவில் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்ததை அடுத்து, பாராட்டு விழா ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #HaryanaGovt #SportsDevelopmentFund
    ×