search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிஷப் ஷெட்டி"

    • நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது.
    • இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'வராக ரூபம்' பாடல் காப்புரிமை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.

    நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. கன்னடத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.

    காந்தாரா  

    காந்தாரா  

    இதனிடையே காந்தாராவில் இடம்பெற்றிருந்த சூப்பர்ஹிட் பாடலான வராக ரூபம் கேரளாவைச் சேர்ந்த பிரபல இசைக் குழுவான தாய்க்குடம் பிரிட்ஜ்ஜின் நவரசம் பாடலை காப்பி அடித்து உருவாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து, கேரளாவின் கோழிக்கோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கை விசாரித்த நீதிமன்றம், தாய்க்குடம் பிரிஜ் இசைக்குழுவின் அனுமதி இல்லாமல் வராக ரூபம் பாடலை திரையரங்கம் மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஓடிடி தளத்தில் வராக ரூபம் பாடல் இடம்பெறாமல் காந்தாரா திரைப்படம் வெளியானது. அதன்பின்னர் இந்த பாடலுக்கான தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    காந்தாரா  

    காந்தாரா  

    இது தொடர்பான வழக்கில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி ஆகியோருக்கு கேரள உயர் நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியது. அத்துடன் வராகரூபம் பாடல் இடம்பெறாமல் படத்தை திரையிட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனையை எதிர்த்து இருவரும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கேரள உயர்நீதிமன்றம் விதித்த ஜாமின் நிபந்தனைக்கு இடைக்கால தடை விதித்தது.

    இந்நிலையில் காந்தாரா படத்தின் கேரளா விநியோக உரிமையை பெற்றிருந்த பிருத்விராஜ் சுகுமாரன் மீது தொடரப்பட்ட பதிப்புரிமை மீறல் தொடர்பான வழக்குக்கு தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு.

    • இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் ‘காந்தாரா’.
    • இப்படம் அனைத்து மொழிகளிலுமே வசூலை குவித்தது.

    நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.

    கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில், 'காந்தாரா' படம் குறித்து புதிய செய்தி பரவி வருகிறது.

    அதன்படி, இப்படத்தை ஆங்கிலத்தில் டப்பிங் செய்து வெளிநாடுகளில் திரையிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • 14-வது சர்வதேச விமான தொழில் கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று தொடங்கியது.
    • ரோஇந்தியா கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

    பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, 14-வது சர்வதேச விமான தொழில் கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 17-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

    ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி நிகழ்வான ஏரோஇந்தியா கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்நிலையில் பிரதமர் மோடி பெங்களூரில் 'காந்தாரா' பட இயக்குனர் ரிஷப் ஷெட்டி, கே.ஜி.எப். நடிகர் யஷ், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி உள்ளிட்ட கன்னட திரையுலகைச் சேர்ந்தவர்களை சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    மேலும், இந்த சந்திப்பின் போது கன்னட சினிமா குறித்தும் கன்னட திரையுலகில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் மோடியுடன் பேசியதாக கூறப்படுகிறது. 

    • நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது.
    • இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'வராக ரூபம்' பாடல் காப்புரிமை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

    நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இது கன்னடத்தில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.

    இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர். இதையடுத்து இப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

    இதனிடையே காந்தாராவில் இடம்பெற்றிருந்த சூப்பர்ஹிட் பாடலான வராஹரூபம் கேரளாவைச் சேர்ந்த பிரபல இசைக் குழுவான தாய்க்குடம் பிரிட்ஜ்ஜின் நவரசம் பாடலை காப்பி அடித்து உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக கேரளாவின் கோழிக்கோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தாய்க்குடம் பிரிஜ் இசைக்குழுவின் அனுமதி இல்லாமல் வராக ரூபம் பாடலை திரையரங்கம் மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஓடிடி தளத்தில் வராக ரூபம் பாடல் இடம்பெறாமல் காந்தாரா திரைப்படம் வெளியானது. அதன்பின்னர் இந்த பாடலுக்கான தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இது தொடர்பான வழக்கில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி ஆகியோருக்கு கேரள உயர் நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியது. அத்துடன் வராகரூபம் பாடல் இடம்பெறாமல் படத்தை திரையிட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனையை எதிர்த்து இருவரும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கேரள உயர்நீதிமன்றம் விதித்த ஜாமின் நிபந்தனைக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் விசாரணை அதிகாரி முன்பு மனுதாரர்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். அப்போது அவர்கள் கைது செய்யப்பட்டால் ஜாமின் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    • ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் 'காந்தாரா'.
    • இப்படத்தின் இரண்டாம் பாகம் 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

    கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இது கன்னடத்தில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.

    காந்தாரா

    இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர். இதையடுத்து இப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

    காந்தாரா

    இதில் இயக்குனர் ரிஷப் ஷெட்டி பேசியதாவது, "கடந்த ஆண்டு வெளியானது 'காந்தாரா' படத்தின் இரண்டாம் பாகம். இப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும். இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது குறித்தும் அந்த தெய்வத்தின் பின்னணி குறித்தும் சொல்லும் கதைக்களமாகத் தான் அமையும். கதைக்கான பணி நடந்து கொண்டிருப்பதால் படம் குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும்" என்று கூறியுள்ளார்.

    • இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘காந்தாரா’.
    • இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகவுள்ளது.

    கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இது கன்னடத்தில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.

    காந்தாரா

    ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து இப்பம் உருவாகியிருந்தது. ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் படத்தை பாராட்டினர்.

    காந்தாரா

    இந்நிலையில், 'காந்தாரா 2' திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகவுள்ளதாகவும் இது சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாக உள்ளதாகவும் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், 'காந்தாரா 2' திரைப்படம் மழைக்காலங்களில் எடுக்க வேண்டிய தேவையுள்ளதால் வருகிற ஜூன் முதல் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    • ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி வெற்றிபெற்ற திரைப்படம் காந்தாரா.
    • ரூ. 8 கோடியில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இது கன்னடத்தில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.

    ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து இப்பம் உருவாகியிருந்தது. ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் படத்தை பாராட்டினர்.

    இந்நிலையில், காந்தாராவின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அதன் உண்மை கதாபாத்திரமான பஞ்சுருளியிடம் படக்குழு ஆசிப்பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள படக்குழு, "நீங்கள் இயற்கையிடம் சரணடைந்து, வாழ்க்கையில் இத்தகைய வெற்றியையும் சுதந்திரத்தையும் உங்களுக்கு வழங்கிய கடவுளை வணங்குங்கள். கந்தாரா படக்குழு தெய்வீகத்தை நிஜ வடிவில் தரிசனம் செய்து தெய்வத்தின் அருளைப் பெற்றனர்!" என்று பதிவிட்டுள்ளனர்.

    • ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
    • காந்தாரா திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் இரண்டு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இது கன்னடத்தில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.

    காந்தாரா

    ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து இப்பம் உருவாகியிருந்தது. ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் படத்தை பாராட்டினர்.

    கமல்ஹாசனின் வாழ்த்து மடல்

    இதையடுத்து காந்தாரா திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் இரண்டு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்து மடல் ஒன்றை பரிசளித்துள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரிஷப் ஷெட்டி "இந்திய சினிமாவின் லெஜெண்டிடம் இருந்து இது போன்ற பாராட்டை பெறுவதை மிகப்பெரிதாக கருதுகிறேன். கமல் சாரின் இந்த எதிர்பாராத பரிசை பார்த்து வியப்படைந்தேன்." என்று பதிவிட்டுள்ளார்.  

    • ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் காந்தாரா.
    • இப்படம் அனைத்து மொழிகளிலும் வசூலை அள்ளியது.

    இந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இது கன்னடத்தில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.

    காந்தாரா

    ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து இப்பம் உருவாகியிருந்தது. ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் படத்தை பாராட்டினர்.

    காந்தாரா

    இந்நிலையில் காந்தாரா திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது . இதை காந்தாரா படத்தை தயாரித்த ஹோம்பலே நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், காந்தாரா இரண்டு ஆஸ்கர் தகுதிகளைப் பெற்றுள்ளதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்! எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி" என்று தெரிவித்துள்ளது.

    • நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் 'காந்தாரா' .
    • ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது.

    காந்தாரா

    இதையடுத்து, படத்தை மற்ற மொழிகளில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்து, இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சமீபத்தில் 'காந்தாரா' திரைப்படம் வெளியிடப்பட்டது. ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    காந்தாரா போஸ்டர்

    இந்நிலையில், 'காந்தாரா' திரைப்படம் 100 நாட்களை எட்டியுள்ளது. இது குறித்து இயக்குனர் ரிஷப் ஷெட்டி தனது சமூக வலைதளத்தில், "நாம் எப்போதும் போற்றும் ஒரு திரைப்படம் நமது வேர்களை திரும்பி பார்க்க வைத்து கலாச்சாரத்தின் மீது பிரம்மிப்பை ஏற்படுத்தும். இதை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார்.

    • ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • தற்போது காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

    இந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இது கன்னடத்தில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். இப்படம் அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.

    காந்தாரா

    காந்தாரா

    ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து இப்பம் உருவாகியிருந்தது. படத்தில் இடம்பெற்ற மாடு விரட்டும் காட்சியும், தெய்வகோலா என்கிற சாமியாட்ட காட்சியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் படத்தை பாராட்டினர்.

    காந்தாரா

    காந்தாரா

    காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு பதில் அளித்து படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் கூறும்போது, "காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக தயாராகும். முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது முதல் பாகத்துக்கு முந்தைய காலத்து கதையாகவோ அது இருக்கும். ரிஷப் ஷெட்டியுடன் கதை குறித்து விரைவில் விவாதிக்கப்படும்'' என்றார்.

    • நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’.
    • இந்த திரைப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.

    நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது. இதையடுத்து, படத்தை மற்ற மொழிகளில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்து, இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சமீபத்தில் 'காந்தாரா' திரைப்படம் வெளியிடப்பட்டது.

    காந்தாரா

    காந்தாரா

    இப்படம் வெளியான அனைத்து மொழிகளிலும் வசூலில் சாதனை படைத்தது. 'காந்தாரா' திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.400 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலரும் பாராட்டினர்.

    காந்தாரா

    காந்தாரா

    இந்நிலையில் 'காந்தாரா' படத்தை பார்த்த நடிகர் ஹிரித்திக் ரோஷன், இப்படம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'காந்தாரா' படத்தை பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன். ரிஷப் ஷெட்டி படத்தை உருவாக்கிய விதம் அசாதாரணமானது. சிறந்த கதைசொல்லல், இயக்கம் & நடிப்பு. படத்தின் கிளைமாக்ஸ் எனக்கு வியப்பை அளித்தது. படக்குழுவுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    ×