என் மலர்

  நீங்கள் தேடியது "Parliament winter session"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  புதுடெல்லி:

  பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா உள்பட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என கருதப்பட்டது.

  இந்நிலையில், மக்களவை தொடங்கிய உடன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர்.

  மேலும், அவர்கள் தொடர் முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்களவையை இன்று நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்து மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டார்.

  இதையும் படியுங்கள்.. அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், பதில் அளிக்கவும் அரசு தயாராக உள்ளது: பிரதமர் மோடி


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை அளித்தனர்.
  புதுடெல்லி:

  பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி டிசம்பர் மாதம் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடரின் பல்வேறு அமர்வுகளிலும் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. குறிப்பாக, 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்நிலையில், கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி., மணீஷ் திவாரி உள்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை சமர்ப்பித்தனர்.

  இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி., மணீஷ் திவாரி, "வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் பதிவை உருவாக்க வேண்டும். அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

  இதேபோல், "போராட்டத்தின்போது கடந்த ஓராண்டில் உயிரிழந்த 700 விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி" மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை அளித்தார் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர்.

  தொடர்ந்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., பினோய் விஸ்வம், ரவிக்குமார் எம்.பி. உள்ளிட்டோர் பல்வேறு விவகாரங்களை வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை சமர்ப்பித்தனர்.

  இதையும் படியுங்கள்..  பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #Governmentready #Parliamentallpartymeet
  புதுடெல்லி:

  பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற பாராளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்துக்கு பாராளுமன்ற விவகாரங்கள்துறை மந்திரி நரேந்திர சிங் டோமர் அழைப்பு விடுத்திருந்தார்.

  இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நிதி மந்திரி அருண் ஜெட்லி, காங்கிரஸ் தரப்பில் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, மல்லிகார்ஜுனா கார்கே, சமாஜ்வாதி சார்பொல் ராம் கோபால் யாதவ், சி.பி.ஐ. சார்பில் டி.ராஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

  இந்த கூட்டத்தின்போது அனைத்து கட்சி தலைவர்களும் முன்வைத்த கருத்துகளை கேட்ட பிரதமர் மோடி, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இடையூறின்றி சுமுகமாக நடைபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என வலியுறுத்தினார்.  மேலும், பொதுநன்மை சார்ந்த அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் விவாதிக்க இந்த அரசு தயாராக உள்ளதாகவும் மோடி குறிப்பிட்டதாக இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாராளுமன்ற விவகாரங்கள்துறை மந்திரி நரேந்திர சிங் டோமர் தெரிவித்தார்.

  எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத்தில் மீண்டும் ரபேல் போர் விமான ஊழல் மற்றும் ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி உரிமை தொடர்பான பிரச்சனைகளை முன்வைக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் குறிப்பிட்டார். #Governmentready #Parliamentallpartymeet
  ×