search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோட்டக்கலை கூடுதல் இயக்குநர்"

    • உழவர் சந்தைகளுக்கு காய்கறி வரத்து அதிகரிக்க ஆலோசனை
    • நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் நிறைந்த நீடித்த நஞ்சில்லா காய்கறிகள் கிடைக்க வழி

    கன்னியாகுமரி:

    உழவர் சந்தைகளில் காய்கறி வரத்து அதிகரிப்பதற்காகவும் நுகர்வோர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் பொருட்டும் விவசாயிகளின் இல்லங்களில் மகிழ்ச்சி அதிகரிப்பதற்காகவும் தோட்டக்கலை மலைப் பயிர்கள் துறை, சென்னை இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநர் கண்ணன், கன்னியாகுமரியில் தோட்டக்கலை- மலைப்பயிர்கள் துறை அதிகாரிகள், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, மாவட்ட மற்றும் வட்டார அதிகாரிகளுடன் கள ஆய்வு மேற்கொண்டார்.

    வட்டார வாரியாக விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு காய்கறி சாகுபடி செய்து காய்கறி வரத்தினை அதிகரிக்கவும், அரசு தோட்டக்கலைப்பண்ணை விளை பொருட்களுக்கான தனி அங்காடி ஒதுக்கப்பட்டு காய்கறி விதைகள், கண்கவர் அலங்கார செடிகள், பூந்தொட்டிகள், உயிர் உரங்கள், தேனீ மகத்துவ மையத்திலிருந்து தயாரிக்கப்படும் தேன் மற்றும் இதர பண்ணை விளைபொருட்களையும் விற்பனை செய்யப்படும் விற்பனை மையத்தினையும் அவர் பார்வையிட்டார்.

    தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் மாநில அபிவிருத்தி திட்டத்தின் மூலம் உழவர் சந்தையினை சுற்றியுள்ள வட்டாரங்களில் காய்கறி பரப்பினை அதிகரிப்பதன் மூலம் உழவர் சந்தைகளுக்கு காய்கறி வரத்து அதிகரிக்கவும் ஆலோசனை கூறினார்.

    தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து கள ஆய்வு நடத்துவதன் மூலம் உழவர் சந்தைகளுக்கு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்வதோடு மட்டுமல்லாமல் நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் நிறைந்த நீடித்த நஞ்சில்லா காய்கறிகள் கிடைக்க வழி பிறக்கும் என அறிவுரை வழங்கப்பட்டது.

    வடசேரி மற்றும் மயிலாடி உழவர் சந்தைகளில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் நோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலாஜான் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், வேளாண் அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×