என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவை வழியாக செல்லும் 4 ரெயில்கள் ரத்து
- மகாராஷ்டிரா சோலாப்பூரில் இரட்டைப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது
- புனே செல்லும் தினசரி ரெயில் 6, 8-ந் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது
கோவை:
சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-
மத்திய ரெயில்வே மகாரா ஷ்டிரா மாநிலம் சோலா ப்பூர் கோட்டத்தில் பிக்வான் - வாஷிம்பே ரெயில் நிலையங்களுக்கு இடையே இரட்டைப் பாதைகள் அமைப்பத ற்கான பொறியியல் பணிகள் நடந்து வரு கிறது. எனவே கோவை வழியாக செல்லும் 4 ரெயில் களின் சேவை ரத்து செய்யப்ப ட்டுள்ளது. அதன்படி கன்னியா குமரியில் இருந்து கோவை, சே லம் வழியாக புனே செல்லும் தினசரி ரெயில் 6, 8-ந் தேதிகளில் ரத்து செய்யப்ப ட்டுள்ளது.
அதேபோல புனேவில் இருந்து சேலம், கோவை வழியாக கன்னியா குமரி செல்லும் ரெயில் 7,9-ந்தேதி களில் ரத்து செய்யப் பட்டுள்ளது. மேலும் கோவை யில் இருந்து திருப்பூ ர், சேலம், திருப்பத்தூர் வழியாக ராஜ்கோட் செல்லும் ரெயில் 5-ந் தேதி ரத்து செய்ய ப்பட்டுள்ளது இதுபோல ராஜ்கோட்டில் இருந்து திருப்பத்தூர், சேலம், திருப்பூர் வழியாக கோவை வரும் ரெயில் 7-ந்தேதி ரத்து செய்ய ப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






