என் மலர்
நீங்கள் தேடியது "Space Day"
- அமெரிக்கன் கல்லூரியில் உலக விண்வெளி தின நிகழ்ச்சி நடந்தது.
- முடிவில் முதுகலை மாணவர் ஞானசேகர் நன்றி கூறினா்.
மதுரை
மதுரை அமெரிக்கன் கல்லூரியில்உலக விண்வெளி தின நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை இயற்பியல் துறை, இஸ்ரோ மகேந்திரகிரி சார்பில் நடந்தது. முதுகலை இயற்பியல் துறை தலைவர் பால்மேரி டெபோரா வரவேற்றார். முதல்வர், செயலாளர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்.
உயர்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கான இளம் அறிவியலாளர் திட்டம் அல்லது யுவிகா ('யுவ விக்யானி கரியக்ரம்') திட்டம் பற்றி கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. அமெரிக்கன் கல்லூரி, மீனாட்சி அரசு பெண்கள் கல்லூரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். மாணவர்க ளின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் மார்டின் டேவிட், நிதிக்காப்பாளர் பியூலா ரூபி கமலம், இளங்கலை இயற்பியல் துறை தலைவர் ரிச்சர்டு ராஜ்குமார் மற்றும் துறை ஆசிரியர்கள் பங் கேற்று விழாவை சிறப் பித்தனர். முடிவில் முதுகலை மாணவர் ஞானசேகர் நன்றி கூறினா்.






