search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "American College"

    • அமெரிக்கன் கல்லூரியில் உலக விண்வெளி தின நிகழ்ச்சி நடந்தது.
    • முடிவில் முதுகலை மாணவர் ஞானசேகர் நன்றி கூறினா்.

    மதுரை

    மதுரை அமெரிக்கன் கல்லூரியில்உலக விண்வெளி தின நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை இயற்பியல் துறை, இஸ்ரோ மகேந்திரகிரி சார்பில் நடந்தது. முதுகலை இயற்பியல் துறை தலைவர் பால்மேரி டெபோரா வரவேற்றார். முதல்வர், செயலாளர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்.

    உயர்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கான இளம் அறிவியலாளர் திட்டம் அல்லது யுவிகா ('யுவ விக்யானி கரியக்ரம்') திட்டம் பற்றி கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. அமெரிக்கன் கல்லூரி, மீனாட்சி அரசு பெண்கள் கல்லூரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். மாணவர்க ளின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் துணை முதல்வர் மார்டின் டேவிட், நிதிக்காப்பாளர் பியூலா ரூபி கமலம், இளங்கலை இயற்பியல் துறை தலைவர் ரிச்சர்டு ராஜ்குமார் மற்றும் துறை ஆசிரியர்கள் பங் கேற்று விழாவை சிறப் பித்தனர். முடிவில் முதுகலை மாணவர் ஞானசேகர் நன்றி கூறினா்.

    • அமெரிக்கன் கல்லூரியில் உலக வன நாள் விழா கொண்டாடடப்பட்டது.
    • வணிகவியல் துறை தலைவர் ஹிலாரி ஜோசப் நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை சத்திரப்பட்டியில் உள்ள அமெரிக்கன் கல்லூரியின் கூடுதல் வளாகத்தில் உலக வன நாள் விழா நடந்தது.கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், கூடுதல் வளாக இயக்குனர் பால் ஜெயக்கர் வழிகாட்டு தலில் விழா கொண்டா டப்பட்டது. இதில்  மாவட்ட வன அலுவலர் குருசாமி தபோலா தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

     துணை வளாக இயக்குனர் திவா கரன் வரவேற்றார். உதவி வன பாதுகாவலர் ராஜா காடுகளை பாதுகாப்பதில் இளைஞர்களின் பங்கையும், முக்கியத்து வத்தையும் விளக்கிப் பேசினார். வணிகவியல் துறை தலைவர் ஹிலாரி ஜோசப் நன்றி கூறினார். பிறகு வன பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ-மாணவிகளுக்கு போட்டி கள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. 

    விழா ஏற்பாடுகளை உயிரி தொழில்நுட்பத்துறை தலைவர் மணிவண்ணன், அகில், வணிகவியல் துறை தலைவர் ஹிலாரி ஜோசப், கல்லூரியின் பசுமை மேலாண்மை திட்ட இயக்கு னர் ராஜேஷ், மதுரை மாவட்ட வன அதிகாரி களோடு இணைந்து செய்திருந்தனர். 

    • அமெரிக்கன் கல்லூரியில் 710 மாணவர்கள் ரத்த தானம் செய்து சாதனை புரிந்தனர்.
    • 710 யூனிட் ரத்தம் பெறப்பட்டு மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பப்பட்டது.

    மதுரை

    மதுரை அமெரிக்கன் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணிகள், இந்திய செஞ்சிலுவைக் சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் ஏற்பாடு செய்த இந்த முகாமை கல்லூரி நிதிக்காப்பாளர் பியூலா ரூபி கமலம் தலைமையில், காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சிவக்குமார் ெதாடங்கி வைத்தார். காமராஜர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் சிற்றாலய குரு பேராசிரியர் ஜான் காமராஜ் இறைவேண்டல் முன்வைத்தார்.

    இதில் மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கியைச் சேர்ந்த மருத்துவர்களான ஆனந்தீஸ்வரி, ராஜேசுவரி மற்றும் அனைத்து துறைப் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். இந்த முகாமில் அமெரிக்கன் கல்லூரி மாணவர்களிடம் இருந்து 710 யூனிட் ரத்தம் பெறப்பட்டு மதுரை அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பப்பட்டது. ரத்த தானம் செய்த மாணவர்களை கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் பாராட்டினார். இதற்கான ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் ஒருங்கிணைப்பில் திட்ட அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்களான சாகுல் ஹமீது, ஷீலா, டாப்னி, மங்கையர்க்கரசி, யேசுராஜன், பழனிச்சாமி, ஞானமணி, விக்னேசுவரன், ஜோசைய்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • மதுரை அமெரிக்கன் கல்லூரியில் போட்டித் தேர்வுகளுக்கான சர்வதேச பயிலரங்கம் நடந்தது.
    • மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் மற்றும் இலக்குகளை வைத்திருக்க வேண்டும் என பஞ்சாயத்து ராஜ் சிறப்புச்செயலர் பேசினார்.

    மதுரை

    மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை மற்றும் பொருளாதார ஆராய்ச்சித்துறை சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான புள்ளியியல் சர்வதேச பயிலரங்கம் நடந்தது.

    இதில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் சிறப்புச்செயலர் கருணாகரன் பங்கேற்றார். அவர் பேசியதாவது:-

    மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் மற்றும் இலக்குகளை வைத்திருக்க வேண்டும். போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான வழக்கமான பயிற்சிகள் மற்றும் தயாரிப்புக்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

    புள்ளியியல் பற்றிய கற்றல் மற்றும் நடைமுறைப் பயிற்சி மாணவர்கள் உலகளாவிய, தேசிய மற்றும் மாநில அளவில் வேலை வாய்ப்புகளைப் பெற உதவுகிறது. இவ்வாறு அவர் பேசினார். முதல்வர் மற்றும் செயலர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை தாங்கி பேசுகையில், மாணவர்கள் புள்ளி விவரங்களை கற்றுக் கொண்டால் பாடங்களில் தேர்ச்சி பெற்று, பிரகாசித்து, போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவார்கள்.

    நாளுக்கு நாள் வெகுஜனப் பயிற்சியைக்காட்டிலும் விநியோகப் பயிற்சியைப் பின்பற்றுவது, வாரத்திற்கு ஒரு முறையாவது முக்கோணங்கள் அல்லது குவாட்களில் படிப்பது, சூத்திரங்களை மனப்பாடம் செய்யாமல், கருத்துகளைப் படிப்பது போன்ற 7 படிகளைக் கற்றுக்கொள்வதற்கான புள்ளி விவரங்களை அவர் எடுத்துரைத்தார்.

    ×