என் மலர்tooltip icon

    இந்தியா

    மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை கட்டுப்படுத்த நினைக்கிறார்கள்: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு
    X

    மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை கட்டுப்படுத்த நினைக்கிறார்கள்: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு

    • பாராளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்க சில கட்சிகள் முயற்சிக்கின்றன.
    • மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்தான் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுகிறார்கள்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று கூடியது. பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2025-ம் ஆண்டுக்காக நாடு தயாராகும் நிலையில் 2024-ம் ஆண்டின் கடைசி கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடர் பல வழிகளில் சிறப்பு வாய்ந்தது. நாளை அரசியலமைப்பின் 75-வது ஆண்டு கொண்டாடப்படுகிறது.

    பாராளுமன்றத்தை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை. பாராளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடக்கும் என்று நம்புகிறேன். அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் பலமுறை தோற்கடித்து இருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் மக்களுக்காக காங்கிரஸ் எப்போதும் பேசியது இல்லை.

    பாராளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்க சில கட்சிகள் முயற்சிக்கின்றன. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்தான் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுகிறார்கள்.

    மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக அமளியில் ஈடுபட்டு பாராளுமன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கிறார்கள். இடையூறுகள் மற்றும் குழப்பங்களை ஏற்படுத்துகிறார்கள்.

    இதுபோன்ற ஒரு சிலரின் எண்ணம் வெற்றியடையவில்லை. நாட்டு மக்கள் அவர்களின் செயல்களை கவனித்து தகுந்த நேரத்தில் தண்டித்தனர். அவர்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து நேரம் வரும்போது நீதியை வழங்குகிறார்கள்.

    பாராளுமன்ற கூட்டத்தை சுமூகமாக நடத்த நான் பலமுறை எதிர்க்கட்சியினரை வற்புறுத்தி வருகிறேன். எதிர்க்கட்சி உறுப்பினர்களில் சிலர் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்கிறார்கள். அவை நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெற வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் பொதுமக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டவர்கள் தான் தங்கள் சக உறுப்பினர்களின் வார்த்தைகளை புறக்க ணித்து அவர்களின் உணர்வு களையும் ஜனநாயகத்தையும் மதிக்கவில்லை.

    உலகமே இன்று இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறது. பாராளுமன்ற நேரத்தை பயன்படுத்துவது, அவையில் நமது நடத்தையும் உலக அரங்கில் இந்தியா பெற்றுள்ள மரியாதையை வலுப்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும்.

    இந்திய வாக்காளர்கள் ஜனநாயகத்திற்காக அர்ப்பணிப்புடன் உள்ளனர். அரசியலமைப்பின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பு காரணமாக பாராளுமன்ற அமைப்பு முறையின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

    பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் நாம் அனைவரும் மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப வாழ வேண்டும். இது காலத்தின் தேவை.

    ஒவ்வொரு விவாதத்தின் அம்சங்களும் ஆரோக்கியமாக அவையில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். வரவிருக்கும் தலை முறையினர் அதிலிருந்து உத்வேகம் பெறுவார்கள்.

    இந்த அமர்வு பயனுள்ள தாக அமையும் என்பது உண்மை. இந்த அமர்வை ஆர்வத்துடன் முன்னெடுத்து செல்ல மரியாதைக்குரிய எம்.பி.க்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×