search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யாகம்"

    • இந்நாளில் இரவு 12 மணிக்குத்தான் அகோர வீரபத்திரர் தோன்றினார் என்பர்.
    • ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் இரவில் அகோர பூஜை செய்யப்படுகிறது.

    அகோர வீரபத்திரர் விரதம்

    அகோர வீரபத்திரருக்கு விரதமிருக்க விரும்புவோர் மாசிமாதம் கிருஷ்ணபட்சம், பிரதமைதிதி, பூரம் நட்சத்திரம், ஞாயிற்றுக் கிழமையன்று விரதம் தொடங்க வேண்டும்.

    ஏனெனில் இந்நாளில் இரவு 12 மணிக்குத்தான் அகோர வீரபத்திரர் தோன்றினார் என்பர்.

    திருவெண்காட்டில் அகோர வீரபத்திரருக்கு ஒவ்வொரு ஆண்டும் அவர் தோன்றிய நாளில், நேரத்தில் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.

    மேலும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் இரவில் அகோர பூஜை செய்யப்படுகிறது.

    கார்த்திகை மாதம் ஈசனுக்கு உகந்தது என்பதால் கார்த்திகை ஞாயிறு வழிபாடு சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

    இவ்வழிபாட்டில் பசுவின்பால், பால்சாதம், எலுமிச்சை சாதம், மஞ்சள் நிற இனிப்பு வகைகள் போன்றவற்றை நைவேத்தியமாகப் படைப்பது சிறப்பாகும்.

    அகோர வீரபத்திரரை ஈசனுக்குரிய திங்கட்கிழமையன்றும் பிரதோஷ நாளன்றும் நித்திய பிரதோஷ நேரத்திலும் சிவராத்திரி தினத்தன்றும் வழிபடுவது மிகமிக நன்று.

    இத்தகு வழிபாடுகள் வாழ்வியல் சிக்கல்களை நீக்கிடவும் எடுத்த செயல்களில் வென்றிடவும் உதவும்.

    • இந்திரன் இவ்விரதமிருந்ததால் கற்பக நாட்டு அரசுரிமையைப் பெற்றான்
    • காரமான புளிசாதத்தை நைவேத்தியம் செய்து தானம் அளித்தல் வேண்டும்.

    வீரபத்திரர் விரதம்

    சித்திரை மாதம் முதல் செவ்வாய்க் கிழமையன்று வீரபத்திரர் விரதத்தைத் தொடங்க வேண்டும்.

    கலசத்தில் வீரபத்திரர் திருவுருவினை அமைத்து அதற்கு அபிஷேகம், அர்ச்சனை, பூஜை முதலியன செய்து வழிபடுவதோடு அன்று முழுவதும் விரதம் இருந்து மறுநாள் கலசத்தில் நிறுவிய வீரபத்திரர் திருவுருவை பாரணை செய்தல் வேண்டும்.

    இத்தகைய விரதத்தை நான்முகன் மேற்கொண்டதால் வீரபத்திரர் தக்கனுடன் போர் செய்த காலத்தில் வீரபத்திரருக்குத் தேர்ச்சாரதியாகும் பேறு பெற்றான் என்றும்,

    இந்திரன் இவ்விரதமிருந்ததால் கற்பக நாட்டு அரசுரிமையைப் பெற்றான் என்றும், வேதியர்கள் பலர் இவ்விரதமிருந்து மெய்ஞ்ஞான நிலையை அடைந்தனர் என்றும் கூறுவர்.

    இவ்விரதம் இருப்போர் முக்தி நிலையடையவர் என்று நம்புகின்றனர்.

    இவ்விரதத்தின் போது சிவந்த நிறமுடைய மலர்களாலும் சந்தன உருண்டைகளாலும் வெண்ணெய், வெற்றிலை போன்ற பொருட்களாலும் வீரபத்திரரை பூஜிக்க வேண்டும்.

    வில்வங்களை கொண்டு வீரபத்திரர் நாமங்களைத் துதிப்பது மிகவும் சிறப்பாகும்.

    இவ்விரதத்தின் போது காரமான புளிசாதத்தை நைவேத்தியம் செய்து தானம் அளித்தல் வேண்டும்.

    இதனால் பகை நீக்கம், புத்திரவிருத்தி, சகோதரபலம், நல்வழியில் நடப்பதற்கு ஏற்ற மன உறுதி ஆகியவை கிடைக்கும்.

    திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் வீரபத்திரரை வேண்டி இவ்விரதமிருந்தால் செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் கிடைக்கும்.

    • வீரபத்திரரை அமாவாசை மற்றும் பவுர்ணமியில் வழிபடலாம்.
    • பூர நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது மிகவும் விசேஷம்.

    வீரபத்திரரை எப்போது வழிபாடு செய்யலாம்?

    அகோர மூர்த்தியான வீரபத்திரர் மாசி மாதத்தில் கிருஷ்ணபட்சத்தில் பூர நட்சத்திரம் கூடிய பிரதமை திதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு அவதரித்தார்.

    இதனால் பூர நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது மிகவும் விசேஷம்.

    வெற்றியின் சின்னமான வெற்றிலை மாலையை ஆடிப்பூரத்தன்று சாத்துவது விசேஷ பலன்களைத் தரும்.

    வீரபத்திரரை அமாவாசை மற்றும் பவுர்ணமியில் வழிபடலாம்.

    சித்திரை முதல் செவ்வாய் கார்த்திகை ஞாயிறு ஆடிப்பூரம் மாசி சிவராத்திரி தமிழ் வருடப் பிறப்பு மற்றும் செவ்வாய் வெள்ளிக் கிழமைகள் இவரை வழிபடுவதற்குரியவை.

    பால், தயிர், சந்தனம், வெண்ணெய் முதலியவற்றை வழிபாட்டில் பயன்படுத்தலாம்.

    வெற்றிலை மாலை சாத்தலாம்.

    மஞ்சள்,ரோஜா செம்பருத்தி தும்பை செவ்வரளி வில்வ தளங்கள் கொண்டு அர்ச்சிக்கலாம்.

    பசும்பால் எலுமிச்சை சாறு மஞ்சள் நிற இனிப்புகளை படைத்து இவரை வழிபட எண்ணிய காரியங்கள் ஈடேறும்.

    • வெள்ளைநிற வஸ்திரம் வைராக்கியத்தின் அடையாளம்.
    • பெயரிலேயே வெற்றியை கொண்டிருப்பதாலும் வீரபத்திரருக்கு வெற்றிலைமாலை சாற்றப்படுகிறது.

    வீரபத்திரருக்கு உகந்த தும்பைபூ மாலை

    அஞ்சாமல் அதிரடி போர் புரிய வெற்றிசின்னமாக போர்வீரர்கள் தும்பைபூ மாலை அணிவது பழந்தமிழர் வழக்கம்.

    வீரபத்திரபெருமானும் தும்பைபூ மாலை அணிந்து தட்சனின் யாகத்தை அழிக்க சென்றார் என்று தாராசுரம், ஐராவதேவதேஸ்வர் ஆலயதிலுள்ள வீரபத்ரப் பரணி அல்லது தக்கயாகப் பரணி எனும் இலக்கியம் எழுதிய ஒட்டகூத்தர் உரைக்கிறார்.

    எனவே வீரபத்ரருக்கு தும்பைபூ மாலை விசேஷம், தும்பைபூ அர்ச்சனையும் விசேஷம்.

    வெள்ளைநிற வஸ்திரம் வைராக்கியத்தின் அடையாளம்.

    போருக்கு வெண்நிற ஆடை அணிந்து சென்றார் என்பதாலும் வீரபத்திரருக்கு வெண்மை நிற வஸ்திரம் விசேஷம்.

    அதிலும் வண்ணநிற கறைகள் இல்லாதது அதிவிசேஷம்.

    வடைமாலை, சந்தனகாப்பு, வெண்ணெய்காப்பு, வெற்றிலைமாலை சாற்றுதல், வெற்றிலை படல் சாற்றுதல் முதலியனவும் உன்னதமானவை.

    போருக்கு செல்லும் வீரர்க்கு அவரது உறவினர்கள் மங்கலப்பொருளான வெற்றிலைப்பாக்கு கொடுத்து வாழ்த்தி வழி அனுப்புவது நமது பண்டைய வழக்கமாகும்.

    வீரபத்திரர் வெற்றிக்குரிய கடவுளாகப் போற்றபடுவதாலும், பெயரிலேயே வெற்றியை கொண்டிருப்பதாலும் வீரபத்திரருக்கு வெற்றிலைமாலை சாற்றப்படுகிறது.

    சுவாமியை சுற்றி அதற்கென உள்ள மர பிரபையில் வெற்றிலைகளை அழகுபட அலங்கரித்து கட்டுவது வெற்றிலைபடல் எனப்படும்.

    இது விரிவான வழிபாடாகும்.

    அதாவது 12,800 வெற்றிலைகளை சாற்றுவது உத்தமம் என்றும் அதில்பாதியாக 6,400 சாற்றுவது மத்யமம் எனவும் இதைப்பற்றி அறிந்தபெரியோர்கள் தெரிவிக்கின்றனர்.


    • நமக்கு தன்னம்பிக்கையும், தைரியமும், உண்டாகிடும், வாழ்வு சிறக்க வழிவகுக்கும்.
    • கார்த்திகை மாத ஞாயிற்று கிழமை, சித்ரா பவுர்ணமியும் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தவை.

    வீரபத்திரரை எப்படி வழிபடுவது?

    அனல் போன்ற கோபம் கொண்டவர் ஸ்ரீ வீரபத்ரர்,

    எனவே அவரை அங்காரனின் (செவ்வாய்) அம்சமாக கொண்டு அவரது வழிபாட்டுக்கு உகந்ததினமாக செவ்வாய் கிழமையை சொல்கிறார்கள்.

    வீரபத்திரரை வழிபடுவதால் பேய்பிடித்தல், பில்லி, சூனியம் எனும் மனநோய்கள் போன்ற கண் காணாத் தொல்லைகள், மற்றும் மனதில் தோன்றும் இனம் புரியாத அச்சம் போன்றவையும் விலகுகிறது.

    நமக்கு தன்னம்பிக்கையும், தைரியமும், உண்டாகிடும், வாழ்வு சிறக்க வழிவகுக்கும்.

    பவுர்ணமி, செவ்வாய் கிழமை, ஞாயிற்று கிழமை, குறிப்பாக கார்த்திகை மாத ஞாயிற்று கிழமை, சித்ரா பவுர்ணமியும் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தவை.

    தேய்பிறை அஷ்டமி தினங்களும் பைரவ வழிபாடு போன்று வீரபத்திரர் வழிபாடும் சில ஆலயங்களில் காணப்படுகிறது.

    பவுர்ணமி வழிபாட்டில் பால், தயிர், போன்ற வெண்மைநிற அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்து வெள்ளை நிற வஸ்திரம் (சில இடங்களில் கரையில்லா வெள்ளைவேட்டி சாற்றுவர்) வெள்ளைநிற மலர் மாலைகள் அணிவித்து, வெண்நிறம் கொண்டதயிர்சாதம், பாலன்னம் பால்பாயஸம், வெண்கற்கண்டு, பொங்கல் போன்ற நிவேதனங்கள் செய்து வெள்ளை மலர்களால் அர்ச்சிப்பது சிறப்பு என்பர்.

    • இந்த வரலாறு மூலம் சரபேஸ்வரராக அவதாரம் எடுத்தது நமது வீரபத்திரர்தான் என்பது தெரியும்.
    • நிறைய சிவாலயங்களில் சரபேஸ்வரர் சிலை தூண்களில் உள்ளது.

    வீரபத்திரரே சரபேஸ்வரர்

    இரணியன் என்ற அரக்கனைத் திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்துக் கொன்றார்.

    இரணியனின் குடலை மாலையாக்கிக் ரத்தம் குடித்துச் கோபத்தில் ஆரவாரித்தார்.

    அவருடைய கோபத்தைச் சிவபெருமானே தீர்க்க வேண்டும் என்று தேவர்கள் முறையிட, சிவன் தன்சார்பில் வீரபத்திரரை அனுப்பினார்.

    வீரபத்திரர் எட்டுக் கால்களும், இரண்டு பெரிய சிறகுகளும், சிங்க முகமும், நீண்டு வளைந்த மூக்கும் கொண்ட சரபப் பட்சியானார்.

    திருமாலுடன் போரிட்டு வென்றார். திருமாலின் கோபத்தை அடக்கினார் என்கிறது சரப புராணம்.

    இந்த வரலாறு மூலம் சரபேஸ்வரராக அவதாரம் எடுத்தது நமது வீரபத்திரர்தான் என்பது தெரியும்.

    நிறைய சிவாலயங்களில் சரபேஸ்வரர் சிலை தூண்களில் உள்ளது.

    ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் சரபேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

    சென்னை கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வரர் கோவிலில் இந்த வழிபாடு சிறப்பாக நடத்தப்படுகிறது.

    • அவர் அருளால் முப்பத்து முக்கோடி தேவர்களும் மீண்டும் உயிர் பெற்றனர்.
    • இதையடுத்து அங்கு சிவபெருமான், ரிஷப வாகனத்தில் தோன்றினார்.

    வீரபத்திரர் அவதார கதை-ஆட்டுத்தலை பொருத்தப்பட்ட தட்சன்

    அப்போது திருமால், வீரப்பத்திரரை எதிர்த்தார்.

    அப்போது திருமாலின் சக்கரத்தை வீரபத்திரர் அணிந்திருந்த கபால மாலையில் உள்ள ஒரு முகம் கவ்விக் கொண்டது.

    இதன் மூலம் தட்சனோடு சேர்ந்திருந்த எல்லா தேவர்களும் தண்டிக்கப்பட்டனர்.

    வீரபத்திரரின் ஆவேசத்துக்கு முன்பு இனி தப்ப முடியாது என்பதை உணர்ந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் அடி பணிந்தனர்.

    தாங்கள் செய்த தவறை மன்னித்து பொறுத்து அருளும் படி வேண்டினார்கள்.

    இதையடுத்து அங்கு சிவபெருமான், ரிஷப வாகனத்தில் தோன்றினார்.

    அவர் அருளால் முப்பத்து முக்கோடி தேவர்களும் மீண்டும் உயிர் பெற்றனர்.

    தலை இழந்த தட்சனுக்கு ஆட்டுத்தலை பொருத்தப்பட்டது.

    அப்போது தட்சன், யாகசாலை இருந்த இடத்தில் தோன்றிய ஈசன், அங்கு இருந்தபடியே மக்கள் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

    இது தான் வீரபத்திரரின் அவதார கதை.

    இந்த அவதார நிகழ்வு எங்கு நடந்தது?

    அதன் பிறகு வீரபத்திரர் மக்களுக்கு எப்படி அருள் புரிகிறார்?

    வீரபத்திரரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

    அவர் வீற்றுள்ள தலங்கள் எங்கெங்கு உள்ளன?

    என்பன போன்ற தகவல்கள் இந்த பதிவில் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

    தை பிறந்தால் வழி பிறக்கும் வீரபத்திரரை வழிபட்டால் வீரம், விவேகம், வெற்றிகள் தேடி வரும்.

    வீரபத்ர மூர்த்தியார் வீர மனம்கொடுப்பார்

    தீராசெவ் வாய்தோஷம் தீர்த்திடுவார்-ஊரெல்லாம்

    நீர்மழை பெய்வார் நிறைந்திடும் செல்வங்கள்

    ஏர்வளம் காணும் நிலம்!

    • நாகமாலை அணிந்து வீரபத்திரர் வெளிப்பட்டிருந்தார்.
    • கையில் வெட்டுபட்ட அக்னி தேவன் கிளியாக மாறி பறந்தான்.

    வீரபத்திரர் அவதார கதை-தட்சனையும் அனைத்து தேவர்களையும் நிலை குலைய செய்த வீரபத்திரர்

    சிவனின் நெற்றிக்கண் தீப்பொறியில் தோன்றிய வீரபத்திரர், சிவபெருமான் போலவே மூன்று கண்கள், அக்னி சடை, 8 கைகள், அந்த கைகளில் கட்கம், கேடயம், வில், அம்பு, மணி, கபாளம், திரிசூலம் ஆகியவற்றை ஏந்தி,

    நாகமாலை அணிந்து வீரபத்திரர் வெளிப்பட்டிருந்தார்.

    தன் அவதார நோக்கத்தை நிறைவேற்ற, சிவ நின்தனை செய்த தட்சனின் யாகம் நடந்த இடத்துக்கு உடனடியாக வீரபத்திரர் விரைந்தார்.

    முதலில் அவர் தட்சனின் தலையை வெட்டி வீசினார்.

    இதை கண்டதும் யாக புருஷன், மான் வடிவம் கொண்டு ஓடினார்.

    அவரையும் வீரபத்திரர் வதம் செய்தார்.

    பிரம்மன் தலைகளும் வெட்டப்பட்டன.

    தோளில் வெட்டுப்பட்ட இந்திரன், குயிலாக மாறி மறைந்தான்.

    கையில் வெட்டுபட்ட அக்னி தேவன் கிளியாக மாறி பறந்தான்.

    சூரியனின் பற்கள் உடைந்தன.

    சரஸ்வதி மூக்கு அறுக்கப்பட்டது. முப்பத்து முக்கோடி தேவர்களும் சிதறி ஓட யாகசாலை அழிக்கப்பட்டது.

    • தட்சனையும், அவன் நடந்தும் யாகத்தையும் அழிக்க முடிவு செய்தார்.
    • அதன்படி அவரது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகள் வெடித்துக் கிளம்பின.

    வீரபத்திரர் அவதார கதை-சிவனின் நெற்றிக்கண் தீப்பொறியில் தோன்றிய வீரபத்திரர்

    தாட்சாயினி மறைவு செய்தி கேட்டதும் சிவபெருமான் கடும் கோபம் கொண்டார்.

    தட்சனையும், அவன் நடந்தும் யாகத்தையும் அழிக்க முடிவு செய்தார்.

    அது மட்டுமின்றி நீதி, நெறிதவறி தட்சனுக்கு துணை போன எல்லா தேவர்களையும் தண்டிக்கவும் அவர் முடிவு செய்தார்.

    இதற்கு தானே நேரில் சென்று போரிடுவதற்கு பதில், தன் பிரதிநிதியை அனுப்ப தீர்மானித்தார்.

    அதன்படி அவரது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகள் வெடித்துக் கிளம்பின.

    அதில் இருந்து வீரபத்திரர் தோன்றினார்.

    • ஈசன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தாட்சாயினி கேட்கவில்லை.
    • தந்தை தட்சனை திருத்த அவள் செய்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

    வீரபத்திரர் அவதார கதை-யாகத்தீயில் விழுந்த தாட்சாயிணி

    விதி வசமோ... அல்லது தந்தை பாசமோ தெரிய வில்லை.

    தட்சனின் மகளான தாட்சாயிணியும், "என் தந்தை நடத்தும் யாகத்தை காணச் செல்கிறேன். அனுமதி தாருங்கள்" என்று ஈசனிடம் வேண்டினாள்.

    ஈசன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தாட்சாயினி கேட்கவில்லை.

    "சிவத்தை விட சக்திதான் பெரிது" என்று சொல்லி விட்டு தட்சன் நடத்தும் யாகப் பகுதிக்கு வந்தாள்.

    அங்கு வந்த பிறகு தான், ஈசனுக்கு இழைக்கப்படும் அவமானங்களை உணர்ந்தாள்.

    தந்தை தட்சனை திருத்த அவள் செய்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

    கணவர் பேச்சை கேட்காமல் வந்தததற்கு தக்க தண்டனை கிடைத்து விட்டதாக வருத்தம் அடைந்த தாட்சாயினி, அங்கிருந்த யாகக் குண்டத்தில் பாய்ந்து உயிரைப் போக்கிக் கொண்டாள்.

    • அதோடு நாளடைவில் சிவனை விட தானே உயர்ந்தவன் என்று தட்சன் அகந்தை கொண்டான்.
    • திருமால், இந்திரன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்கள் அந்த யாகத்தில் பங்கேற்றனர்.

    வீரபத்திரர் அவதார கதை-தட்சணின் யாகம்

    இந்த பராக்கிரம கதை உங்களுக்குத் தெரிந்ததுதான்.

    நடிகர் திலகம் சிவாஜிகணேசன், சாவித்திரி நடித்த "திருவிளையாடல்" படத்தில் இந்த கதை இடம் பெற்றுள்ளது.

    பிரம்மனின் மகன் தட்சன். இவனது மகள் தாட்சாயினி. இவளை உலகை ஆளும் சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார்.

    இதனால் ஈசனுக்கு தட்சன் மாமனார் ஆனான், இது தட்சனை கர்வம் கொள்ள வைத்தது.

    அதோடு நாளடைவில் சிவனை விட தானே உயர்ந்தவன் என்று தட்சன் அகந்தை கொண்டான்.

    ஒரு தடவை அவன் மிக பிரமாண்டமான யாகம் நடத்தினான்.

    30 ஆயிரம் மகரிஷிகளைக் கொண்டு நடத்தப்பட்ட அந்த வேள்விக்கு ஈசனைத் தவிர தேவர் உலகத்தில் உள்ள அனைவரையும் அவன் அழைத்தான்.

    சிவபெருமானை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே அவரை அழைக்காமல் இந்த யாகத்தை நடத்தினான்.

    திருமால், இந்திரன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்கள் அந்த யாகத்தில் பங்கேற்றனர்.

    • இந்த 8 நிகழ்வுகளில் 6 தலங்களில் ஈசனே நேரடியாக சென்று போரிட்டு அசுரர்களை அழித்தார்.
    • இதில் வீரபத்திரரை அனுப்பி பெற்ற வெற்றி, உன்னதமான வெற்றியாகக் கருதப்படுகிறது.

    அட்ட வீரட்ட தலங்கள்

    தீயவர்களையும், தீயச் செயல்களையும் அழிக்க சிவபெருமான் எட்டு தடவை போர்க்கோலம் பூண்டார்.

    இந்த 8 போர்களும் 8 இடங்களில் நடந்தன.

    அந்த இடங்கள்தான் அட்ட வீரட்ட தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

    இந்த 8 நிகழ்வுகளில் 6 தலங்களில் ஈசனே நேரடியாக சென்று போரிட்டு அசுரர்களை அழித்தார்.

    மீதமுள்ள இரண்டில் ஈசன் நேரடியாக பங்கேற்கவில்லை.

    அதற்கு பதில் தன் அருட்பார்வையால் உருவான வீரபத்திரர், பைரவர் ஆகிய இருவரையும் அனுப்பி தட்சன், பிரம்மன் ஆகியோரை வதம் செய்து அருள்புரிந்தார்.

    இதில் வீரபத்திரரை அனுப்பி பெற்ற வெற்றி, உன்னதமான வெற்றியாகக் கருதப்படுகிறது.

    அந்த வெற்றி வீரவரலாறாக புராணங்களில் இடம் பெற்றுள்ளது.

    அந்த வகையில் வீரபத்திரரின் அவதாரம் ஒப்பற்ற ஒன்றாகக் கருதப்படுகிறது.

    அது மட்டுமின்றி, வீரபத்திரர் பெற்ற வெற்றி தனித்துவம் கொண்டது.

    ஏனெனில் அட்ட வீரட்டங்களில் 7 வீரட்ட தலங்களில் நடந்த போர்களில், தேவர்களுக்கு உதவி செய்யவே சிவபெருமான் போர் புரிந்தார்.

    ஆனால் வீரபத்திரரை அனுப்பி ஈசன் நடத்திய போர், தேவர்களை எதிர்த்து நடத்தப்பட்ட போராகும்.

    வீரபத்திரரின் ஆவேசத்தால் எல்லா தேவர்களும் நிலகுலைந்து போனார்கள்.

    வீரபத்திரரால் தேவர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக தண்டிக்கப்பட்ட விதம், வீர பராக்கிரமமாகப் போற்றப்படுகிறது.

    ×