என் மலர்tooltip icon

    இந்தியா

    மக்களவை எம்.பி.யாக இன்று பதவி ஏற்கிறார் பிரியங்கா காந்தி
    X

    மக்களவை எம்.பி.யாக இன்று பதவி ஏற்கிறார் பிரியங்கா காந்தி

    • வயநாடு இடைத்தேர்தலில் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
    • இன்று மக்களவை உறுப்பினராக பதவி ஏற்கிறார்.

    வயநாடு மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் பிரியங்கா காந்தி சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் அண்ணன் ராகுல் காந்தியிடம் காண்பித்து மகிழ்ச்சி அடைந்தார்.

    இந்த நிலையில் இன்று பாராளுமன்ற மக்களவையில் எம்.பி.யாக பதவி ஏற்றுக்கொள்ள இருக்கிறார். இதன்மூலம் காந்தி குடும்பத்தில் இருந்து மற்றொரு நபர் பாராளுமன்றம் அவையை அலங்கரிக்கிறார்.

    ஏற்கனவே சோனியா காந்தி மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கிறார். ராகுல் காந்தி மக்களவை எம்.பி. மற்றும் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். இந்த நிலையில் மக்களவையில் ராகுல் காந்தியுடன் இணைந்து பிரியங்கா காந்தி குரல் கொடுக்க உள்ளார்.

    அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் யாதவ், அகிலேஷ் யாதவ் உறவினர் அக்ஷய் யாதவ் ஆகியோர் எம்.பி.யாக உள்ளனர். மற்றொரு உறவினர் தர்மேந்திர யாதவும் மக்களவை உறுப்பினராக உள்ளார்.

    அதேபோல் பப்பு யாதவ் மக்களவை எம்.பி.யாகவும், அவரது மனைவி மாநிலங்களவை எம்.பி.யாகவும் உள்ளார்.

    Next Story
    ×