search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வீரபத்திரருக்கு உகந்த தும்பைபூ மாலை
    X

    வீரபத்திரருக்கு உகந்த தும்பைபூ மாலை

    • வெள்ளைநிற வஸ்திரம் வைராக்கியத்தின் அடையாளம்.
    • பெயரிலேயே வெற்றியை கொண்டிருப்பதாலும் வீரபத்திரருக்கு வெற்றிலைமாலை சாற்றப்படுகிறது.

    வீரபத்திரருக்கு உகந்த தும்பைபூ மாலை

    அஞ்சாமல் அதிரடி போர் புரிய வெற்றிசின்னமாக போர்வீரர்கள் தும்பைபூ மாலை அணிவது பழந்தமிழர் வழக்கம்.

    வீரபத்திரபெருமானும் தும்பைபூ மாலை அணிந்து தட்சனின் யாகத்தை அழிக்க சென்றார் என்று தாராசுரம், ஐராவதேவதேஸ்வர் ஆலயதிலுள்ள வீரபத்ரப் பரணி அல்லது தக்கயாகப் பரணி எனும் இலக்கியம் எழுதிய ஒட்டகூத்தர் உரைக்கிறார்.

    எனவே வீரபத்ரருக்கு தும்பைபூ மாலை விசேஷம், தும்பைபூ அர்ச்சனையும் விசேஷம்.

    வெள்ளைநிற வஸ்திரம் வைராக்கியத்தின் அடையாளம்.

    போருக்கு வெண்நிற ஆடை அணிந்து சென்றார் என்பதாலும் வீரபத்திரருக்கு வெண்மை நிற வஸ்திரம் விசேஷம்.

    அதிலும் வண்ணநிற கறைகள் இல்லாதது அதிவிசேஷம்.

    வடைமாலை, சந்தனகாப்பு, வெண்ணெய்காப்பு, வெற்றிலைமாலை சாற்றுதல், வெற்றிலை படல் சாற்றுதல் முதலியனவும் உன்னதமானவை.

    போருக்கு செல்லும் வீரர்க்கு அவரது உறவினர்கள் மங்கலப்பொருளான வெற்றிலைப்பாக்கு கொடுத்து வாழ்த்தி வழி அனுப்புவது நமது பண்டைய வழக்கமாகும்.

    வீரபத்திரர் வெற்றிக்குரிய கடவுளாகப் போற்றபடுவதாலும், பெயரிலேயே வெற்றியை கொண்டிருப்பதாலும் வீரபத்திரருக்கு வெற்றிலைமாலை சாற்றப்படுகிறது.

    சுவாமியை சுற்றி அதற்கென உள்ள மர பிரபையில் வெற்றிலைகளை அழகுபட அலங்கரித்து கட்டுவது வெற்றிலைபடல் எனப்படும்.

    இது விரிவான வழிபாடாகும்.

    அதாவது 12,800 வெற்றிலைகளை சாற்றுவது உத்தமம் என்றும் அதில்பாதியாக 6,400 சாற்றுவது மத்யமம் எனவும் இதைப்பற்றி அறிந்தபெரியோர்கள் தெரிவிக்கின்றனர்.


    Next Story
    ×