search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்த தானம்"

    • போடியில் 81 முறை ரத்த தானம் செய்தவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
    • ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

    போடி:

    போடியில் 81 முறை ரத்த தானம் செய்தவருக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

    போடியில் ஜெராக்ஸ் மற்றும் ஜாப் டைப் உரிமையாளர்கள் சங்க கூட்டம் தலைவர் சுருளிராஜ் தலைமையில் நடைபெற்றது செயலர் சுரேஷ்குமார், பொருளாளர் கஜேந்திரபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போடி பகுதியில் 81 முறை ரத்த தானம் செய்த பழனிக்குமாரை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவர் ரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பேசினார். சங்க உறுப்பினர்கள் பழனிக்குமாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    சங்க தலைவர் சுருளிராஜ் கூறுகையில், சங்க உறுப்பினர்கள் பொது சேவைகளிலும் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார். கூட்டத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது மோசடி புகார்கள் வருவதால் விண்ணப்பிக்க வருபவர்களின் ஆவணங்களை முழுமையாக சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    • மருத்துவர் தினத்தை முன்னிட்டு நடந்தது
    • மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் டோல்கேட் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மருத்துவர் தினம் முன்னிட்டு அரசு பொது சுகாதார துறை மற்றும் திருப்பத்தூர் ரோட்டரி சங்கம், தனியார் கல்லூரி இணைந்து ரத்த தானம் முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு திருப்பத்தூர் ரோட்டரி சங்கம் தலைவர் அருணகிரி தலைமை தாங்கினார் கல்லூரி முதல்வர் டாக்டர் பாஸ்கர் அனைவரையும் வரவேற்றார்.

    கல்லூரி தலைவர் சுப்பிரமணியம் செயலாளர் ஏலகிரி வி. செல்வம் பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    ரத்ததான முகாமை திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர் குமரவேல் முகாமை தொடங்கி வைத்தார். மேலும் இம்முகாமில் ரோட்டரி சங்க உறுப்பினர் ஆர். புகழேந்தி, கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் பாரதி நன்றி கூறினார்.

    • அகில பாரத தேராபந்த் யுவக் பரிஷத் அமைப்பின் 2016-ம் ஆண்டு முகாமில் 1 லட்சம் யூனிட் ரத்தம் சேமிக்கப்பட்டது கின்னஸ் சாதனையாகும்.
    • வருகிற செப்டம்பர் 17-ந் தேதி இந்தியா முழுவதும் 1008 இடங்களில் மெகா ரத்ததான முகாம் நடத்தப்பட உள்ளது.

    கன்னியாகுமரி:

    அகில பாரத தேராபந்த் யுவக் பரிஷத் என்ற அமைப்பு இந்தியா முழுவதும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு நடை பெற்ற முகாமில் 1 லட்சம் யூனிட் ரத்தம் சேமிக்கப்பட்டது கின்னஸ் சாதனையாகவும் அமைந்தது.

    இந்த நிலையில் அமைப்பின் 58-வது ஆண்டு விழா, பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழா மற்றும் பெரியாரின் பிறந்தநாள் விழாஆகியவை வருகிற செப்டம்பர் 17-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் இந்தியா முழுவதும் 1008 இடங்களில் மெகா ரத்ததான முகாம் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 250 இடங்களில் இந்த முகாம் நடக்கிறது.

    இதைத் தொடர்ந்து ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி விவேகானந்த புரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர அரங்கத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    அகில பாரத தேராபந்த் யுவக் பரிஷத் அமைப்பின் மாநில தலைவரும் ரத்ததான முகாம் ஒருங்கிணை ப்பாளருமான வக்கீல் முகேஷ் குமார் தலைமை தாங்கினார். விவேகானந்த கேந்திர பொதுச்செயலாளர் பானுதாஸ் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 2பேர் ரத்ததானம் வழங்கி ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 20 ஆயிரம் போலீசார் நாளை ரத்த தானம் செய்கின்றனர்.
    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 20 ஆயிரம் போலீசார் நாளை ரத்த தானம் செய்கின்றனர்.

    ஒவ்வொரு போலீசாரிடம் இருந்தும் 1 யூனிட் வீதம் மொத்தம் 20 ஆயிரம் யூனிட் ரத்தம் எடுக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் ரத்தம் அனைத்தும் பாதுகாப்பாக அரசு ரத்த வங்கிகளில் சேமிக்கப்படுகிறது.

    இதுபற்றி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இயக்குனர் செந்தில்ராஜ் மற்றும் ரத்த பரிமாற்ற குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நாளை சுமார் 20,000 போலீசார் மற்றும் அதிகாரிகள் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து தாமாகவே முன்வந்து ரத்த தானம் கொடுக்க உள்ளனர்.

    நமது மாநிலத்தில் ஆண்டிற்கு 8,00,000 யூனிட்ஸ் ரத்தம் தேவையுள்ளது, இதில் சுமார் 50 சதவீதம் ரத்தம் ( 4 லட்சம் யூனிட்ஸ்) 89 அரசு ரத்த வங்கிகளில் சேகரிக்கப்படுகிறது மீதமுள்ள 50 சதவீதம் ரத்தம் (4 லட்சம் யூனிட்ஸ்) தனியார் ரத்த வங்கிகளில் சேகரிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு மாதமும் 33,000 முதல் 35,000 யூனிட்ஸ் வரை தேவைப்படுகிற ரத்தம், 89 அரசு ரத்த வங்கிகள் மற்றும் தனியார் ரத்த வங்கிகள் மூலம் நம் மாநிலம் முழுவதும் வழங்கப்படுகிறது.

    மே மாதத்தில் பொதுவாக கல்லூரி விடுமுறையாக இருப்பதாலும், கொடையாளிகள் ரத்தம் கொடுப்பது குறைவாக இருப்பதாலும் ஜூன் மாதத்தில் ரத்தம் அதிகமாக தேவைப்படும்.

    எனவே, ஜூன் மாதத்தில் காவல் துறையால் வழங்கப்படவுள்ள 20,000 யூனிட்ஸ் ரத்தம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

    மேலும், சராசரியாக ஒருமாத பயன்பாட்டிற்கு தேவைப்படுகிற 33,000 முதல் 35,000 யூனிட்ஸ் வரை ரத்தத்திற்கு, 29.06.2018 அன்று காவல்துறையால் திட்டமிடப்பட்ட ரத்த தான முகாமில் வழங்கப்படவுள்ள 20,000 யூனிட்ஸ் ரத்தம் ஒருபோதும் வீணாகப் போவதில்லை. இந்த ரத்தம் ஏழை எளியவர்களுக்கு அரசாங்க மருத்துவமனைகளில் உபயோகப்படுத்தப்பட உள்ளது

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    சிவகங்கை:

    சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி செயலாளர் சேகர் தலைமை தாங்கி ரத்த தானத்தின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.

    ரத்த தானம் செய்வதன் மூலம் ஆபத்தான கால கட்டத்தில் ஒருவரின் உயிரை காக்க முடியும் என்று மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் மாணவர்கள் ரத்தத் துளி வடிவில் அமர்ந்து தங்கள் கைககளில் இருந்த சிவப்பு வண்ண பலூன்களை பறக்க விட்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் முத்துக்குமார் மற்றும் சக ஆசிரியர்கள் செய்திருந்தனர். 
    ×