search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்கள் ரத்து"

    • சென்னை கும்மிடிப்பூண்டி ரெயில் மார்க்கத்தில் புறநகர் ரெயில்கள் பகுதி சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
    • 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை பராமரிப்பு பணி நடைபெறும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    கும்மிடிப்பூண்டி:

    சென்னை கும்மிடிப்பூண்டி ரெயில் மார்க்கத்தில் புறநகர் ரெயில்கள் பகுதி சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    கும்மிடிப்பூண்டிக்கும் பொன்னேரிக்கும் இடையே ரெயில்வே பராமரிப்பு பணி காரணமாக நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ரெயில் ரத்து செய்யப்படுகிறது. 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை பராமரிப்பு பணி நடைபெறும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • வேலூர் மாவட்டம், திருவலம் இடையே ரெயில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது.
    • கோவை மெயின் லைனில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு சில ரெயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    ராணிப்பேட்டை மாவட்டம் முகுந்தராயபுரம் - வேலூர் மாவட்டம், திருவலம் இடையே ரெயில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது.இதனால் திருப்பூர் வழியாக சென்னை - கோவை மெயின் லைனில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு சில ரெயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி 2023 ஜனவரி 3 மற்றும், 4ந் தேதி 2நாட்களும், சென்னையில் காலை 6:10 மணிக்கு புறப்பட்டு மதியம், 2:05 மணிக்கு கோவை வரும் கோவை எக்ஸ்பிரஸ், மதியம் 3:15 மணிக்கு கோவையில் புறப்பட்டு இரவு 10:50 மணிக்கு சென்னை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது.ஜனவரி 4ந் தேதி காலை 7:10 மணிக்கு சென்னையில் புறப்பட்டு மதியம் 2:15 மணிக்கு கோவை வரும் சதாப்தி சூப்பர்பாஸ்ட் (12243) இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது என ரெயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மயிலாடுதுறையில் இருந்து பயணிகள் விழுப்புரத்திற்கு டிக்கெட் பெற்றுக் கொண்டு வந்து கொண்டிருந்தனர்‌.
    • வருங்காலங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்‌.

    கடலூர்:

    விழுப்புரம் பகுதியில் ெரயில்வே தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ெரயில்கள் இயங்காது என ெரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தனர். இன்று காலை மயிலாடுதுறையில் இருந்து பயணிகள் விழுப்புரத்திற்கு டிக்கெட் பெற்றுக் கொண்டு வந்து கொண்டிருந்தனர்‌. அப்போது கடலூர் முதுநகர் ெரயில் நிலையத்திலிருந்து ெரயில் செல்லாது என அதிகாரிகள் அறிவித்து ெரயிலில் இருந்த பயணிகளை உடனடியாக இறங்குமாறு அறிவுறுத்தினர். அப்போது இதனை கேட்ட ெரயில் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்து ெரயில்வே துறை அதிகாரியிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். அப்போது விழுப்புரம் பகுதியில் ெரயில்வே தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் விழுப்புரம் வரை ெரயில்கள் இயங்காது என தெரிவித்தனர்.

    அப்போது பொதுமக்கள் கடும் கோபம் அடைந்து எதற்காக விழுப்புரம் வரை ெரயில் டிக்கெட் வழங்கீனர்கள்? இதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள்? என அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் இது சம்பந்தமாக ெரயில்வே துறை உயர் அதிகாரி களிடம் தெரிவித்து வருங்காலங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்‌. தற்போது கடலூர் முதுநகரில் இருந்து அவர் அவர்கள் எடுத்த ெரயில் கட்டணத்தை மீதி தொகை வழங்கப்படும் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ரயில்வே துறை அதிகாரிகள் பொது மக்களுக்கு வழங்கக்கூடிய ரயில் கட்டணத்தை வழங்கினர். பின்னர் பொதுமக்கள் அவசர அவசரமாக கொட்டும் மழையில் நனைந்தபடி பஸ்சில் செல்வதற்கு ஓடினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • மகாராஷ்டிரா சோலாப்பூரில் இரட்டைப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது
    • புனே செல்லும் தினசரி ரெயில் 6, 8-ந் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது

    கோவை:

    சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    மத்திய ரெயில்வே மகாரா ஷ்டிரா மாநிலம் சோலா ப்பூர் கோட்டத்தில் பிக்வான் - வாஷிம்பே ரெயில் நிலையங்களுக்கு இடையே இரட்டைப் பாதைகள் அமைப்பத ற்கான பொறியியல் பணிகள் நடந்து வரு கிறது. எனவே கோவை வழியாக செல்லும் 4 ரெயில் களின் சேவை ரத்து செய்யப்ப ட்டுள்ளது. அதன்படி கன்னியா குமரியில் இருந்து கோவை, சே லம் வழியாக புனே செல்லும் தினசரி ரெயில் 6, 8-ந் தேதிகளில் ரத்து செய்யப்ப ட்டுள்ளது.

    அதேபோல புனேவில் இருந்து சேலம், கோவை வழியாக கன்னியா குமரி செல்லும் ரெயில் 7,9-ந்தேதி களில் ரத்து செய்யப் பட்டுள்ளது. மேலும் கோவை யில் இருந்து திருப்பூ ர், சேலம், திருப்பத்தூர் வழியாக ராஜ்கோட் செல்லும் ரெயில் 5-ந் தேதி ரத்து செய்ய ப்பட்டுள்ளது இதுபோல ராஜ்கோட்டில் இருந்து திருப்பத்தூர், சேலம், திருப்பூர் வழியாக கோவை வரும் ரெயில் 7-ந்தேதி ரத்து செய்ய ப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • கிழக்கு மத்திய ரெயில்வேயில் எட்டு ரெயில்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறோம்.
    • இதுவரை 200க்கும் மேற்பட்ட ரெயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இதன் எதிரொலியால், பீகார், உத்தரப் பிரதேசம், அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, பீகார், உ.பி மாநிலங்களில் ரெயில்களில் தீ வைத்து எரித்ததால் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.

    இதனால், சுமார் 35 ரெயில்கள் ரத்து செய்யப்ப்டடுள்ளதாகவும், 13 குறுகிய கால இடைவெளியில் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் இதுவரை 200க்கும் மேற்பட்ட ரெயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    போராட்டம் காரணமாக, மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மத்திய ரெயில்வேயில் எட்டு ரெயில்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருவதாகவும், நிலைமை மாறும்போது அவற்றின் இயக்கம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் ரெயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
    கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பியதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் தத்தளித்தது.

    மழை காரணமாக கன்னியாகுமரி- நாகர்கோவில்- திருவனந்தபுரம் ரெயில் வழித்தடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ரெயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆகவே, 4 ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. 17 ரெயில்கள் பகுதிவாரியாக ரத்து செய்யப்படுவதாகவும் தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.

    கொல்லம்- திருவனந்தபுரம் சென்டிரல் தினசரி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் சந்திப்பு- திருவனந்தபுரம் சென்டிரல் தினசரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் சென்டிரல்- நாகர்கோவில் சந்திப்பு தினசரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் சென்டிரல்- நாகர்கோவில் சந்திப்பு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
    ×