ஏகே62 படத்தில் வில்லனாக களமிறங்கும் மாஸ் இயக்குனர்

எச்.வினோத் இயக்கத்தில் தற்போது அஜித் ‘துணிவு' படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை தொடர்ந்து ஏகே-62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.
அஜித்
அஜித்
Published on

எச்.வினோத் இயக்கத்தில் தற்போது அஜித் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார்.

விக்னேஷ் சிவன் - அஜித் - அனிருத்
விக்னேஷ் சிவன் - அஜித் - அனிருத்

விக்னேஷ் சிவன் - அஜித் - அனிருத்

"அஜித் நடிக்கும் புதிய படத்தில் 'மாஸ்' காட்டும் வில்லன் நடிகர் நிச்சயம் இருப்பார்" என்று சமீபத்தில் விக்னேஷ் சிவன் தெரிவித்து இருந்தார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்திருந்தது. அஜித்துடன் மோதும் வில்லன் கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதி, ராணா பெயர்களும் அடிபட்டன.

கவுதம் மேனன் - அஜித்
கவுதம் மேனன் - அஜித்

கவுதம் மேனன் - அஜித்

ஆனால் தற்போது அஜித்துக்கு வில்லனாக நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் கவுதம் வாசுதேவ் மேனன் அஜித் படத்தில் வில்லனாக நடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கவுதம் மேனன் - அஜித்
கவுதம் மேனன் - அஜித்

கவுதம் மேனன் - அஜித்

கவுதம் வாசுதேவ் மேனன் படங்களை இயக்குவதை தாண்டி சில படங்களில் நடித்துள்ளார். மேலும் ஒரு சில படங்களில் 'டப்பிங்' வசனமும் பேசியிருக்கிறார். சமீபத்தில் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் இவரின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

கவுதம் மேனன் - அஜித்
கவுதம் மேனன் - அஜித்

கவுதம் மேனன் - அஜித்

அஜித் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்...' படத்தில் வரும் 'அதாரு... அதாரு...' என்ற பாடலை விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com