search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகவ் சதா"

    • மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் இரண்டு கட்சிகளும் இடம் பிடித்துள்ளன.
    • ஆம் ஆத்மி ஆளும் டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை.

    இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் இடம் பிடித்துள்ளன. இந்த இரு கட்சிகளும் டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் போட்டியிடும் இடங்களை பிரித்துக் கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

    நேற்று இருகட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை காங்கிரஸ் தலைவர் முகுல் வாஸ்னிக் வீட்டில் நடைபெற்றது.

    இந்த பேச்சுவார்த்தை குறித்து ஆம் ஆத்மி கட்சி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராகவ் சதா கூறியதாவது:-

    இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இது கிரிக்கெட் போட்டி போன்றது கிடையாது. கிரிக்கெட்டில் பந்துக்கு பந்து வர்ணனை வழங்கப்படும். இங்கு அப்படி வழங்க முடியாது. காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் உங்களிடம் விரிவாக பேசியுள்ளார்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    டெல்லியில் 7 மக்களவை இடங்களும், பஞ்சாப் மாநிலத்தில் 13 இடங்களும் உள்ளன. இரண்டு மாநிலங்களிலும் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மக்களவை தேர்தலில் பா.ஜனதா டெல்லியில் ஏழு இடங்களிலும் வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

    இந்த இரண்டு மாநிலங்களை தவிர்த்து குஜராத், கோவா, ஹரியானா மாநிலங்களிலும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நாட்டில் தேர்தல் ஆணையத்தின் பங்கு முக்கியமானவை. தேர்தல் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்துவதை முடிவு செய்கிறது.
    • கட்சிகளின் சின்னம், தேர்வு அட்டவணை உள்ளிட்ட அனைத்தையும் தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்கிறது.

    இந்திய தேர்தல் ஆணையர் மற்றும் மற்ற தேர்தல் ஆணையர்கள் தேர்வு தொடர்பான மசோதா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்த நிலையிலும் மத்திய அரசு இந்த மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது.

    இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா கூறுகையில் "அரசு பில்டோசர் மூலம் ஜனநாயகத்தை கொலை செய்துள்ளது. அங்கே சுதந்திரம், பாரபட்சமற்ற தேர்தல் ஆணையம் இல்லை என்றால் எப்படி சுதந்திரம், பாரபட்சமற்ற தேர்தல் இருக்க முடியும்.

    நாட்டில் தேர்தல் ஆணையத்தின் பங்கு முக்கியமானவை. தேர்தல் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்துவதை முடிவு செய்கிறது. கட்சிகளின் சின்னம், தேர்வு அட்டவணை உள்ளிட்ட அனைத்தையும் தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்கிறது. நாங்கள் இதுகுறித்து எங்களுக்குள் ஆலோசனை நடத்தி, சட்டப்பூர்வ ஆலோசனைகள் பெறுவோம். அதன்பின் உச்சநீதிமன்றத்தில முறையீடு செய்வோம்" என்றார்.

    தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான 5 பேர் கொண்ட தேர்வு குழுவை தேர்ந்தெடுக்க மத்திய சட்ட மந்திரி தலைமையில் 3 பேர் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்படும். தேர்தல் கமிஷனர்களை தேர்வு செய்யும் குழுவில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பதிலாக மந்திரிசபை செயலாளர் இடம் பிடிப்பார் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×