search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடசேரி"

    • அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும்.
    • மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்டது

    நாகர்கோவில்:

    நாகர் கோவில் மாநக ராட்சிக்குட் பட்ட வடசேரி பஸ் நிலை யத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண் காட்சி நேற்று நடைபெற் றது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரி வித்ததாவது:-

    தமிழக அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக் காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதல் மைச்சர் தொடங்கிவைத்த திட்டங்களான, முதல மைச்சரின் விரிவான மருத் துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட் டம், மக்களை தேடி மருத்து வம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், குறவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி யது, கன்னியாகுமரிமாவட் டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படை யில் சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டது.

    இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட் டம், விவசாயிகளுக்குபுதிய மின் இணைப்புகள் வழங் கும் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட் டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டம், காணி பழங்குடியினர்களுக்கு நிலஉரிமை ஆணை வழங்கியது. மீனவர்களின் நலன் கருதி பனிக்கட்டி நிலை யங்களை திறந்து வைத்தல், மகளிர் சுய உதவிக்குழுவி னர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது. முதலமைச்ச ரின் ஊட்டம் தரும் காய்க றித் தோட்டம் திட்டம், புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம்,

    மின் சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணி யின்போது காலமானவர்க ளின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதி வண்டிகள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு திட் டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக அமைக் கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொது மக்கள் பார்வையிட்டு அர சின் திட்டங்களை தெரிந் துகொண்டு அனைத்துத் திட்டத்தின்கீழ் வழங்கப்ப டும் அரசு நலத்திட்ட உத விகளை பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவி த்தார்.

    • சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு
    • வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி அசம்பு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சாந்தி (வயது 56).

    இவர் தற்பொழுது குலசேகரபட்டினம் கோவி லுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார். நேற்று மாலை வீட்டிலிருந்து சாந்தி பக்கத்து தெருவில் சீட்டு பணம் கட்டுவதற்காக சென்றார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப் பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி அவரது மகன் முகேஷ் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டில் இருந்து சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மேல் கூரை வழியாக ஏறி குதித்து தப்பி ஓடினார்.

    இதையடுத்து அவரை பிடிக்க முயன்றனர்.ஆனால் அவர் தப்பி ஓடி விட்டார். வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் பீரோவை உடைத்து அதிலிருந்த 4½ பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை திருடி சென்று இருந்தார். இதுகுறித்து வடசேரி போலீ சுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது .

    சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்திய சோபன்,மாணிக்கம் ஆகியோர் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இதுகுறித்து சாந்தி கொடுத்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிள் - செல்போன்கள் பறிமுதல்
    • கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா, புகையிலை நடமாட்டத்தை கண்காணிக்க 7 தனிப்படை கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இதை யடுத்து தற்பொழுது கஞ்சா விற்பனை சற்று கட்டுக்குள் இருந்து வருகிறது.

    இருப்பினும் வெளி மாநிலங்களில் இருந்து கொரியர் மூலமாக கொண்டு வரப்பட்டு கஞ்சாவை விற்பனை செய்து வருகிறார்கள். குறிப்பாக ஆந்திராவில் இருந்து அதிக அளவில் கஞ்சா புழக்கத்தில் கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளது. இதை கட்டுப்படுத்தவும் போலீ சார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் தலைமையிலான போலீசார் வெட்டூர்ணி மடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்த போது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 2 கிலோ 800 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவர்களிடம் விசா ரணை நடத்திய போது, வாத்தியார் விளையை சேர்ந்த அஜீத், பெரு விளையை சேர்ந்த செல்வன் என்பது தெரிய வந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.இவர்கள் பரமார்த்தலிங்க புரத்தைச் சேர்ந்த ஜெரீஸ் என்பவரிடமிருந்து கஞ்சாவை வாங்கி வந்ததாக தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் அவரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.அஜித், செல்வன்,ஜெரீஸ் ஆகியோர் மீது வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அஜித் மீது ஏற்கனவே இரணியல், நேசமணி நகர், ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இதே போல் செல்வன் மீதும் இரணியல் மற்றும் வடசேரி போலீசில் வழக்கு கள் உள்ளது. தலைமறை வாக உள்ள ஜெரீசை பிடித்தால் தான் கஞ்சா எங்கிருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது என்ற விவரம் தெரியவரும். எனவே அவரை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பொற்றேல்கானத்து கோணம் பகுதியைச் சேர்ந்தவர் அனி (26). இவர் மேல்புறம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் தலைமையிலான போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று அனியை பிடித்து அவரிடம் இருந்த பையை சோதனை செய்த போது அந்தப் பையில் சின்னச்சின்ன பொட்ட லங்களாக 100 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அனியை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • நாகர்கோவில் உபமின் நிலையத்தில் நாளை மறுநாள் (20-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரங் களை அகற்றுவதற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மின் வினியோக செயற் பொறி யாளர் ஜவகர் முத்து வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் உபமின் நிலையத்தில் நாளை மறுநாள் (20-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இத னால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான வல்லன் குமாரன்விளை, தடிக்கா ரன்கோணம், வடசேரி, ஆசாரிபள்ளம் உபமின் நிலையங்களிலும் மற்றும் நாகர்கோவில், பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன் கோவில், எம்.எஸ்.ரோடு,

    காலேஜ் ரோடு, கோர்ட் ரோடு, கே.பி.ரோடு, பால் பண்ணை, நேசமணி நகர், ஆசாரிபள்ளம், ேதாப்பூர், வேம்பனூர், அனந்தன் நகர், பார்வதிபுரம், புத்தேரி, இறச்சக்குளம், ராஜாக்கமங்கலம், கணபதிபுரம், பழவிளை, தாராவிளை, எறும்புக்காடு, ஆலங்கோட்டை, சூரப்பள் ளம், பேயோடு உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    மேலும் மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரங் களை அகற்றுவதற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி, நாகர் கோவில், தக்கலை, குளச்சல் சப்- டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மேற் பார்வையில் 7 தனிப்படை கள் அமைக்கப்பட்டு கண் காணிப்பு பணி மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இரணியல் அருகே நெட்டாங்கோடு பகுதியில் வீடு ஒன்றில் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு போலீசார் அந்த வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தி னார்கள்.

    அப்போது வீட்டில் ஒரு கிலோ கஞ்சா மற்றும் 2 கிலோ போதைப் பொருட் கள் இருந்தது கண்டுபிடிக் கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் விலை உயர்ந்த போதை பொருட்கள் என்று கூறப்படுகிறது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அந்த போதை பொருளை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். அங்கிருந்த 3 பேரும் சிக்கினார்கள். பிடிபட்ட மூன்று பேரி டமும் போலீசார் விசா ரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் அவர்கள் நரைன் (வயது 34), விமல் (21), அசாருதீன் (29) என்பது தெரிய வந்தது. இவர்களை இரணியல் போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற் கொண்ட னர். கஞ்சா மற்றும் போதை பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கி வந்து இங்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.இந்த கஞ்சா மற்றும் போதை பொருட்கள் சப்ளையில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கஞ்சா மற்றும் 2 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.

    வடசேரி பகுதியில் போலீசார் ரோந்து பணி யில் ஈடுபட்டபோது சந்தேகப்படும் படியாக நின்ற மூன்று நபர்களை பிடித்து விசாரித்தனர்.அப்போது அவர்களிடம் 450 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை பள்ளி மாண வர்களுக்கு சப்ளை செய்ய வைத்திருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து வடக்கு சூரங்குடியைச் சேர்ந்த சிவன், வாழை யத்துவயலை சேர்ந்த ஆதிஸ் (20) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் தெற்குச் சூரங்கு டியைச் சேர்ந்த அரவிந்த் மீது வழக்குப்பதிவு செய்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தூய்மை பணியை மேற்கொள்ள நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து வடசேரி பஸ் நிலையத்தில் தூய்மை பணியை மேயர் மகேஷ் இன்று காலை தொடங்கி வைத்தார். இந்த எந்திரத்தின் மூலமாக கழிவறைகள் நவீன முறையில் சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து மேயர் மகேஷ் பொன்னப்ப நாடார் காலனியில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான சாலை பணியையும் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஆணை யாளர் ஆனந்த மோகன்,தி.மு.க மாநகர செயலாளர் ஆனந்த், மண்டல தலைவர் முத்துராமன், கவுன்சிலர் நவீன்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . வ.உ.சி. பிறந்த நாளையொட்டி தாழக்குடியில் உள்ள அவரது சிலைக்கு மேயர் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • சாலையில் ஓடையின் மேல் கட்டப்பட்டிருந்த படிக்கட்டுகள் தகர சீட்டுகளை அகற்றினார்கள்.
    • ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டதையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ஓடையின் மேல் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயர் மகேஷ் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மாநகர் முழுவதும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வடசேரி பகுதியில் இன்று 4-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    வடசேரி முதல் வெட்டூர்ணி மடம் வரை உள்ள சாலையில் ஓடையின் மேல் கட்டப்பட்டிருந்த படிக்கட்டுகள் தகர சீட்டுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அகற்றினார்கள். ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டதையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • உழவர் சந்தைகளுக்கு காய்கறி வரத்து அதிகரிக்க ஆலோசனை
    • நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் நிறைந்த நீடித்த நஞ்சில்லா காய்கறிகள் கிடைக்க வழி

    கன்னியாகுமரி:

    உழவர் சந்தைகளில் காய்கறி வரத்து அதிகரிப்பதற்காகவும் நுகர்வோர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் பொருட்டும் விவசாயிகளின் இல்லங்களில் மகிழ்ச்சி அதிகரிப்பதற்காகவும் தோட்டக்கலை மலைப் பயிர்கள் துறை, சென்னை இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநர் கண்ணன், கன்னியாகுமரியில் தோட்டக்கலை- மலைப்பயிர்கள் துறை அதிகாரிகள், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, மாவட்ட மற்றும் வட்டார அதிகாரிகளுடன் கள ஆய்வு மேற்கொண்டார்.

    வட்டார வாரியாக விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு காய்கறி சாகுபடி செய்து காய்கறி வரத்தினை அதிகரிக்கவும், அரசு தோட்டக்கலைப்பண்ணை விளை பொருட்களுக்கான தனி அங்காடி ஒதுக்கப்பட்டு காய்கறி விதைகள், கண்கவர் அலங்கார செடிகள், பூந்தொட்டிகள், உயிர் உரங்கள், தேனீ மகத்துவ மையத்திலிருந்து தயாரிக்கப்படும் தேன் மற்றும் இதர பண்ணை விளைபொருட்களையும் விற்பனை செய்யப்படும் விற்பனை மையத்தினையும் அவர் பார்வையிட்டார்.

    தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் மாநில அபிவிருத்தி திட்டத்தின் மூலம் உழவர் சந்தையினை சுற்றியுள்ள வட்டாரங்களில் காய்கறி பரப்பினை அதிகரிப்பதன் மூலம் உழவர் சந்தைகளுக்கு காய்கறி வரத்து அதிகரிக்கவும் ஆலோசனை கூறினார்.

    தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து கள ஆய்வு நடத்துவதன் மூலம் உழவர் சந்தைகளுக்கு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்வதோடு மட்டுமல்லாமல் நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் நிறைந்த நீடித்த நஞ்சில்லா காய்கறிகள் கிடைக்க வழி பிறக்கும் என அறிவுரை வழங்கப்பட்டது.

    வடசேரி மற்றும் மயிலாடி உழவர் சந்தைகளில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் நோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலாஜான் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், வேளாண் அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×