என் மலர்

  நீங்கள் தேடியது "Railroad"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரை கோட்டம் சார்பில் 67-வது ெரயில்வே வாரவிழா நடந்தது.
  • மதுரை கோட்டத்தின் ஒட்டு மொத்த வருமானம் ரூ.700.10 கோடி ஆகும்

  மதுரை

  மதுரை கோட்டம் சார்பில் 67-வது ெரயில்வே வாரவிழா நடந்தது. இதில் கடந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய 165 ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் சான்றிதழும், 21 குழு விருதுகளும் வழங்கப்பட்டன.

  இதனைத் தொடர்ந்து மதுரை கோட்ட ெரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் கூறியதாவது:-

  மதுரை கோட்ட ெரயில்களில் கடந்த ஆண்டு 14.02 மில்லியன் பேர் பயணித்தனர்‌. இதன் மூலம் ரூ.403.37 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் ரூ.265.19 கோடி அதிகம்.அடுத்தபடியாக 2.18 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டதன் மூலம் போக்குவரத்து வருவாயாக ரூ.237.28 கோடி ஈட்டப்பட்டு உள்ளது. கடந்த நிதியாண்டில் மதுரை கோட்டத்தின் ஒட்டு மொத்த வருமானம் ரூ.700.10 கோடி ஆகும். இது முந்தைய ஆண்டை காட்டிலும் 62 சதவீதம் அதிகம்.

  மதுரை கோட்டத்தில் 98 சதவீத பயணிகள் ெரயில்கள் காலம் தவறாமல் இயக்கப்பட்டது. சரக்கு ெரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு தற்போது மணிக்கு 49 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. மதுரை கோட்டத்தில் 247 கி.மீ. ெரயில் பாதை மின்மயம் ஆக்கப்பட்டு உள்ளது.

  கடந்த ஆண்டு 922 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளன. 94 ஓய்வூதியர்களின் குறைகள் களையப்பட்டு, ரூ.7.08 லட்சம் பணப்பயன்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஊழியர்களின் குறைகளை அலைபேசி வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகள் மூலம் உடனடியாக தீர்க்க தொலைபேசி உதவி எண்கள் பயன்பாட்டில் உள்ளது என்றார்.

  விழாவில் கூடுதல் கோட்ட மேலாளர் தண்ணீரு ரமேஷ்பாபு, முதுநிலை கோட்ட ஊழியர் நல அதிகாரி சுதாகரன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 8 ஆண்டுகளில் 1664 கி.மீ.ரெயில் பாதை மின்மயம் ஆக்கப்பட்டு உள்ளது.
  • கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு ரெயில்வே திட்டங்கள் விரைவாக நிறைவேற்றப்பட்டு உள்ளன.

  மேலூர்

  மதுரை கோட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு ெரயில்வே திட்டங்கள் விரைவாக நிறைவேற்றப்பட்டு உள்ளன.

  மதுரை-தேனி, செங்கோட்டை-ஆரியங்காவு உட்பட 94 கி.மீ. அகல ெரயில் பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.திருச்சி - திண்டுக்கல், திருமங்கலம் - நெல்லை, வாஞ்சி மணியாச்சி - மீளவிட்டான் உட்பட 282 கி.மீ. இரட்டை ெரயில் பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.

  தென்னக ெரயில்வேயில் இதுவரை 82 சதவீத ெரயில் பாதைகள் மின்மயம் ஆக்கப்பட்டு உள்ளது. மதுரை கோட்டத்தில் விருதுநகர் - நெல்லை வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி, மதுரை - மானாமதுரை, மானாமதுரை-ராமநாதபுரம், திருச்சி-காரைக்குடி, பழனி-பொள்ளாச்சி, மானாமதுரை- விருதுநகர் உட்பட 410 கி.மீ. ெரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுஉள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 1664 கி.மீட்டர் ெரயில் பாதை மின்மயம் ஆக்கப்பட்டு உள்ளது.

  மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

  ×