search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்த தானம்"

    • த.மு.மு.க. சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
    • மாநில செயலாளர் சாதிக்பாட்ஷா பங்கேற்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் தாலுகா ஆனந்தூர் அரசு தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு முஸ் லிம் முன்னேற்றக் கழகம் ஆனந்தூர் கிளை மற்றும் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர். இந்த முகாமிற்கு ம.ம.க. மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமை வகித்தார். மருத்துவ அணி மாவட்ட செயலாளர் கோட்டார் கலந்து கொண்டு வரவேற் றார். ரத்ததான முகாமில் ம.ம.க. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார்.

    முகாமிற்கு த.மு.மு.க. தொண்டி மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா, தலைமை பிரதிநிதி ஜெயி னுல் ஆபுதீன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முனீஸ்வரி, ஆர்.எஸ்.மங்க லம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அறுவை சிகிச்சைக்கு AB+ வகை ரத்தம் உடனடியாக தேவைப்பட்டது.
    • ரத்த தானம் செய்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

    சேலம்:

    டெல்லியை சேர்ந்த ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.

    இதையடுத்து அவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தவதற்காக மாற்று கல்லீரல் பெறுவதற்கு விண்ணப்பித்து காத்திருந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த 20 வயது இளம்பெண் விபத்தில் மூளைச்சாவடைந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் அந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.

    இதையடுத்து கல்லீரலுக்காக பதிவு செய்து காத்திருந்த டெல்லியை சேர்ந்தவருக்கு, இளம்பெண்ணின் கல்லீரலை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்துவதற்காக முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக நேற்று முன்தினம் அந்த இளம்பெண்ணின் கல்லீரல் கோவை மருத்துவமனையில் இருந்து 2 மணி நேரத்தில் சேலத்தில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அறுவை சிகிச்சைக்கு தயார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்கு AB+ வகை ரத்தம் உடனடியாக தேவைப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் அவசரம் கருதி சீருடையிலேயே உடனடியாக காவிரி மருத்துவமனைக்கு விரைந்தார். பின்னர் அங்கு ரத்த தானமும் செய்தார்.

    அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தொடங்கி நேற்று காலை 6 மணி அளவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. தற்போது கல்லீரல் பொருத்தப்பட்டவர் நலமாக உள்ளார்.

    இதையடுத்து கால நேரம் பாராமல் உடனடியாக வந்து ரத்த தானம் செய்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

    இந்த தகவல் அறிந்த பல்வேறு தரப்பினரும், போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • ரத்ததான நிகழ்ச்சியை பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் துவக்கி வைத்தார்.
    • பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ரத்ததான முகாம் பொன்னேரி நகர பாஜக சார்பில் நடைபெற்றது. பிரானதா சக் ஷம், சேவா பாரதி மற்றும் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த முகாமில் பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.

    ரத்ததான நிகழ்ச்சியை பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பொன்னேரி நகரத் தலைவர் சிவகுமார் ஏற்பாடு செய்தார். பாஜக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் குமார், அன்பாலாயா சிவகுமார், நந்தன், கோட்டி, பாலாஜி, ரமேஷ், பவித்ரா, சுகன்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிக ரத்த தானம்் வழங்கியவர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
    • கலெக்டர் ஆஷா அஜீத் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    தேவகோட்டை

    உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு தேவகோட்டை வட்டாரத்தில் அதிகளவில் ரத்தம் வழங்கிய ரத்த கொடையாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ரத்த ெகாடையாளர்களுக்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். சமூக ஆர்வலர் சாவித்திரி, பாலமுருகன், கல்லூரி மாணவர்கள் சூர்யா, கமலேசுவரன் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    வட்டார மருத்துவ அலுவலர் ஷாம் சேசுரான், திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகர் முருகன், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி ஆலோசகர் அழகு ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
    • 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தானம் செய்யலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2 சார்பாக உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அலகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக நல்லூர் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், தானத்தில் சிறந்தது ரத்த தானம், முகம் தெரியாதவர்களை காப்பாற்ற அனைவரும் ரத்த தானம் செய்ய முன் வரவேண்டும். 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தானம் செய்யலாம் என்றார்.

    மாணவர்கள் ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் ரத்தம் கொடுங்கள், பிளாஸ்மா கொடுங்கள், வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளுங்கள் என்ற மைய கருத்தை வலியுறுத்தி மாணவ செயலர்கள் ராஜபிரபு, விஜய், காமராஜ், மது கார்த்திக், பூபதிராஜா ஆகியோர் தலைமையில் ரத்த தான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இம்முகாமில் 19 யூனிட் ரத்த தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் மருத்துவர்கள் சிந்தியா, முரளி கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு தானம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • சர்க்கரை நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • கீழ்கண்ட காரணங்கள் இருப்பின் நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்ய கூடாது.

    சர்க்கரை நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில சமயங்களில் அவர்களும் இரத்த தானம் செய்ய விரும்புவார்கள். அப்படி நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்வது பாதுகாப்பானதா? இந்த கேள்வி பலரிடமும் இருப்பதால் இதை பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

    நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் போன்ற தன்னலமற்ற செயலை தாராளமாக செய்யலாம். கீழ்கண்ட காரணங்கள் இருப்பின் நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்ய கூடாது. அவை:

    1) ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் உள்ளவர்கள்,

    2) சிறுநீரக பாதிப்பு மற்றும் இருதய பாதிப்பு உள்ளவர்கள்,

    3) இன்சுலின் ஊசி் செலுத்தி கொள்பவர்கள்,

    4) உடல் எடை 45 கிலோவுக்கும் குறைவானவர்கள்,

    5) வயது 18-க்கும் குறைவானவர்கள்,

    6) ரத்த கொதிப்பு கட்டுக்குள் இல்லாதவர்கள்,

    7) ஹீமோகுளோபின் 12.5 கிராமுக்கும் குறைவாக உள்ளவர்கள்,

    8) புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள்,

    9) காலரா, டைபாய்டு போன்ற நோய்களுக்கு கடந்த 15 நாட்களுக்குள் தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டவர்கள்,

    10) கடந்த 3 மாதங்களுக்குள் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்,

    11) ஹெபடைட்டிஸ் பி அல்லது சி, மற்றும் எச்.ஐ.வி நோய் தொற்றுள்ளவர்கள்.

    நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்வதன் மூலம் மற்றவர்களுக்கு இந்த நோய் பரவாது. மேலும் நீரிழிவு நோயாளிகள் 56 நாட்களுக்கு ஒரு முறை ரத்த தானமும், 7 நாட்களுக்கு ஒரு முறையும் பிளேட்ளட் தானமும் செய்யலாம். அதேபோல் இதய நோய் அல்லது பிற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்ய அறிவுறுத்தப்படுவதில்லை. இரத்த தானம் செய்வதற்கு முன், நீங்கள் ஒரு சுகாதார பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

    சர்க்கரை நோயாளிகள் ரத்த தானம் செய்த பிறகு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    • ஆதித்தனார் கல்லூரியில் வருடத்திற்கு 2 முறை ரத்த தான முகாம் நடத்தப்படுகின்றது.
    • ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 200 மாணவர்கள் ரத்ததானம் செய்கின்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியின் சார்பாக வருடத்திற்கு 2 முறை ரத்த தான முகாமானது ஆதித்தனார் கல்லூரியில் நடத்தப்படுகின்றது. ஒவ்வொரு முகாமிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தாமாகவே முன்வந்து ரத்த தானம் செய்கின்றனர். அது மட்டுமல்லாது எப்பொழுதெல்லாம் நோயாளிகளுக்கு ரத்தம் தேவைப்படுகின்றதோ, அப்பொழுது மாணவர்கள் மருத்துமனைக்கும் நேரடியாகச் சென்று ரத்ததானம் செய்கின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 200 மாணவர்கள் ரத்ததானம் செய்கின்றனர். மாணவர்களின் தன்னலமற்ற இந்த சேவையைப் பாராட்டும் வகையில் ஆதித்தனார் கல்லூரியில் ரத்த தான கழகத்திற்கு பாராட்டுச் சான்றிதழ் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் டி.பொன்ரவி, மருத்துவர் பாபநாசகுமார் மற்றும் மருத்துவர் சசிகலா முன்னிலையில் வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் மற்றும் கல்லூரிச் செயலர் ஜெயக்குமார், ரத்ததான கழகத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணி சகாய சித்ரா மற்றும் சி.மோதிலால் தினேஷ் ஆகியோரைப் பாராட்டினர்.

    • அமெரிக்கன் கல்லூரியில் 710 மாணவர்கள் ரத்த தானம் செய்து சாதனை புரிந்தனர்.
    • 710 யூனிட் ரத்தம் பெறப்பட்டு மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பப்பட்டது.

    மதுரை

    மதுரை அமெரிக்கன் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணிகள், இந்திய செஞ்சிலுவைக் சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் ஏற்பாடு செய்த இந்த முகாமை கல்லூரி நிதிக்காப்பாளர் பியூலா ரூபி கமலம் தலைமையில், காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சிவக்குமார் ெதாடங்கி வைத்தார். காமராஜர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் சிற்றாலய குரு பேராசிரியர் ஜான் காமராஜ் இறைவேண்டல் முன்வைத்தார்.

    இதில் மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கியைச் சேர்ந்த மருத்துவர்களான ஆனந்தீஸ்வரி, ராஜேசுவரி மற்றும் அனைத்து துறைப் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். இந்த முகாமில் அமெரிக்கன் கல்லூரி மாணவர்களிடம் இருந்து 710 யூனிட் ரத்தம் பெறப்பட்டு மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பப்பட்டது. ரத்த தானம் செய்த மாணவர்களை கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் பாராட்டினார். இதற்கான ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் ஒருங்கிணைப்பில் திட்ட அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்களான சாகுல் ஹமீது, ஷீலா, டாப்னி, மங்கையர்க்கரசி, யேசுராஜன், பழனிச்சாமி, ஞானமணி, விக்னேசுவரன், ஜோசைய்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஒவ்வொருவரின் உடலிலும் சுமார் 5 லிட்டர் ரத்தம் உள்ளது.
    • ரத்த தானத்தின் போது 350 மி.லி ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது.

    சென்னை:

    தேசிய தன்னார்வ ரத்த தான நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-

    ரத்த தானம் மூலம் மதிக்கத்தக்க மனித உயிரை காப்பாற்றுவது புனிதமான செயலாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான தினமாக கொண்டாடப்படுகிறது.

    தன்னார்வ ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில் விழிப்புணர்வை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வருகிறது.

    ஒவ்வொருவரின் உடலிலும் சுமார் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. ரத்த தானத்தின் போது 350 மி.லி ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. ரத்த தானம் செய்ய 20 நிமிடங்களே ஆகும். ரத்த தானம் செய்தவுடன் வழக்கம் போல் அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம். 18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆரோக்கியமான அனை ரும் 3 மாதத்திற்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம்.

    தானமாக பெறப்படும் ஒரு அலகு ரத்தம் 3 உயிர்களை காப்பாற்றும். உரிய கால இடைவெளியில் ரத்த தானம் செய்வதால் உடலில் புதிய செல்கள் உருவாகி அவர்களின் உடல் நலன் காக்கப்படுகிறது. அரசு ரத்த மையங்கள் மற்றும் தன்னார்வ ரத்த தான முகாம்களில் ரத்த தானம் செய்யலாம்.

    ரத்த மையங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக e-RaktKosh என்ற வலைதளம் செயல்பாட்டில் உள்ளது. பொது மக்கள் இத்தளத்தை பயன்படுத்தி தங்களுக்கு தேவைப்படும் நேரங்களில் எளிதில் ரத்தம் பெற்றுக்கொள்ளலாம்.

    கடந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் ரத்த மையங்கள் மூலம் 90 சதவீதம் ரத்தம் சேகரிக்கப்பட்டு தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. நடப்பு ஆண்டில் தன்னார்வ ரத்த தானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்திடவும், விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்றிட பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் தன்னார்வ ரத்த தானம் செய்திடவும் முன்வர வேண்டும்

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் ரத்த தான முகாமை சுகாதாரத்துறை மந்திரி தொடங்கி வைத்தார்.
    • அப்போது பேசிய அவர் ரத்த தானம் செய்வது உன்னதமான சேவை என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    விடுதலை அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் ரத்த தான முகாமை, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். இந்த முகாமில் மந்திரி மன்சுக் மாண்டவியா ரத்த தானம் செய்தார்.

    அப்போது பேசிய அவர், இந்த ரத்த தான முகாம், தேசிய தன்னார்வ ரத்த தான தினமான அக்டோபர் 1 வரை நாடு முழுதும் நடக்கும். இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர். ரத்த தானம் செய்ய விரும்புவோர் ஆரோக்ய சேது செயலி அல்லது இ ரக்த்கோஷ் இணைய தளத்தில் பதிவு செய்யலாம். ரத்த தானம் செய்வது உன்னதமான சேவை என தெரிவித்தார்.

    இந்நிலையில், விடுதலை அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற முகாமில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் ரத்த தானம் செய்துள்ளனர் என சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

    • போடியில் 81 முறை ரத்த தானம் செய்தவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
    • ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

    போடி:

    போடியில் 81 முறை ரத்த தானம் செய்தவருக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

    போடியில் ஜெராக்ஸ் மற்றும் ஜாப் டைப் உரிமையாளர்கள் சங்க கூட்டம் தலைவர் சுருளிராஜ் தலைமையில் நடைபெற்றது செயலர் சுரேஷ்குமார், பொருளாளர் கஜேந்திரபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போடி பகுதியில் 81 முறை ரத்த தானம் செய்த பழனிக்குமாரை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவர் ரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பேசினார். சங்க உறுப்பினர்கள் பழனிக்குமாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    சங்க தலைவர் சுருளிராஜ் கூறுகையில், சங்க உறுப்பினர்கள் பொது சேவைகளிலும் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார். கூட்டத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது மோசடி புகார்கள் வருவதால் விண்ணப்பிக்க வருபவர்களின் ஆவணங்களை முழுமையாக சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    • ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.
    • ரத்த தானம் செய்வது பல உயிர்களைக் காப்பாற்றக்கூடிய உன்னத செயல்.

    தானங்களில் சிறந்த தானமாக 'ரத்த தான'த்தை மருத்துவத்துறை முன்னிறுத்துகிறது. ஏனெனில் பல்வேறு மருத்துவ அறுவை சிகிச்சைகளின் போதும், ஒரு மருத்துவ நோயாளிக்கு தேவைப்படும் முக்கியமான, முதன்மையான விஷயமாக ரத்தம் இருக்கிறது. ரத்தத்தில் ஏ, பி, ஓ, என்று சில பிரிவுகளும் இருப்பதால், எல்லாராலும் எல்லாருக்கும் ரத்தத்தை அளித்து விட முடியாது.

    ஒருவருக்கு தேவைப்படும் சமயத்தில், அவருக்குரிய ரத்த வகையாளரைத் தேடிக் கொண்டுவருவது சிரமம். எனவேதான், ரத்த தானம் என்ற பெயரில், விருப்பப்பட்டு வழங்கும் நபர்களிடம் இருந்து ரத்தம் தானமாகப் பெறப்பட்டு மருத்துவமனை மற்றும் ரத்த வங்கிகளில் இருப்பு வைக்கப்படுகிறது. இப்படி ரத்ததானம் அளிப்பவர்களின் தினமாக உலகம் முழுவதும் ஜூன் 14-ந்தேதியை 'உலக ரத்த நன்கொடையாளர்கள் தினம்' என்று அனுசரித்து வருகிறோம்.

    ரத்தத்தில் ஏ, பி, ஓ ரத்த வகையை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி யான கார்ல் லேண்ட்ஸ்டெய்னரின் பிறந்த தினத்தில்தான், நாம் இந்த நாளை கடைப்பிடித்து வருகிறோம். ரத்த தானம் செய்வதன் அவசியம் மற்றும் பாதுகாப்பாக ரத்த தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கம் ஆகும்.

    ரத்தம் பெறுபவர்கள் மட்டுமல்ல, ரத்தம் அளிப்பவர்களின் உடலும் பல நன்மைகளைப் பெறுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ரத்த தானம் செய்வது பல உயிர்களைக் காப்பாற்றக்கூடிய உன்னத செயல் என்பதால், இந்த நாளில் அனைவரும் ரத்த தானம் செய்ய உறுதியேற்போம்.

    ×