என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sivan Sadhi Devi"
- இத்தலத்தில் பத்ரகாளிக்கு தனி சன்னதி உள்ளது.
- வெற்றிலைமாலை சார்த்தி வழிபட்டால் 96 நாட்களில் நினைத்தது நிறைவேறுகிறது.
96 நாளில் வேண்டுதல்கள் நிறைவேறும் அதிசயம்
சென்னையில் பல பகுதிகளில் வீரபத்திரர் ஆலயங்கள் சிறப்பாக உள்ளன.
அவற்றில் ராயபுரம் குமாரசாமி சந்தில் இருக்கும் "அருள்மிகு பத்ரகாளி அம்மன் வீரபத்திரர் ஆலயம்" தனிச்சிறப்புகள் கொண்டது.
தற்போது இந்து அறநிலையத்துறை பராமரிப்பில் இருந்து வரும் இந்த ஆலயத்தில் கடந்த 1995 மற்றும் 2007ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இத்தலத்தில் பத்ரகாளிக்கு தனி சன்னதி உள்ளது.
வைஷ்ணவி, பிரம்மி, மகேஸ்வரி ஆகியோரது சிலைகளும் உள்ளன.
தெட்சிணாமூர்த்தி, பைரவரும் இங்கு வழிபட படுகின்றனர்.
இத்தலத்து வீரபத்திரர் சுமார் 9 அடி உயரத்துக்கு கம்பீரமாக உள்ளார்.
இவர் இத்தலத்துக்குள் பூமிக்குள் இருந்து கிடைத்தவர் என்பது குறிப்பிடத்தக்து.
இவருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிபாடு செய்தால் 96 நாட்களில் நினைத்தது நிறைவேறுகிறது.
இதனால் ஏராளமான பக்தர்கள், வெகு தொலைவில் இருந்து கூட வந்து செல்கிறார்கள்.
ராகுவுக்கு அதிபதி துர்க்கை.
துர்க்கைக்கு அதிபதி காளி.
இதனால் இத்தலம் சர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகவும் திகழ்கிறது.
காளஹஸ்தி செல்ல இயலாதவர்கள் இங்கு அந்த பூஜைகளை செய்து பலன் பெறலாம்.
சித்ரா பவுர்ணமி தினத்தன்று இத்தலத்தில் 10 நாள் விழா நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் மாலை 5 மணிக்கு வீரபத்திரருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
- இது அகத்தியர் வழிபட்ட தலமாகும்.
- தென்நாடு செல்லும் வழியில் பல அற்புதங்கள் புரிந்தார்.
செல்வம் தரும் ஐஸ்வர்ய வீரபத்திரர்
சென்னை வில்லிவாக்கத்தில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அகஸ்தீஸ்வரர் ஆலயம் உள்ளது.
அகத்தியர் வழிபட்ட தலம் என்பதால் இங்குள்ள சிவபெருமான், அகஸ்தீஸ்வரர் பெயரில் மூலவராக இருக்கிறார்.
பரமசிவனுக்கும் பார்வதிதேவிக்கும் மேருமலைச் சாரலில் திருமணம் நடைபெற்ற போது தேவர்களும், சித்தர்களும், ரிஷி களும், யோகிகளும் ஒரே இடத்தில் கூடியதால் தென்நாடு உயர்ந்து வடநாடு தாழ்ந்தது.
இதனை சமப்படுத்த அகத்தியரை சிவபெருமான் தென்நாட்டுக்கு அனுப்பினார்.
தென்நாடு செல்லும் வழியில் பல அற்புதங்கள் புரிந்தார்.
வில்வலன், வாதாபி என்ற இரண்டு அசுர சகோதரர்களில் வாதாபியை அழித்து, வில்லவனுக்கு நல்வழி புகட்டி உண்மையான வாழ்க்கையின் பயனைக் காட்டினார்.
இதனால் இத்தலம் வில்லிவாக்கம் என்று வழங்கப்படுகிறது.
அகத்தியருக்கு சிவன், அம்பிகையுடன் காட்சி தந்தபோது அம்பாள் திருமண கோலத்தில் பொன் நகைகள் அணிந்திருந்தாள்.
எனவே அவள் ஸ்வர்ணாம்பிகை எனப்படுகிறாள்.
நவக்கிரகங்களில் அங்காரகன் [செவ்வாய்] தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்கத் தீர்த்தம் உண்டாக்கி சிவனை வழிபட்ட தலம் இது.
அதனால் செவ்வாய் தோஷப் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.
இங்கு தீர்த்தக்கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார்.
ஆடி மாதம் ஐந்து வாரங்கள் தொடர்ந்து செவ்வாய்க்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் திருமணம் நடக்க வேண்டியும் குழந்தை பாக்கியம் வேண்டியும் இங்கே வந்து வேண்டிக்கொள்கின்றனர்.
வீரபத்திரருக்கு இங்கு தனிக்கோவில் உள்ளது.
குபேர திசை நோக்கி வீரபத்திரர் அமர்ந்துள்ளதால் ஜஸ்வர்ய வீரபத்திரர் என்றும் பெயர் உள்ளது.
அகஸ்தீஸ்வரர் கோயிலின் தென்வாசல் எதிரே வீரபத்திரர் உள்ளார்.
கோரைப் பல்லுடன் இடது கையில் தண்டம் ஏந்திய இவர் அருகே வணங்கிய கோலத்தில் தட்சன் உள்ளார்.
முன் மண்டபத்தில் பத்திரகாளி சன்னதி உள்ளது.
இங்குள்ள விநாயகரிடம் செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடையுள்ளவர்கள், பயந்த சுபாவம் உள்ளவர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.
பஞ்சமாபாதகரும் இத்தலத்தை அடைந்தவுடன் தூய்மை அடைவார் என்று இதன் தலபுராணம் கூறுகிறது.
- வீரபத்திர பெருமானின் வழிபாடு பாரதம் எங்கும் அதற்கு அப்பாலும் பரவியிருக்கிறது.
- எல்லா கோவில்களிலும் வீரபத்திரருக்கு தனி சந்நதி உள்ளது.
தென்காசி கோவில் வீரபத்திரர்
வீரம் என்பதற்கு அழகு என்றும் பத்திரம் என்பதற்கு காப்பவன் என்றும் பொருள் கொண்டு வீரபத்திரர் அழைக்கப்படுகிறார்.
வீரபத்திர பெருமானின் வழிபாடு பாரதம் எங்கும் அதற்கு அப்பாலும் பரவியிருக்கிறது.
சிவபெருமான் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம் என்கிற ஐந்து திருமுகங்களைக் கொண்டு ஐந்தொழிலாற்றுகிறான்.
இம்முகங்களில் அகோராம்சமாக ஆணவாதிகளை அழிப்பதற்காக வீரபத்திரரை படைத்தான் என்று குறிப்பிடுவர்.
வீரபத்திரரை திருஞானசம் பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரும் மாணிக்கவாசகரும் பலவாறாக, தேவாரங்களில் பெயர் சூட்டாமல் போற்றிப் பாடியிருக்கிறார்கள்.
சைவப்பெருமக்கள் வீரபத்திரரை சிவகுமாரராகவும், சிவாம்சமாகவும், சிவ வடிவ மாகவும் கண்டு வழிபட்டு வருகிறார்கள்.
வீரபத்திரரை வீரசைவர்கள் தங்கள் பிரதான குருவாக கொண்டு போற்றி வழிபடுகிறார்கள்.
தமிழகத்தில் சென்னை, கும்பகோணம், திருவானைக்காவு என பல்வேறு இடங்களில் வீரபத்திரருக்கு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன.
அவற்றில் மிகவும் கலைநயமிக்க வகையில் தென்காசி காசிவிசுவநாதர் கோவிலில் வீரபத்திரர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
எல்லா கோவில்களிலும் வீரபத்திரருக்கு தனி சந்நதி உள்ளது.
ஆனால் தென்காசி கோவிலில் மட்டும் தனியாக 2 கல்தூணில் வீரபத்திரர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோவில்களிலேயே இங்குள்ள வீரபத்திரர் சிலைதான் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு வீரபத்திரருக்கு தனியாக எந்த வழிபாடும் நடத்தப்படுவதில்லை.
எப்போதும் நடைபெறுவது போல் பூஜைகள் மட்டும் நடத்தப்படுகிறது.
அனைத்து கோவில்களிலும் சப்தகன்னிகள் அருகே வீரபத்திரர் சந்நதி அமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் இங்கு மட்டும் தூணில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்த ஒன்றாக உள்ளது.
- பெண் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்வதில்லை.
- பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
ஆண்கள் மட்டுமே வழிபடும் கயத்தாறு வீரபத்திரர் கோவில்
நெல்லை மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு இலந்தை குளத்தில் அமைந்துள்ளது வீரபுத்திரசுவாமி கோவில்.
இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இக்கோவிலின் சிறப்பு என்னவென்றால் ஆண்கள் மட்டுமே வழிபட்டு வருவதுதான்.
மேலும் ஆண்கள் மட்டுமே சுவாமிக்கு பூஜைகள் உள்பட பல்வேறு பணிவிடைகளை செய்கின்றனர்.
பெண் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்வதில்லை.
- ஸ்ரீ வீரபத்திரருக்கு நெற்றி, மார்பு, பாதங்களில் சந்தனப் பொட்டு வைக்க வேண்டும்.
- ஸ்ரீ வீரபத்திரர் பரிவாரத் தெய்வமாக இருந்தால் கணுமரச் சந்தனக் குழம்பினால் பொட்டு வைக்க வேண்டும்.
வீரபத்திரருக்கு சந்தனப்பொட்டு
வீரபத்திரருக்குப் பெரும்பாலும் அனைத்துக் கோவில்களிலும் சந்தனத்தைக் குழைத்துப் பொட்டு வைப்பார்கள்.
அபிஷேகம் முடிந்தவுடன் மூச்சினை அடக்கி, சந்தனம் அரைத்து சுவாமியின் நெற்றியில் இடுதல் வேண்டும்.
ஸ்ரீ வீரபத்திரருக்கு நெற்றி, மார்பு, பாதங்களில் சந்தனப் பொட்டு வைக்க வேண்டும்.
ஸ்ரீ வீரபத்ர மாகாளிக்கு மார்பு, நெற்றி, கன்னம், தோள், நாடி, உச்சி, கை, பாதங்களில் சந்தனப் பொட்டிடலாம்.
ஸ்ரீ வீரபத்திரர் பரிவாரத் தெய்வமாக இருந்தால் கணுமரச் சந்தனக் குழம்பினால் பொட்டு வைக்க வேண்டும்.
கணு மரம் என்பது 40&50 வருடங்களுக்குட்பட்ட சந்தன மரமாகும்.
ஸ்ரீவீரபத்திரர் பிரதான மூர்த்தியாகவோ உற்சவ மூர்த்தியாகவோ இருந்தால், "கனகப்பட்டை" எனப்படும் 70&80 வருடங்களுக்குட்பட்ட சந்தன மரக் கட்டைகளிலிருந்து அரைக்கப்படும் சந்தனத்தைப் பயன்படுத்த வேண்டும்.
சந்தனம் அரைக்கும் போதோ சுவாமிக்குப் பொட்டிடும் போதோ சந்தனத்தின் மீதும் சுவாமியின் மீதும் மூச்சுக்காற்று படுதல் கூடாது.
அதே போன்று ஸ்ரீவீரபத்திரரின் மார்பில் வைத்த சந்தனப் பொட்டு மீது எந்த காரணம் கொண்டும் குங்குமம் வைக்கக்கூடாது.
- இதையொட்டி அவருக்குக் கரையில்லாத வெள்ளாடைகள் அணிவிக்கின்றனர்.
- செந்நிற உடையும் மாறி, மாறி அணிவிக்கின்றனர்.
வீரபத்திரருக்கான உடைகள்-கம்பளி ஆடை
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் உள்ள விரபத்திரருக்கு கம்பளி ஆடை அணிவித்தால் வேண்டுதல்கள் விரைவில் ஈடேறும்.
வெள்ளை நிற உடை
சிவ பெருமானின் பொருட்டு தக்கயாகத்தை அழிக்கச் சென்ற வீரபத்திரர் வெள்ளை ஆடைகளை அணிந்து சென்றார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையொட்டி அவருக்குக் கரையில்லாத வெள்ளாடைகள் அணிவிக்கின்றனர்.
சிவகங்கை கீழாயூர் ஸ்ரீ வீரபத்திரசுவாமி கோவில், வீரவநல்லூர் அங்காள பரமேசுவரி கோவில், கிளாக்குளம் அங்காள பரமேசுவரி கோவில்,
கும்பகோணம் வீரசைவ மடம் வீரபத்திரசுவாமி கோவில், திருநாகேசுவரம் கீழவடம் போகித் தெரு வீரபத்திர சுவாமி கோவில், கங்கை கொண்ட சோழபுரம் வீரபத்திரசுவாமி கோவில்,
பகத்தூர் வீரபத்திரசுவாமி கோவில், திருக்கழுக்குன்றம் வேதபுரிசுவரர் கோவில், காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெரு வீரபத்திரசுவாமி கோவில்,
சென்னை கொத்தவால்சாவடி வீரபத்திரசுவாமி கோவில் போன்ற பல கோவில்களில் வீரபத்திரருக்கு வெள்ளை நிற உடையை அணிவிக்கின்றனர்.
தனநாயக்கன் கோட்டை வீரபத்திரசுவாமி கோவில், அம்மாப்பேட்டை வீரபத்திரசுவாமி கோவில் திருவொற்றியூர் அகத்தீசுவரர் கோவில் ஆகியவற்றில் வெள்ளை உடையையும், செந்நிற உடையும் மாறி, மாறி அணிவிக்கின்றனர்.
திருவேங்கடம் சடை வீரபத்திரசுவாமி கோவிலில், குல தெய்வ வழிபாட்டின் போதும், நேர்த்திக்கடன் வழிபாட்டின் போதும்,
வீரபத்திரருக்கு 10க்கு 6 என்ற அளவுடைய முழு வெள்ளை நிற வேட்டியையே அணிவிக்கின்றனர்.
அதனால் மனக்குழப்பங்களும், போராட்டங்களும் ஏற்படும் என்பதால் மார்பில் குங்குமம் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- ஸ்ரீ வீரபத்திரர் பெரிதும் விரும்பும் நிறம் பொன் மஞ்சளும், சிகப்பும் கலந்த நிறமாகும்.
- வீர பத்திரருக்கு வேட்டி, தலைப்பாகை அணிவிப்பதை பழக்கத்தில் வைத்துள்ளனர்.
வீரபத்திரருக்கான உடைகள்
வீரபத்திரருக்கு ஆடை அணிவித்தல், பொட்டு வைத்தல், மலர்களை சூட்டி மகிழ்தல், தூபமிட்டுப் போற்றுதல் என்று பல்வேறு வகைகளில் அலங்காரம் செய்து வழிபாடு செய்வது எல்லா கோவில்களிலும் வழக்கத்தில் உள்ளது.
பொன் மஞ்சள்/ செந்நிற ஆடை
ஸ்ரீ வீரபத்திரர் பெரிதும் விரும்பும் நிறம் பொன் மஞ்சளும், சிகப்பும் கலந்த நிறமாகும்.
கண்ணைப் பறிக்கும் பளபளப்பு நிறைந்த பொன் மஞ்சள் நிறத்தில் சிகப்பு நிறச் சாயல் கலந்த நிறத்தில் உள்ள ஆடை இவருக்கு உரியதாகும்.
வேறு நிறங்களை இவர் விரும்புவதில்லை.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் வீரபத்திரருக்கு, நேர்த்திக் கடன் வழிபாட்டின் போது செந்நிற ஆடை அணிவிக்கின்றனர்.
மம்சாவரம் ஆகாச கருப்பண்ணசுவாமி கோவிலில் மகா சிவராத்திரித் திருவிழாவின் போது, வீர பத்திரருக்கு வேட்டி, தலைப்பாகை அணிவிப்பதை பழக்கத்தில் வைத்துள்ளனர்.
- நீர் நற்பேறுகளைக் கொடுக்கும்.
- பால் ஆயுளை வளர்க்கும்.
வீரபத்திரர்-அபிஷேக பலன்கள்
நீர் & நற்பேறுகளைக் கொடுக்கும்.
பால் & ஆயுளை வளர்க்கும்.
தேன் & இன்பம் அளிக்கும்.
பழங்காநத்தம் கணேச அக்னி வீரபத்திரசாமி கோவிலில் நீர், பால், தயிர் கொண்டு திருமஞ்சனம் செய்கின்றனர்.
மதுரை நாடார் தேசாரி சந்து அங்காள பரமேசுவரி ஆலயத்தில் உள்ள ஸ்ரீ வீரபத்திரருக்கு தினமும் நீர், பால், பஞ்சாமிர்தம், சந்தனம், இளநீர், நெய், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், நறுமணப்பொடி ஆகியவற்றால் திருமஞ்சனம் செய்கின்றனர்.
இவர் பேராற்றல் படைத்தவர் என்பதால் குங்குமப்பூ கலந்த தண்ணீரால் திருமஞ்சனம் செய்கின்றனர்.
திருமஞ்சனம் செய்தவுடன் மிக மிக தூய்மையாக வேண்டும் என்பதற்காகப் பச்சைக் கற்பூரம் சார்த்துகின்றனர்.
மதுரை ஸ்ரீ வீரபத்திரசுவாமி கோவிலில் உள்ள ஸ்ரீ வீரபத்திரருக்கு வெள்ளிக் கிழமைகளிலும், கார்திகைப் பவுர்ணமியன்றும் அனைத்து வகையான திருமஞ்சனப் பொருட்களாலும் திருமஞ்சனம் செய்கின்றனர்.
திண்டுக்கல் கத்தரிக்காய் சித்தர் கோவிலில் உள்ள ஸ்ரீ வீரபத்திரருக்கு, நீர், பால், திருநீறு, பஞ்சாமிர்தம் கொண்டு திருமஞ்சனம் செய்கின்றனர்.
திருக்குளம்பூர் கருப்பண்ணசுவாமி கோவிலில் உள்ள வீரபத்திரருக்கு சிறப்பு நாட்களில் திருமஞ்சனத்திற்குரிய அனைத்து வகையானப் பொருட்களாலும் திருமஞ்சனம் செய்கின்றனர்.
மேலமரத்தோணி வீரபத்திரர் கோவிலில் எளிதாக கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் கொண்டு திருமஞ்சனம் செய்கின்றனர்.
பழனி காந்திரோடு வீரபத்திரர் கோவிலில் வாரம் ஒரு முறை சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
- நீர், பால், தேன் என்ற மூன்று மட்டுமே இவருக்குரிய அபிஷேகப் பொருள்களாகும்.
- ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பூஜை செய்தல் வேண்டும்.
வீரபத்திரர்-தேன் அபிஷேகம்
மிகச் சுத்தமான உயர்ந்த ரக மலைத் தேனினை ஒரு வெள்ளிக்குடத்தில் நிரப்பி வலது தோளில் சுமந்து எடுத்து வந்து அபிஷேகம் செய்தல் வேண்டும்.
பிறவற்றை இவர் ஏற்பதில்லை.
இம் மூன்று பொருட்களையும் கொண்டு ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பூஜை செய்தல் வேண்டும்.
ஸ்ரீ வீரபத்திர உபாசகர் நீர், பால், தேன், எதுவாயினும் தாமே தன் கைகளால் மட்டுமே கொண்டு வர வேண்டும்.
- பசுவின் பாலினையும் வெள்ளிக்குடத்திலே கறந்தெடுக்க வேண்டும்.
- பால் கறக்கும் போதோ அபிஷேகம் செய்யும் போதோ அதில் மூச்சுக்காற்று படுதல் கூடாது.
வீரபத்திரர்-பால் அபிஷேகம்
இறைவன் கொடுத்த பொருட்களை, முதலில் இறைவனுக்குப் படைப்பது நமது வழக்கமாகும்.
எனவே தான் தூய்மையை விரும்பும் ஸ்ரீவீருபத்திரருக்குத் தூய்மையான பொருளாகிய பாலைக் கொண்டு, திருமஞ்சனம் செய்கின்றனர்.
தீர்த்தம் கொண்டு அபிஷேகம் முடித்தவுடன் கறந்த பசுவின் பால் கொண்டு அபிஷேகம் செய்தல் வேண்டும்.
பாக்கெட் பால், பவுடர் பால், எருதின் பால் போன்றவற்றை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த கூடாது.
பசுவின் பால் மட்டுமே பூஜைக்கு உகந்தது.
பசுவின் பாலினையும் வெள்ளிக்குடத்திலே கறந்தெடுக்க வேண்டும்.
கறக்கும் போதோ கறந்த பிறகோ வெள்ளிக்குடத்தினைக் கீழே வைத்தல் கூடாது.
ஸ்ரீ வீரபத்திர உபாசகர் தாமே தம் கைகளாலேயே வெள்ளிக்குடத்தைப் பிடித்துக் கொண்டு பால் கறக்க வேண்டும்,
கறந்த பாலின் சூடு ஆறுவதற்கு முன்பாகத் தன் வலது தோளில் பாற்குடத்தைச் சுமந்து சென்று ஸ்ரீ வீரபத்திருக்கு அபிஷேகம் செய்தல் வேண்டும்.
பால் கறக்கும் போதோ சுமக்கும் போதோ அபிஷேகம் செய்யும்போதோ அதில் மூச்சுக்காற்று படுதல் கூடாது.
பூவந்திக் கிராமம், அய்யாக்கன்மாய் வீரபத்திரருக்கு நீர், பால் மட்டுமே கொண்டு திருமஞ்சனம் செய்வார்கள்.
- தண்ணீர் குடத்தை கீழே வைக்கக் கூடாது.
- நீர் இறைக்க எவர் உதவியையும் நாடுதல் கூடாது.
வீரபத்திரருக்கான அபிஷேகங்கள்
நீர் அபிஷேகம்
ஸ்ரீ வீரபத்திரருக்கு எல்லா ஆலயங்களிலும் தினமும் காலை நீர் அபிஷேகம் செய்கின்றனர்.
இந்த நீர் அபிஷேகத்தை செய்வது எப்படி தெரியுமா?
வலது கை மணிக்கட்டில் கறுப்புக் கயிறு கட்டி ஸ்ரீ வீரபத்திரரை உபாசிக்கும் தகுதி படைத்த உபாசகர் தம் கைகளாலேயே ஸ்ரீ வீரபத்திரருக்குரிய திருமஞ்சன நீரைக் கோவில் கிணற்றில் இருந்தோ, நதிகளில் இருந்தோ எடுத்து வர வேண்டும்.
அவ்வாறு எடுக்கும் நீரை வெள்ளிக் குடத்தில் நிரப்பிக் கொண்டு வர வேண்டும்.
நதியில் எடுக்கும் நீராக இருந்தாலும் சரி, கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட நீரானாலும் சரி, ஸ்ரீ வீரபத்திரர் வழிபாட்டிற்கு என்றே வைத்திருக்கும் தனிப்பட்ட வெள்ளிக் குடத்தில் மட்டுமே எடுக்க வேண்டும்.
அவ்வாறு எடுத்த நீரை பூசாரி தன் வலது தோளில் சுமந்து, எடுத்து வந்து அபிஷேகம் செய்ய வேண்டும்.
எடுத்து வரும் நீரை எக்காரணம் கொண்டும் எங்கும் கீழே வைக்காமல் உடனேயே வலது தோளில் வைத்து எடுத்து வர வேண்டும்.
கரம் மாற்றுதலோ இடம் மாற்றுதலோ கூடாது.
தண்ணீர் குடத்தை கீழே வைக்கக் கூடாது.
பிறர் கைபடுதலோ கூடாது.
நீர் இறைக்க எவர் உதவியையும் நாடுதல் கூடாது.
- இந்நாளில் இரவு 12 மணிக்குத்தான் அகோர வீரபத்திரர் தோன்றினார் என்பர்.
- ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் இரவில் அகோர பூஜை செய்யப்படுகிறது.
அகோர வீரபத்திரர் விரதம்
அகோர வீரபத்திரருக்கு விரதமிருக்க விரும்புவோர் மாசிமாதம் கிருஷ்ணபட்சம், பிரதமைதிதி, பூரம் நட்சத்திரம், ஞாயிற்றுக் கிழமையன்று விரதம் தொடங்க வேண்டும்.
ஏனெனில் இந்நாளில் இரவு 12 மணிக்குத்தான் அகோர வீரபத்திரர் தோன்றினார் என்பர்.
திருவெண்காட்டில் அகோர வீரபத்திரருக்கு ஒவ்வொரு ஆண்டும் அவர் தோன்றிய நாளில், நேரத்தில் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.
மேலும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் இரவில் அகோர பூஜை செய்யப்படுகிறது.
கார்த்திகை மாதம் ஈசனுக்கு உகந்தது என்பதால் கார்த்திகை ஞாயிறு வழிபாடு சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
இவ்வழிபாட்டில் பசுவின்பால், பால்சாதம், எலுமிச்சை சாதம், மஞ்சள் நிற இனிப்பு வகைகள் போன்றவற்றை நைவேத்தியமாகப் படைப்பது சிறப்பாகும்.
அகோர வீரபத்திரரை ஈசனுக்குரிய திங்கட்கிழமையன்றும் பிரதோஷ நாளன்றும் நித்திய பிரதோஷ நேரத்திலும் சிவராத்திரி தினத்தன்றும் வழிபடுவது மிகமிக நன்று.
இத்தகு வழிபாடுகள் வாழ்வியல் சிக்கல்களை நீக்கிடவும் எடுத்த செயல்களில் வென்றிடவும் உதவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்