என் மலர்
நீங்கள் தேடியது "vignesh sivan"
- நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் தனது இரட்டை குழந்தைகளுடன் தலை தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர்.
- அப்போது அனைவருக்கும் வீடியோ பதிவின் மூலம் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9-ந்தேதி திருமணம் செய்துகொண்டனர். சமீபத்தில் இவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது என சமூக வலைத்தளங்களில் அறிவித்து பெரும் அதிர்வலையை கிளப்பினர். பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே இந்த ஜோடி இந்த வருடம் தலை தீபாவளியை கொண்டாடினர்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
இந்நிலையில் நேற்று தனது இரட்டை குழந்தைகளுடன் தலை தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர். இதுதொடர்பாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் குழந்தைகளை ஏந்தியப்படி தீபாவளி வாழ்த்தை தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- நேற்று முன்தினம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவித்தனர்.
- இதனிடையில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது தெரியவந்தது.
நடிகை நயன்தாராவின் காதல், கல்யாணம், குழந்தை எல்லாமே பரபரப்பாக பேசப்படும் விஷயமாகி விட்டது. நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாராவின் வாழ்க்கையும் சினிமாவை போலவே பரபரப்பு, எதிர்பார்ப்பு நிறைந்ததாக மாறிவிட்டது. நயன்தாராவின் காதல் கிளைமாக்ஸ் காட்சி இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அரங்கேறியது. ஆறு ஆண்டுகளாக காதலித்தவர்கள் ஒன்றாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கள் திருமணத்தையும் நடத்தினார்கள். திருமணமான நான்கு மாதத்தில் அதே 9-ந்தேதி தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக அறிவித்தனர். பிஞ்சு குழந்தையின் கால்களை இருவரும் முத்த மிடுவது போன்ற புகைப்படத்தையும் இணையதளத்தில் வெளியிட்டு 2 குழந்தைகளுக்கு அம்மா, அப்பா ஆகிவிட்டோம் என்றனர்.

திருமணமான 4 மாதத்தில் குழந்தையா? என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு வேளை திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாக இருந்திருப்பார். அதனால் அவசர அவசரமாக திருமணம் செய்திருப்பாரோ என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இந்த சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பது தெரியவந்தது.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது எளிதான காரியமில்லை. பல்வேறு கட்டுப்பாடுகளையும் அதற்கான சட்டத்தையும் கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. எந்த சூழலில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறித்த விவரம் பின்வருமாறு:

* திருமணமான பெண்ணுக்கு கர்ப்பப்பை இல்லாமல் இருந்தால்.
* கர்ப்பப்பை வளர்ச்சி அடையாமல் இருந்தால்.
* கேன்சர் போன்ற நோய்களால் கர்ப்பப்பை அகற்றப்பட்டிருந்தால்.
* தெரியாத காரணங்களால் கரு பலமுறை தங்காத சூழ்நிலை.
* இயற்கையாகவே கருதங்கும் தன்மை இல்லாமல் பலமுறை கலைந்து போதல்.
* கருவை சுமந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று உறுதிப்படுத்தப்பட்டால்.

இப்படிப்பட்ட ஏதாவது காரணங்கள் இருந்தால் மட்டுமே வாடகை தாயை நாட முடியும். இந்த சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட மருத்துவமனை மத்திய அரசின் பிரத்தியேக கவுன்சிலில் பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். அந்த மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர், மயக்கவியல் நிபுணர், கருவை 56 நாட்கள் வரை வெளியில் வைத்து பாதுகாப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ நிபுணர், ஒரு கவுன்சிலர் ஆகியோர் கட்டாயம் இருக்க வேண்டும்.

வாடகை தாய்க்கு 36 மாதங்களுக்கு மருத்துவ காப்பீடு கட்டாயம் எடுத்திருக்க வேண்டும். 56 நாட்கள் உருவான கருவை வாடகை தாயின் கர்ப்பப்பைக்குள் ஒரு முறை மட்டுமே செலுத்த வேண்டும். இந்த சட்டத்தை மீறும் தம்பதிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வாடகை தாயை கண்காணித்து வரும் மருத்துவமனைகள் கரு உருவான முதல் மாதத்தில் இருந்தே மாதந்தோறும் பரிசோதித்து வர வேண்டும். அதற்காக 'பிக்மி' வரிசை எண்ணும் வழங்க வேண்டும்.

இந்த எண் இருந்தால் தான் மட்டுமே பிறக்கும் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கூட பெற முடியும். இவ்வளவு நடைமுறை இருக்கும் போது அவற்றை நயன்தாரா பின்பற்றினாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திருமணம் முடிந்து ஒரு குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து சிகிச்சை, சோதனைகள் மேற்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை என்ற பிறகே வாடகைத்தாய் முறைக்கு செல்ல வேண்டும்.

ஆனால் நயன்தாரா விவகாரத்தில் திருமணத்துக்கு முன்பே வாடகைத் தாயிடம் கரு வளர்க்கப்பட்டுள்ளது. எனவே இது விதிமீறல் செயல் என பலரும் பேசி வருகின்றனர். இந்த பிரச்சினை சர்ச்சையானதும் இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கேட்டபோது நயன்தாராவிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையடுத்து மருத்துவத்துறை அதிகாரிகள் உடனடியாக களத்தில் இறங்கி விசாரணை மேற்கொண்டனர். தமிழகத்தில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் தான் வாடகை தாய் குழந்தை பெற்றுள்ளார். அந்த மருத்துவமனை, வாடகை தாயின் பெயர் விபரங்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் உடனடியாக சேகரித்தனர். அவற்றை ரகசியமாக வைத்துள்ள அதிகாரிகள் விபரங்களை வெளியிட மறுத்துவிட்டனர்.

இதற்கிடையில் நயன்தாரா விவகாரத்தில் விதிகள் மீறப்பட்டுள்ளதா? என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி விவாதிக்க மருத்துவதுறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் டி.எம்.எஸ்.சில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்றனர் அதிகாரிகள்.
- நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9-ம் தேதி பிரமாண்டமாக நடந்தது.
- எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை:
நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது.
இந்நிலையில், எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில், நயன்தாராவும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசீர்வதிக்கப்ட்ட இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்காக வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
- எச்.வினோத் இயக்கத்தில் தற்போது அஜித் ‘துணிவு' படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தை தொடர்ந்து ஏகே-62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.
எச்.வினோத் இயக்கத்தில் தற்போது அஜித் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார்.

விக்னேஷ் சிவன் - அஜித் - அனிருத்
"அஜித் நடிக்கும் புதிய படத்தில் 'மாஸ்' காட்டும் வில்லன் நடிகர் நிச்சயம் இருப்பார்" என்று சமீபத்தில் விக்னேஷ் சிவன் தெரிவித்து இருந்தார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்திருந்தது. அஜித்துடன் மோதும் வில்லன் கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதி, ராணா பெயர்களும் அடிபட்டன.

கவுதம் மேனன் - அஜித்
ஆனால் தற்போது அஜித்துக்கு வில்லனாக நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் கவுதம் வாசுதேவ் மேனன் அஜித் படத்தில் வில்லனாக நடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கவுதம் மேனன் - அஜித்
கவுதம் வாசுதேவ் மேனன் படங்களை இயக்குவதை தாண்டி சில படங்களில் நடித்துள்ளார். மேலும் ஒரு சில படங்களில் 'டப்பிங்' வசனமும் பேசியிருக்கிறார். சமீபத்தில் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் இவரின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

கவுதம் மேனன் - அஜித்
அஜித் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்...' படத்தில் வரும் 'அதாரு... அதாரு...' என்ற பாடலை விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
- இவரின் பிறந்தநாளில் அவருக்கு நயன்தாரா உலகின் உயரமான கட்டிடம் முன் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதி திருமணத்திற்கு பிறகு சமீபத்தில் துபாய் சென்றனர். நேற்று விக்னேஷ் சிவனின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு தெரியாமல் உலகின் உயரமான கட்டிடம் புர்ஜ் கலீபா வளாகத்தில் பிறந்தநாளை கொண்டாட நயன்தாரா ஏற்பாடு செய்திருந்தார். இதில் இருதரப்பு நண்பர்கள் வட்டாரத்தில் இருந்தும் பலர் கலந்துகொண்டனர்.

விக்னேஷ் சிவன்-நயன்தாரா
அப்போது 3 பிறந்த நாள் கேக்குகள் வைக்கப்பட்டு இருந்துள்ளது. அதில் முதலாவது கேக்கில் 'ஹேப்பி பர்த் டே மகனே' என்றும், 2-வது கேக்கில் 'ஹேப்பி பர்த் டே விக்கி சார்' என்றும் 3-வது கேக்கில் 'ஹேப்பி பர்த் டே உலகம்' என்றும் எழுதப்பட்டு இருந்தது.

இதில் உலகம் என குறிப்பிட்ட கேக் நயன்தாராவின் சார்பில் வைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த விக்னேஷ் பூரிப்படைந்துள்ளார். தனது பிறந்தநாள் குறித்து விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளதாவது, ஒரு அன்பான குடும்பத்தின் தூய்மையான அன்பினால் நிரப்பப்பட்ட பிறந்தநாள். என் மனைவியால் அற்புதமான ஆச்சரியம், என் தங்கம். புர்ஜ் கலிஃபாவிற்கு கீழே எனது அன்பான மக்கள் அனைவருடனும் ஒரு மறக்கமுடியாத பிறந்தநாள்! இதை விட சிறப்பாக பெற முடியாது.

பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன்
இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையில் அவர் எனக்குக் கொடுத்த அனைத்து அழகான தருணங்களுக்காக எப்போதும் கடவுளுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது புர்ஜ் கலீபா கட்டிடத்தின் கீழ் இருவரும் நெருக்கமாக நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- நடிகை கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள 'கொஞ்சம் பேசினால் என்ன' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
- இதனை இயக்குனர் விக்னேஷ் சிவன தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
'தும்பா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான கீர்த்தி பாண்டியனும், 'நான் மகான் அல்ல' புகழ் வினோத் கிஷனும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'கொஞ்சம் பேசினால் என்ன'. இப்படத்தை அறிமுக இயக்குனர் கிரி மர்பி இயக்கியுள்ளார். இந்த படத்தில் யூடியூப் பிரபலமான ஆஷிக், செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூப்பர் டாக்கீஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையில் லெனின் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கொஞ்சம் பேசினால் என்ன
இந்நிலையில் 'கொஞ்சம் பேசினால் என்ன' படத்தின் டீசரை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வாழ்க்கையில் மீண்டும் சந்திக்கும் பள்ளி நண்பர்கள் இருவர் காதலிப்பதை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Happy to launch the teaser of #KonjamPesinaalYennaProduced by @supertalkies @sameerbr *ing @vinoth_kishan @iKeerthiPandian @GiriMurphy @Mrtmusicoff @konjampesinaal1 @onlynikil #KPYhttps://t.co/v2eXjOmlbQ Heart wishes to the entire team for a grand success 😇💐❤️ pic.twitter.com/6YWDtzX89t
— Vignesh Shivan (@VigneshShivN) September 1, 2022