search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train cancel"

    • ரெயில் குமாரமங்கலம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது.
    • திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் 20 நிமிடம் நிறுத்தப்பட்டு பிறகு புறப்படும்.

    தஞ்சாவூர்:

    திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக சில விரைவு ரெயில் சேவையில் மாற்றம் மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி மன்னார்குடி-பகத்கீ கோதி அதிவிரைவு ரெயில் (வண்டி எண்-22674) நாளை (திங்கட்கிழமை) முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

    இதேபோல் பகத்கீ கோதி-மன்னார்குடி அதிவிரைவு ரெயில் (வண்டி எண்-22673) வரும் 11-ந் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

    மேல்மருவத்தூர்-விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரெயில் (06725) முண்டியம்பாக்கம்-விழுப்புரம் இடையேயும், விழுப்புரம்-மேல்மருவத்தூர் முன்பதிவில்லா மெமு ரெயில் (06726) விழுப்புரம்-முண்டியம்பாக்கம் இடையேயும் நாளை மற்றும் 13,20,22,27,29 ஆகிய தேதிகளில் என 6 நாட்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

    இதேபோல் காரைக்குடி-திருச்சி முன்பதிவில்லா விரைவு ரெயில் (06888) 9, 23 ஆகிய தேதிகளில் குமாரமங்கலம்-திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் குமாரமங்கலம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது.

    ஈரோடு-திருச்சி முன்பதிவில்லா விரைவு ரெயில் (06810) 9, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் 20 நிமிடம் நிறுத்தப்பட்டு பிறகு புறப்படும்.

    திருச்சி-ஸ்ரீ கங்காப்பூர் விரைவு ரெயில் (22498) 12-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு ஹூப்ளி கோட்டத்தில் நிறுத்தப்பட்டு அதன் பிறகு இயக்கப்படும்.

    பெரோஸ்பூர்-மண்டபம் ஹம்ஸபர் விரைவு ரெயில் (20973) 13-ந் தேதியும், மண்டபம்-பெரோஸ்பூர் விரைவு ரெயில் (20974) 16-ந் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன.

    மேற்கண்ட தகவலை ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வட மாநிலங்களில் தீவிரமடையும் போராட்டத்தால் 35 ரெயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
    • இதுவரை 200க்கும் மேற்பட்ட ரெயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

    மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி, பீகார், உத்தரப் பிரதேசம், அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, பீகார், உ.பி மாநிலங்களில் ரெயில்களில் தீ வைத்து எரித்ததால் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.

    பீகார் மாநிலம் தன்பூர் ரயில் நிலையத்தில் 1500க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது  அவர்கள் அங்கிருந்து பொருட்களை சேதப்படுத்தினர். ரெயில்களுக்கு தீ வைப்பு சம்பங்களும் அரங்கேறின. இது தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை சிசிடிவி கேமிரா பதிவின் மூலம் அடையாளம் காணப்பட்டு வருவதாக பாட்னா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்த போராட்டம் காரணமாக இதனால், சுமார் 35 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 13 குறுகிய கால இடைவெளியில் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் இதுவரை 200க்கும் மேற்பட்ட ரெயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் மாணவர்கள் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்னிபாத் திட்டம் திரும்ப பெறப்பட வேண்டும் என்றும், அதற்கு பதில் நிரந்தர வேலை வாய்ப்பு வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த போராட்டம் காரணமாக டெல்லி கேட் மற்றும் மஜ்ஜித் மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன

    இந்நிலையில் அக்னிபாத் போராட்டத்தில் ஈடுபடுவோர் வன்முறையை தவிர்க்குமாறும், ரெயில்வே சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் என்றும் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    • கிழக்கு மத்திய ரெயில்வேயில் எட்டு ரெயில்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறோம்.
    • இதுவரை 200க்கும் மேற்பட்ட ரெயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இதன் எதிரொலியால், பீகார், உத்தரப் பிரதேசம், அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, பீகார், உ.பி மாநிலங்களில் ரெயில்களில் தீ வைத்து எரித்ததால் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.

    இதனால், சுமார் 35 ரெயில்கள் ரத்து செய்யப்ப்டடுள்ளதாகவும், 13 குறுகிய கால இடைவெளியில் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் இதுவரை 200க்கும் மேற்பட்ட ரெயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    போராட்டம் காரணமாக, மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மத்திய ரெயில்வேயில் எட்டு ரெயில்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருவதாகவும், நிலைமை மாறும்போது அவற்றின் இயக்கம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×