search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யோகிபாபு"

    • தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு நேற்று இரவு கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார்.
    • அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு நேற்று இரவு கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார். யோகிபாபுவை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். பின்னர் யோகி பாபு கோவிலில் உள்ள ஸ்ரீ காலபைரவர் சன்னதி, ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி, ஸ்ரீ தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள பகவதி அம்மன் சன்னதி, இந்திர காந்த வினாயகர் சன்னதி, ஸ்ரீ பாலசவுந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதி, ஸ்ரீ சூரிய பகவான், ஸ்ரீ நாகராஜர் சன்னதி ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.



    நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்ய வந்த செய்தி அந்த பகுதியில் காட்டுதீபோல் பரவி, அவரை காண ரசிகர்கள் திரண்டனர். யோகிபாபுவை முற்றுகையிட்டு அவருடன் செல்போன் மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டு செல்பியும் எடுத்து கொண்டனர். 

    • 'தோனி என்டர்டெயின்மெண்ட்' சார்பில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தமிழ் படத்தை தயாரிக்கவுள்ளார்.
    • இப்படத்தின் தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து 'தோனி என்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே, 'தி ரோர் ஆஃப் தி லயன்' என்ற ஆவணப்படத்தைத் தயாரித்திருக்கும் இந்நிறுவனம் தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர். சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகும் இப்படம் விரைவில் தொடங்குகிறது. காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகவுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.

     

    லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married)

    லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married)

    தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலை, மோஷன் போஸ்டர் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் நடிகை நதியா, ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இவானா - ஹரிஷ் கல்யாண்

    இவானா - ஹரிஷ் கல்யாண்

     

    மேலும் இப்படத்திற்கு லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married) என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் ஷான் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பொம்மை நாயகி’.
    • இப்படம் அடுத்த மாதம் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'பொம்மை நாயகி'. இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைக்க, அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


    பொம்மை நாயகி

    சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடலான 'கடற்கர காத்து வீசுதே' பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.




    • யோகிபாபு மற்றும் பிரமோத் ஷெட்டி இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் சன்னிதானம் பிஓ.
    • இப்படத்தை சபரிமலையில் கிளாப் அடித்து விக்னேஷ் சிவன் துவங்கி வைத்துள்ளார்.

    யோகிபாபு மற்றும் பிரமோத் ஷெட்டி இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் சன்னிதானம் பிஓ. ராஜீவ் வைத்யா இயக்கும் இப்படத்தை சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

     

    சன்னிதானம் பிஓ

    சன்னிதானம் பிஓ


    இப்படத்தின் துவக்க விழா பூஜை மகரவிளக்கு ஜோதி தினத்தில் சபரிமலை சன்னிதானத்தில் நடைபெற்றது. பிரபல இயக்குனரும், நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் இந்த படத்தின் முதல் கிளாப்பை அடித்து துவங்கி வைத்தார். திருவிதாங்கூர் தேவசம் போர்டின் தலைவரான அட்வகேட் அனந்தகோபன் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.


    விக்னேஷ் சிவன் - சன்னிதானம் பிஓ

    விக்னேஷ் சிவன் - சன்னிதானம் பிஓ

    சபரிமலை பின்னணியில் உருவாக இருக்கும் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகிறது. சபரிமலை சன்னிதானம், அங்கே பணிபுரியும் டோலி தூக்கும் பணியாளர்கள் மற்றும் சன்னிதானத்தில் அமைந்துள்ள போஸ்ட் ஆபீஸ் இவற்றை பின்னணியாக வைத்து இந்த படம் உருவாகிறது. இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு திரைப்படத்தின் பூஜை மகர ஜோதி நாளில் சபரிமலை சன்னிதானத்தில் நடைபெறுவது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு
    • விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ திரைப்படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. சமீபத்தி விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.


    மிஸ் மேகி

    தற்போது இவர் இயக்குனர் லதா ஆர் மணியரசு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் 'மெஹந்தி சர்க்கஸ்' மாதம்பட்டி ரங்கராஜ், ஆத்மிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் இசையமைக்கிறார்.


    மிஸ் மேகி

    இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'மிஸ் மேகி' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. ஆங்கிலோ இந்தியன் பாட்டி கெட்டப்பில் வித்தியாசமான லுக்கில் யோகி பாபு இடம் பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




    • முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு, தற்போது கதாநாயகனுக்கு முக்கியதுவமுள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
    • இவர் நடித்துள்ள புதிய படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு, தற்போது கதாநாயகனுக்கு முக்கியதுவமுள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் தற்போது அறிமுக இயக்குனர் முருகேஷ் இயக்கத்தில் மலை என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து லக்‌ஷ்மி மேனன் நடிக்கிறார். லெமன் லீஃப் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார்.

     

    மலை

    மலை

     

    இந்நிலையில் மலை படத்தின் போஸ்டரை இசையமைப்பாளர் டி.இமான் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். லக்‌ஷ்மி மேனன் மற்றும் யோகிபாபு இடம்பெற்றுள்ள அந்த போஸ்டர் படத்தின் ஒரு சிறிய தொகுப்பை உள்ளடக்கியது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    • சினிமாப்பட விநியோகஸ்தர் மதுராஜ் ஏ.வி.எம். அவின்யூ பகுதியில் அலுவலகம் நடத்தி வருகிறார்.
    • இவரது ஊழியர்கள் இரண்டு பேரை மர்ம கும்பல் கடத்தி சென்றுள்ளனர்.

    சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் மதுராஜ். சினிமாப்பட விநியோகஸ்தர். விருகம்பாக்கம் ஏ.வி.எம். அவின்யூ பகுதியில் அலுவலகம் நடத்தி வருகிறார். போரூர் பகுதியை சேர்ந்த கோபி, பென்சீர் ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இதையடுத்து நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடித்த "ஷூ" என்கிற சினிமா படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடவும், சேட்டிலைட் உரிமம் ஆகியவற்றை ரூ.1கோடியே 10 லட்சத்துக்கு பேசி ரூ.17 லட்சம் முன்பணம் கொடுத்து மீதமுள்ள தொகையை 2 தவணைகளாக 90 நாட்களுக்குள் கொடுத்து விடுவதாக மலேசியாவைச் சேர்ந்த பட தயாரிப்பாளரிடம் மதுராஜ் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

    இதனிடையே மதுராஜ் தனது மனைவியின் பிரசவத்திற்காக சொந்த ஊரான மதுரைக்கு சென்று விட்டதாக தெரிகிறது இதனால் அவர் சொன்னபடி தயாரிப்பாளருக்கு பணம் கொடுக்க காலதாமதம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மதுராஜ் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.


    ஷூ

    இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி மதுராஜ் அலுவலகத்திற்குள் புகுந்த 13 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கிருந்த ஊழியர்கள் கோபி, பென்சீர் ஆகிய இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்து கத்தி முனையில் காரில் ஏற்றி கடத்தி சென்றனர். தாம்பரம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டிய கும்பல், அவர்கள் ஏ.டி.எம் கார்டு மற்றும் செல்போன்களையும் பறித்துக் கொண்டனர்.

    பின்னர் அவர்களை தாம்பரம் ரெயில் நிலையம் அருகே இறக்கிவிட்டு மிரட்டல் விடுத்து தப்பி சென்றுவிட்டனர். மேலும் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.70 ஆயிரத்தை எடுத்துக் கொண்டனர். இதுபற்றி அறிந்த சினிமா வினியோகஸ்தர் மதுராஜ் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். உதவி கமிஷனர் கவுதமன், இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்த கடத்தல் தொடர்பாக தாம்பரம் அருகே பதுங்கி இருந்த நாகராஜ், வினோத் குமார், சொக்கலிங்கம், பிரசாந்த் ஆகிய 4 பேரை இன்று அதிகாலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய நபர்களை தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நாகராஜ், வினோத் குமார் இருவரும் வக்கீல்கள் என்பதும் சொக்கலிங்கம் கல்லூரி மாணவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு.
    • பணம் வாங்கிகொண்டு நடிக்க மறுப்பதாக பட அதிபர் சங்கத்தில் யோகிபாபு மீது தயாரிப்பாளர் கின்னஸ் கிஷோர் புகார் அளித்துள்ளார்.

    'தாதா' என்ற பெயரில் தயாராகி உள்ள படத்தில் யோகிபாபு, நிதின் சத்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். நாயகியாக காயத்ரி மற்றும் நாசர், மனோபாலா, சிங்கமுத்து, புவனேஸ்வரி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி கின்னஸ் கிஷோர் தயாரித்து இயக்கி உள்ளார். தாதா படத்தில் நான் கதாநாயகன் இல்லை என்று யோகிபாபு சமீபத்தில் மறுப்பு வெளியிட்டார்.

    யோகிபாபு

    யோகிபாபு

     

    இதுகுறித்து தாதா படத்தின் தயாரிப்பாளர் கின்னஸ் கிஷோர் பட விழாவில் பேசும்போது, ''யோகிபாபுவுக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறேன். அந்த நன்றிகூட இல்லாமல் நடந்துகொள்கிறார். இந்தப் படத்தில் யோகிபாபு 4 சீனில் நடித்திருந்தால் நான் சினிமாவை விட்டே போய்விடுகிறேன். அதுவே 40 சீன்களுக்கு மேல் நடித்திருந்தால் அவர் சினிமாவை விட்டு போய்விடுவாரா? தாதா படத்தை வாங்காதீர்கள் என்று பலருக்கு போன் செய்து தடுக்கிறார். எனக்கு இன்னொரு படம் நடித்து தருவதாக பணம் வாங்கி கொண்டு நடிக்கவும் முன்வரவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை. எனக்கு படம் நடித்துக் கொடுக்காதவரை வேறு எந்தப் படத்திலும் நடிக்கக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன். விரைவில் இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள்" என்றார்.

    • பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு கடந்த சில வருடங்களுக்கு முன்பு மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
    • இந்த தம்பதியினருக்கு தீபாவளி தினத்தில் பெண் குழந்தை பிறந்தது.

    தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. இவர் நடிப்பில் வெளியான காக்கிச் சட்டை, வேதாளம், ரெமோ, சர்கார், விஸ்வாசம், கூர்கா உள்ளிட்ட படங்களில் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திக்கேயன், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.

     

    மஞ்சு பார்கவி - யோகிபாபு 

    மஞ்சு பார்கவி - யோகிபாபு 

    யோகிபாபு கடந்த சில வருடங்களுக்கு முன்பு மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தீபாவளி தினமான நேற்று இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு திரையுலகினர் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய்.
    • இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 67' படத்தை இயக்கவுள்ளார். இப்படம் தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி 67 படத்தில் காமெடி நடிகர் யோகி பாபு இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இது உறுதியானால், விஜய்யுடன் யோகிபாபு இணையும் 6-வது படமாக 'தளபதி 67' இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ரஜினியின் 169-வது திரைப்படமான ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகி வைரலாகி வருகிறது.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

     

    வசந்த் ரவி - ரம்யா கிருஷ்ணன்

    வசந்த் ரவி - ரம்யா கிருஷ்ணன்

    இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று காலை 11 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

     

    யோகிபாபு - விநாயகன்

    யோகிபாபு - விநாயகன்

    இந்நிலையில் இப்படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜெயிலர் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் இணைந்துள்ளதாக படக்குழு வீடியோவுடன் அறிவித்துள்ளது.

    • இயக்குனர் எஸ்.பி. ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லோக்கல் சரக்கு
    • இப்படத்தில் தினேஷ் மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும் கதாநாயகனாகவும் வலம் வருபவர் யோகி பாபு. இவரின் 'மெடிக்கல் மிராக்கல்', 'பூமர் அங்கிள்' போன்ற படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதோடு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து, யோகிபாபு, இ மாஸ்டருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் படம் ஒன்றில் நடிக்கிறார். டிஸ்கவர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை ராஜ் குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைக்கிறார்.


    லோக்கல் சரக்கு ஃபர்ஸ்ட்லுக்

    இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு 'லோக்கல் சரக்கு' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. யோகிபாபு மற்றும் தினேஷ் மாஸ்டர் இடம்பெற்றுள்ள இப்படத்தின் போஸ்டரை நடிகர் சூரி தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

    ×