search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜேஷ் தாஸ்"

    • சிறைக்கு செல்வதற்கு விலக்கு அளிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜேஷ் தாஸ் மனு தாக்கல் செய்தார்.
    • சிறைக்குச் செல்ல விலக்கு கேட்கும் மனுவை ஐகோர்ட்டு நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார்.

    சென்னை:

    தமிழ்நாடு சிறப்பு டி.ஜி.பி.யாக பதவி வகித்தவர் ராஜேஷ் தாஸ். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலமைச்சர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவருடன் சென்ற சிறப்பு டி.ஜி.பி., ஒரு பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு தன் காரில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு இருந்தது.

    இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு விசாரித்தது. பின்னர் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை விழுப்புரம் மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டு உறுதி செய்தது.

    2 கோர்ட்டுகளும் தண்டனை வழங்கியதால், ராஜேஷ் தாஸ் சிறைக்குள் சென்று விட்டு, அதன் பின்னர் தான் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

    ஆனால் சிறைக்கு செல்வதற்கு விலக்கு அளிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜேஷ் தாஸ் மனு தாக்கல் செய்தார். அதில் காவல் துறையில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த தான் சிறைக்கு சென்றால் அது தனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். மேலும் கீழ் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடும் செய்துள்ளார். இதில், சிறைக்குச் செல்ல விலக்கு கேட்கும் மனுவை ஐகோர்ட்டு நீதிபதி எம்.தண்டபாணி கடந்த வாரம் விசாரித்தார். பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்று பிறப்பித்தார்.

    அப்போது ராஜேஷ் தாசின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். அவர் கீழ் கோர்ட்டில் சரண் அடைந்து சிறைக்கு சென்ற பின்னர் அவரது மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    • பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு அப்போதைய சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ், பாலியல் தொல்லை கொடுத்தார்.
    • ராஜேஷ்தாஸ் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கு சிபிசிஐடி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

    சென்னை:

    பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் தலைமறைவு என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கு சிபிசிஐடி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

    ராஜேஷ் தாஸ் தலைமறைவாகிவிட்டதாகவும், அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராஜேஸ் தாஸ் வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.

    முன்னதாக,

    தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு அப்போதைய சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ், பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதுகுறித்து பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கொடுத்த புகாரின்பேரில் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

    மேலும் முன்னாள் டி.ஜி.பி. உத்தரவின்பேரில் பெண் அதிகாரியின் காரை வழிமறித்து சாவியை பிடுங்கிய செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர்.

    இதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் தொடங்கியது. பலகட்ட விசாரணைக்கு பிறகு இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த மாவட்ட நீதிபதி, இம்மேல்முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 12-ந் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று அறிவித்தார்.

    இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராஜேஷ்தாஸ் தரப்பு வக்கீல்கள் பழனிவேல், ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி, சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருவதால் இவ்வழக்கை கள்ளக்குறிச்சி கோர்ட்டுக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், அதன் உத்தரவு வரும் வரை விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு தேதியை தள்ளிவைக்கும்படி மனுதாக்கல் செய்தனர்.

    இம்மனுவை ஏற்க மறுத்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, அதை தள்ளுபடி செய்தார். மேலும் ராஜேஷ்தாஸ், கண்ணன் ஆகியோரின் மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, கீழ்கோர்ட்டான விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் ராஜேஷ்தாசுக்கு விதித்த 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும், செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு
    • இந்த சம்பவம் தமிழக காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    முந்தைய அ.தி.மு.க ஆட்சியின்போது, பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளி என தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் தலைமறைவு ஆகியுள்ளார்.

    டி.ஜி.பி ராஜேஷ் தாஸை கைது செய்ய அவரது வீட்டிற்கு சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் சென்ற நிலையில், அவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடும் பணியை தொடங்கியுள்ளதாகவும் விசாரணை அதிகாரி ரேவதி தகவல் தெரிவித்துள்ளார்.

    தமிழக சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் போது பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார்.

    இந்த சம்பவம் தமிழக காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 16/06/2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அந்தத் தீர்ப்பில், பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு மேலும், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

    இந்நிலையில் ராஜேஸ்தாஸ் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

    • கீழ் கோர்ட்டான விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20 ஆயிரத்து 500 அபராதத்தை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
    • விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

    விழுப்புரம்:

    பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும் அவரது உத்தரவின்பேரில் பெண் அதிகாரியின் காரை வழிமறித்து சாவியை பிடுங்கிய செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து 2 பேரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். மேலும் இவ்வழக்கை வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்த நிலையில் அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    அதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ்தாஸ் சார்பில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு, பிப்ரவரி 23-ந்தேதிக்குள்ளாகவோ அதற்கு முன்னரோ விசாரித்து முடிக்க வேண்டுமென விழுப்புரம் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து ராஜேஷ்தாஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மற்றொரு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், சம்பவம் நடைபெற்ற கள்ளக்குறிச்சி தற்போது தனி மாவட்டமாகி விட்டது என்பதால் இவ்வழக்கை கள்ளக்குறிச்சி கோர்ட்டுக்கு மாற்ற வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, அம்மனுவை தள்ளுபடி செய்ததோடு ராஜேஷ்தாசின் மேல்முறையீட்டு மனுவை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமாவே விசாரிப்பார் என்று உத்தரவிட்டது.

    இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

    இதில் முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் இன்று (12-ந்தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ராஜேஷ்தாஸ் தரப்பில் வக்கீல்கள் பழனிவேல், ரவீந்திரன், ஹேமசந்திரன் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்கள். நாங்கள் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளோம். எனவே, காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் அதனை நீதிபதி பூர்ணிமா ஏற்கவில்லை.

    அதற்கான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் கீழ் கோர்ட்டான விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20 ஆயிரத்து 500 அபராதத்தை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு விதிக்கப்பட்டிருந்த ரூ.500 அபராத தொகையையும் உறுதி செய்து உத்தரவிட்டார்.

    • பெண் ஐ.பி.எஸ். அதிகாரி அளித்த புகாரின் பேரில் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
    • வழக்கு விசாரணைக்காக ஜன.12-ந்தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபிக்கு உத்தரவிட்டார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அவர் பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி அளித்த புகாரின் பேரில் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    இந்த புகார் தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பு அளித்தார்.

    இதையடுத்து 3 ஆண்டுகள் தண்டனையை எதிர்த்து ராஜேஸ்தாஸ் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    இந்நிலையில் மேல்முறையீடு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,

    மேல் முறையீட்டு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற மறுப்பு தெரிவித்தார். மேலும் வழக்கை மாற்றக்கோரிய ராஜேஸ் தாசின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    வழக்கு விசாரணைக்காக ஜன.12-ந்தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபிக்கு உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து ஜன.18-ந்தேதி இறுதி விசாரணையை துவங்கி 24-ந்தேதிக்குள் முடிக்க விழுப்புரம் அமர்வு நீதிமன்றத்துக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

    ×