search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெற்றிலை"

    • ராட்சத பலூன்கள், உறுதிமொழி, மாரத்தான் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
    • தேர்தல் திருவிழா அழைப்பிதழை வழங்கி வாக்காளர்களை வாக்களிப்பதற்கு அழைத்தனர்.

    பொள்ளாச்சி:

    தமிழகத்தில் ஏப்ரல் 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது.

    இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வா கம், தேர்தல் பிரிவினர் சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்ப ட்டு வருகிறது.

    பஸ் நிலையங்கள், மக்கள் அதிகமாக கூடக் கூடிய இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு செல்பி ஸ்பாட் வைத்து விழிப்புணர்வு, வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வீடியோவும் ஒளிபரப்பப்படுகிறது.

    மேலும் ராட்சத பலூன்கள், உறுதிமொழி, மாரத்தான் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பகுதியில் திருமணத்திற்கு வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து அழைப்பது போன்று தேர்தல் தினத்தன்று வாக்களிக்க வருமாறு, அதிகாரிகள் அழைத்து வருகின்றனர்.

    பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தல்களில் சில இடங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்குப்பதிவு இருந்துள்ளது.

    அந்த இடங்களை கண்டறிந்து, அங்கு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, தேர்தல் அதிகாரிகள், ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை வைத்து, தேர்தல் திருவிழா அழைப்பிதழை வழங்கி வாக்காளர்களை வாக்களிப்பதற்கு அழைத்தனர்.

    பொள்ளாச்சி சப்-கலெக்டரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கேத்ரின் சரண்யா தலைமையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளோடு வீடு, வீடாக சென்று அழைப்பிதழ் வழங்கி தேர்தலில் வாக்களிக்க அழைத்தனர். மேலும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எரிவாயு சிலிண்டர், பஸ் நிலையம், ரெயில் நிலையம், உணவு விடுதி ஆகியவற்றில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஓட்டி வருவதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வெற்றியைக் காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் இதற்கு ‘வெற்றிலை’ என்று பெயர் வந்தது.
    • திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதால்தான்.

    ராமதூதன் அனுமானுக்கு துளசி மாலை சார்த்துவதால் ஸ்ரீராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் ஆகியவை பெறலாம்.

    அசோக வனத்தில் சீதையைக் கண்டு ராமபிரானின் நிலையை விளக்கமாக எடுத்துரைத்ததைப் பார்த்த சீதா சந்தோஷமடைந்து அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில் வளர்ந்திருந்த கொடிகளின் இலைகளைக் கிள்ளி தலையில் தூவி ஆசீர்வதித்தாள்.

    'இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும்' என்றாளாம்.

    வெற்றியைக் காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் இதற்கு 'வெற்றிலை' என்று பெயர் வந்தது.

    ஆகையால், பக்தர்கள் தன் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அது வெற்றியடைய வேண்டும் என்ற காரணத்தினால் வெற்றிலை மாலையை சார்த்தி தன் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

    திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதால்தான்.

    எலுமிச்சம் பழம் ராஜாக்களுக்கு கொடுக்கக்கூடிய மரியாதை நிமித்த மான பழம். மற்றொன்று சம்ஹார தொழில் செய்யும் கடவுள்களுக்கு மிகவும் பிடித்தமான பழம்.

    நரசிம்மன், வராகம், கருடன் ஆகிய சக்திகள் அனுமானிடத்தில் ஒருங்கே அமைந்துள்ளதாலும், ஈஸ்வரனின் அம்சம் ஆனதாலும் இவருக்கு எலுமிச்சம் பழ மாலை சார்த்தி வழிபடுவோர் வாழ்வில் எதிரிகளின் தொல்லை நீங்கப் பெறுவர்.

    • வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து வெற்றிலை சுமைகளை வாங்கி செல்கின்றனர்.
    • கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்து 500-க்கும், முதியம் பயிர் ரூ.2 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக் கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி, கற்பூரி போன்ற வெற்றிலை வகைகளை பயிர் செய்துள்ளனர்.

    வெற்றிலை பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் வெற்றி லைகளை பறித்து 100 வெற்றி லைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், 104 கவுளிகள் கொண்ட ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர். பின்னர் இதனை பரமத்திவேலூர் - கரூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் செயல் பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

    வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து வெற்றிலை சுமைகளை வாங்கி செல்கின்றனர். கடந்த வாரம் வெள்ளைக் கொடி வெற்றிலை இளம் பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.7 ஆயிரத்துக்கும், முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.3500-க்கும் விற்பனை யானது. கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்து 500-க்கும், முதியம் பயிர் ரூ.2 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

    நேற்று வெள்ளைக் கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்துக்கும், முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.ஆயிரத்து 500-க்கும் வாங்கிச் சென்றனர். வெற்றிலை வரத்து அதிக ரிப்பாலும், முக்கிய நிகழ்ச்சிகள் இல்லாததாலும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    • வெற்றிலை ஏல சந்தைக்கு வரத்து அதிகரித்ததால் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளது.
    • இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.7 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்து 500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் வெற்றிலை ஏல சந்தைக்கு வரத்து அதிகரித்ததால் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளது. பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வெற்றிலைகள் கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.7 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்து 500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.ஆயிரத்து 200- க்கும் ஏலம் போனது. வெற்றிலை வரத்து அதிகரித்ததால் வெற்றிலை விலை விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர்.
    • பரமத்தி வேலூரில் கரூர் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர். இந்த வெற்றிலைகளை பறித்து உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும் , பாண்டமங்கலம் ெபாத்தனூர், பரமத்திவேலூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், பரமத்தி வேலூரில் கரூர் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.9 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.5000-க்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம் சுமை ஒன்று ரூ.5000-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.3,500-க்கும் ஏலத்தில் எடுத்து சென்றனர்.

    நேற்று முன்தினம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.3ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.3ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.1,500-க்கும் ஏலம் போனது. நடப்பு மாதத்தில் அதிக அளவில் கோவில் திருவிழா மற்றும் திருமண விசேஷங்கள் நடைபெறாததால் வெற்றிலை தேவை குறைந்து வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • வெள்ளக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலையை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
    • இப்பகுதியில் குளிர்பதன கிடங்கு எதுவும் இல்லை

     வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகளான, நொய்யல், மரவாபாளையம், புங்கோடை ,சேமங்கி, கோம்புப்பாளையம், நத்தமேட்டுப் பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், பாலத்துறை, நன்செய் புகளூர், கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலையை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

    தற்போது புகளூர் பகுதியில் ஆள் பற்றாக்குறை, வெற்றிலையில் நோய் தாக்குதல், போதிய தண்ணீர் இன்மை என்ற பல்தொவேறு காரணங்களால் வெற்றிலை விவசாயிகள் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதனால் அப்பகுதியில் வெற்றிலை விவசாயம் குறைந்து வருகிறது.

    இந்நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் வெற்றிலையின் விலை சரிவைச் சந்தித்துள்ளது.வெள்ளக்கொடி வெற்றிலை 104 கவுளிகள் கொண்ட ஒரு கட்டு வெற்றிலை ரூ. 7,000-க்கு விற்பனையானது. அதேபோல் கற்பூரி வெற்றிலை 104 கவுளி கொண்ட ஒரு கட்டு ரூ.3000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

    வெற்றிலை விவசாயத்தில் ஈரப் புள்ளி என்கின்ற நோய் தாக்கல் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. பத்து நாளுக்கு ஒரு முறை ஏக்கர் ஒன்றுக்கு ஐயாயிரம் ரூபாய் செலவு செய்து மருந்து அடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    விற்பனை குறைந்துள்ளதால் சில இடங்களில் வெற்றிலை கொடிக்காலிலேயே அறுவடை செய்யாமல் விடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அறுவடை செய்யப்பட்ட வெற்றிலையை பாதுகாக்க இப்பகுதியில் குளிர்பதன கிடங்கு எதுவும் இல்லை. பலமுறை வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை வைத்தும் இதுவரை குளிர்பதன கிடங்கு கட்டுவதற்கான நடவடிக்கை இல்லை என்று இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிப்பதோடு, கிடங்கு கட்டித்தர அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

    • வாழை இலை போட்டு சாப்பாடு போடும் பழக்கம் பல இடங்களில் மாறிப் போய்விட்டது.
    • இன்றைய இளம் தலைமுறை வெற்றிலை போடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    வெற்றிலை போடும் பழக்கத்தை பாட்டி காலத்து பழக்கம் என்று இன்றைய இளம் தலைமுறை ஒதுக்கி தள்ளிவிட்டது. ஒரு காலத்தில் சாப்பிட்டவுடன் வெற்றிலை போடும் பழக்கம் என்பது நமது தாத்தா, பாட்டிகள் மத்தியில் தவிர்க்க முடியாததாகவே இருந்து வந்தது. வெற்றிலையுடன் சுண்ணாம்பு, பாக்கு சேர்த்து போடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். என்ன சாப்பிட்டாலும் செரிமானமாக்கி விடும் என்பதை அறியாமல் அடுத்த தலைமுறை அதனை முற்றிலுமாக கைவிட்டு விட்டது என்றே கூற வேண்டும். அந்த அளவுக்கு வெற்றிலை போடும் பழக்கத்தை நாகரீக போர்வைக்குள் இன்றைய இளம் தலைமுறை மறைத்துக்கொண்டு உள்ளது.

    சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்போது தாம்பூலம் வைக்கும் பழக்கம் தற்போதும் நடைமுறையில் உள்ளது. இந்த தாம்பூல பாத்திரத்தில் வெற்றிலை, பாக்கு இருந்தால் மட்டுமே அது முழுமை அடையும். தாம்பூலமாக அமையும். இதனால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கட்டுக்கட்டாக வெற்றிலைகளை வாங்கி அதனை தாம்பூல பைகளில் போட்டு விழாவுக்கு வந்தவர்களுக்கு கொடுப்பது வழக்கம்.

    வெற்றிலை போடும் பழக்கம் எப்படி மறைந்து போனதோ அதே போன்று தாம்பூலப் பைகளில் வெற்றிலை போட்டுக்கொடுக்கும் பழக்கமும் மாறத் தொடங்கி இருக்கிறது. நாகரீகம் என்ற பெயரில் பெருகி வரும் கலாச்சார மோகத்தால் வாய் மணக்கும் பயிரான வெற்றிலையை கொஞ்சம் கொஞ்சமாக நாம் மறந்து வருகிறோம் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் தற்போது தாம்பூல பைகளில் மணக்கும் வெற்றிலைக்கு பதில் பிளாஸ்டிக் வெற்றிலைகள் போடும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

    வாழை இலை போட்டு சாப்பாடு போடும் பழக்கம் பல இடங்களில் மாறிப் போய்விட்டது. இதன் காரணமாக வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளில் வாழை இலைக்கு பதில் பேப்பர் இலைகளை பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் வரும் காலத்தில் வாய் மணக்கும் வெற்றிலைக்கு பதில் பிளாஸ்டிக் வெற்றிலைகள் சுப நிகழ்ச்சிகளை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்கிறார்கள் வெற்றிலை வியாபாரிகள்.

    இதற்கு முடிவு கட்டும் வகையில் பிளாஸ்டிக் வெற்றிலைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். இன்றைய இளம் தலைமுறை வெற்றிலையை மறந்து வரும் நிலையில் எத்தனை புது மாப்பிள்ளைகளுக்கு தெரியும் அந்த வெற்றிலையின் ரகசியம் என்பதும் மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. மாறிவரும் உணவு பழக்க வழக்கங்களால் இன்றைய இளம் தலைமுறை வாலிபர்கள் திருமணத்துக்கு பிறகு இல்லற வாழ்வில் சறுக்கி வருகிறார்கள்.

    இளம் வயதிலேயே ஏற்படும் தவறான பழக்க வழக்கங்கள் மற்றும் சவர்மா உள்ளிட்ட சிக்கன் உணவு வகைகள் போன்றவற்றால் ஆண்மை குறைவு ஏற்படுவதாக டாக்டர்களும் எச்சரித்து வருகிறார்கள். ஆனால் இந்த ஆண்மை குறைவுக்கு வெற்றிலை அருமருந்து என்பது இன்றைய இளம் தலைமுறைக்கு தெரியாத ஒரு உண்மையாகும். வெற்றிலையை அடிக்கடி மென்று சாப்பிட்டு வருவதன் மூலம் வயாகராவுக்கு இணையான சக்தியை பெற முடியும் என்று முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள்.

    எனவே இன்றைய இளம் தலைமுறை வெற்றிலை போடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது எதை சாப்பிட்டாலும் செரிக்கும் தன்மையை வளர்க்க உதவும். அதே நேரத்தில் சுப நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் வெற்றிலைக்கு விடை கொடுத்து மணக்கும் வெற்றிகளை பயன்படுத்த வேண்டும் என்பதே வெற்றிலை விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இப்படி இல்லற இன்பத்துக்கு வழி வகுக்கும் வெற்றிலையின் வேறு மகத்துவங்கள் என்ன என்பதையும் பார்க்கலாம்.

    வெற்றிலை போட்டால் வாய் மணக்கும். நல்ல மதிய உணவு விருந்துக்குப் பின் வெற்றிலை பரிமாறுவதைப் பாரம்பரியமாகக் கொண்டுள்ளோம். வெற்றிலையில் பல நம்ப முடியாத நல்ல விஷயங்கள் உள்ளது. முன்பெல்லாம் கோவில் பூஜைகள் முதல் மருந்துகள் வரை வெற்றிலையை பல விதமாக உபயோகித்து வந்துள்ளோம். இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை என்பர்.

    இதில் குறைந்த கொழுப்பு மற்றும் மிதமான புரத உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. இது அயோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நிகோடினிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன.

    வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசி எடுக்காதவர்களுக்கு பசி எடுக்கும்.

    வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்வாடை பிரச்சினை உள்ளவர்கள், மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் இந்த பிரச்சினைகள் குணமாகி வரும். ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கசக்கிப் பிழிய வருகின்ற சாற்றினை குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குணமாகும்.

    கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சாப்பிடுவதால், இரைப்பை குடல் வலி, அசிடிட்டி, செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் குணமாகுவதோடு, மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடல் முழுவதையும் சுத்தமாக்க உதவுகிறது. நமது உடலில் சுரக்கும் 24 விதமான "அமினோ அமிலங்கள்" வெற்றிலையில் உள்ளன. இந்த "அமினோ அமிலங்களை" வெற்றிலை மூலம் நாம் அடையும்போது ஜீரணம் எளிதாகின்றது. அதனால்தான் நம்முன்னோர்கள் உணவுக்குப் பின் "தாம்பூலம்" தரிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

    காலையில் வெற்றிலை, பாக்கு போடும்போது பாக்கின் அளவை சற்று அதிகரித்துக் கொள்ளலாம். துவர்ப்புச் சுவை கொண்ட பாக்கு, மலமிளக்கியாகச் செயல்படும். வயிற்றைச் சுத்தப்படுத்தக் கூடியது. மதியம் வெற்றிலை, பாக்கு போடும்போது சுண்ணாம்பின் அளவை சற்று அதிகரித்து எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் செரிமான சக்தி சீராவதுடன், உடலுக்குத் தேவையான இயற்கையான கால்சியம் சத்தும் சேர உதவும்.

    இரவில் வெற்றிலை கூடுதலாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். வெற்றிலை என்பது மவுத்வாஷ் போன்றும் செயல்படும். வாய் துர்நாற்றம் நீங்கவும், பற்களில் கிருமிகள் சேராமல் காக்கவும் இது உதவும். கபம் சேர்வதைத் தடுக்கும்.

    வெற்றிலைக்கு அரச இலை, மாவிலை போன்று தெய்வீக சக்தி உண்டு. கண்களுக்கு தெரியாத பொருளை மைபோட்டு பார்ப்பது, வசியம் செய்வது போன்றவற்றிற்கும் வெற்றிலையை அதிகம் பயன்படுத்துவார்கள்.

    வெற்றிலைக்கு செல்வத்தின் தலைமகளாக உள்ள மகாலட்சுமியை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. மேலும் தீய கர்ம வினைகளையும் இந்த வெற்றிலை அழிக்கும். செல்வமின்மையும் நமது மோசமான கர்மா தான் இவை எல்லாவற்றையும் நிவர்த்தி செய்ய வெற்றிலையை பயன்படுத்தலாம்.

    அந்தக் காலத்தில் மூன்று வேளைகளுமே வெற்றிலை, பாக்கு போடும் வழக்கம் இருந்தது. ஆனால் இன்று வெற்றிலை, பாக்கு போடுவதென்பது இமேஜை பாதிக்கிற விஷயமாக மாறிவிட்டது. படிக்காதவர்கள் செய்யும் செயல் போல பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள பகுதிகளில் அதிகமாக வெற்றிலை தோட்டம் உள்ளது. குறிப்பாக நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற பகுதிகளிலும் தேனி, சேலம் போன்ற பகுதிகளில் ஆங்காங்கு இப்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன.

    • இத்தலத்தில் பத்ரகாளிக்கு தனி சன்னதி உள்ளது.
    • வெற்றிலைமாலை சார்த்தி வழிபட்டால் 96 நாட்களில் நினைத்தது நிறைவேறுகிறது.

    96 நாளில் வேண்டுதல்கள் நிறைவேறும் அதிசயம்

    சென்னையில் பல பகுதிகளில் வீரபத்திரர் ஆலயங்கள் சிறப்பாக உள்ளன.

    அவற்றில் ராயபுரம் குமாரசாமி சந்தில் இருக்கும் "அருள்மிகு பத்ரகாளி அம்மன் வீரபத்திரர் ஆலயம்" தனிச்சிறப்புகள் கொண்டது.

    தற்போது இந்து அறநிலையத்துறை பராமரிப்பில் இருந்து வரும் இந்த ஆலயத்தில் கடந்த 1995 மற்றும் 2007ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    இத்தலத்தில் பத்ரகாளிக்கு தனி சன்னதி உள்ளது.

    வைஷ்ணவி, பிரம்மி, மகேஸ்வரி ஆகியோரது சிலைகளும் உள்ளன.

    தெட்சிணாமூர்த்தி, பைரவரும் இங்கு வழிபட படுகின்றனர்.

    இத்தலத்து வீரபத்திரர் சுமார் 9 அடி உயரத்துக்கு கம்பீரமாக உள்ளார்.

    இவர் இத்தலத்துக்குள் பூமிக்குள் இருந்து கிடைத்தவர் என்பது குறிப்பிடத்தக்து.

    இவருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிபாடு செய்தால் 96 நாட்களில் நினைத்தது நிறைவேறுகிறது.

    இதனால் ஏராளமான பக்தர்கள், வெகு தொலைவில் இருந்து கூட வந்து செல்கிறார்கள்.

    ராகுவுக்கு அதிபதி துர்க்கை.

    துர்க்கைக்கு அதிபதி காளி.

    இதனால் இத்தலம் சர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகவும் திகழ்கிறது.

    காளஹஸ்தி செல்ல இயலாதவர்கள் இங்கு அந்த பூஜைகளை செய்து பலன் பெறலாம்.

    சித்ரா பவுர்ணமி தினத்தன்று இத்தலத்தில் 10 நாள் விழா நடத்தப்படுகிறது.

    ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் மாலை 5 மணிக்கு வீரபத்திரருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

    • இது அகத்தியர் வழிபட்ட தலமாகும்.
    • தென்நாடு செல்லும் வழியில் பல அற்புதங்கள் புரிந்தார்.

    செல்வம் தரும் ஐஸ்வர்ய வீரபத்திரர்

    சென்னை வில்லிவாக்கத்தில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அகஸ்தீஸ்வரர் ஆலயம் உள்ளது.

    அகத்தியர் வழிபட்ட தலம் என்பதால் இங்குள்ள சிவபெருமான், அகஸ்தீஸ்வரர் பெயரில் மூலவராக இருக்கிறார்.

    பரமசிவனுக்கும் பார்வதிதேவிக்கும் மேருமலைச் சாரலில் திருமணம் நடைபெற்ற போது தேவர்களும், சித்தர்களும், ரிஷி களும், யோகிகளும் ஒரே இடத்தில் கூடியதால் தென்நாடு உயர்ந்து வடநாடு தாழ்ந்தது.

    இதனை சமப்படுத்த அகத்தியரை சிவபெருமான் தென்நாட்டுக்கு அனுப்பினார்.

    தென்நாடு செல்லும் வழியில் பல அற்புதங்கள் புரிந்தார்.

    வில்வலன், வாதாபி என்ற இரண்டு அசுர சகோதரர்களில் வாதாபியை அழித்து, வில்லவனுக்கு நல்வழி புகட்டி உண்மையான வாழ்க்கையின் பயனைக் காட்டினார்.

    இதனால் இத்தலம் வில்லிவாக்கம் என்று வழங்கப்படுகிறது.

    அகத்தியருக்கு சிவன், அம்பிகையுடன் காட்சி தந்தபோது அம்பாள் திருமண கோலத்தில் பொன் நகைகள் அணிந்திருந்தாள்.

    எனவே அவள் ஸ்வர்ணாம்பிகை எனப்படுகிறாள்.

    நவக்கிரகங்களில் அங்காரகன் [செவ்வாய்] தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்கத் தீர்த்தம் உண்டாக்கி சிவனை வழிபட்ட தலம் இது.

    அதனால் செவ்வாய் தோஷப் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.

    இங்கு தீர்த்தக்கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார்.

    ஆடி மாதம் ஐந்து வாரங்கள் தொடர்ந்து செவ்வாய்க்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் திருமணம் நடக்க வேண்டியும் குழந்தை பாக்கியம் வேண்டியும் இங்கே வந்து வேண்டிக்கொள்கின்றனர்.

    வீரபத்திரருக்கு இங்கு தனிக்கோவில் உள்ளது.

    குபேர திசை நோக்கி வீரபத்திரர் அமர்ந்துள்ளதால் ஜஸ்வர்ய வீரபத்திரர் என்றும் பெயர் உள்ளது.

    அகஸ்தீஸ்வரர் கோயிலின் தென்வாசல் எதிரே வீரபத்திரர் உள்ளார்.

    கோரைப் பல்லுடன் இடது கையில் தண்டம் ஏந்திய இவர் அருகே வணங்கிய கோலத்தில் தட்சன் உள்ளார்.

    முன் மண்டபத்தில் பத்திரகாளி சன்னதி உள்ளது.

    இங்குள்ள விநாயகரிடம் செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடையுள்ளவர்கள், பயந்த சுபாவம் உள்ளவர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.

    பஞ்சமாபாதகரும் இத்தலத்தை அடைந்தவுடன் தூய்மை அடைவார் என்று இதன் தலபுராணம் கூறுகிறது.

    • வீரபத்திர பெருமானின் வழிபாடு பாரதம் எங்கும் அதற்கு அப்பாலும் பரவியிருக்கிறது.
    • எல்லா கோவில்களிலும் வீரபத்திரருக்கு தனி சந்நதி உள்ளது.

    தென்காசி கோவில் வீரபத்திரர்

    வீரம் என்பதற்கு அழகு என்றும் பத்திரம் என்பதற்கு காப்பவன் என்றும் பொருள் கொண்டு வீரபத்திரர் அழைக்கப்படுகிறார்.

    வீரபத்திர பெருமானின் வழிபாடு பாரதம் எங்கும் அதற்கு அப்பாலும் பரவியிருக்கிறது.

    சிவபெருமான் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம் என்கிற ஐந்து திருமுகங்களைக் கொண்டு ஐந்தொழிலாற்றுகிறான்.

    இம்முகங்களில் அகோராம்சமாக ஆணவாதிகளை அழிப்பதற்காக வீரபத்திரரை படைத்தான் என்று குறிப்பிடுவர்.

    வீரபத்திரரை திருஞானசம் பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரும் மாணிக்கவாசகரும் பலவாறாக, தேவாரங்களில் பெயர் சூட்டாமல் போற்றிப் பாடியிருக்கிறார்கள்.

    சைவப்பெருமக்கள் வீரபத்திரரை சிவகுமாரராகவும், சிவாம்சமாகவும், சிவ வடிவ மாகவும் கண்டு வழிபட்டு வருகிறார்கள்.

    வீரபத்திரரை வீரசைவர்கள் தங்கள் பிரதான குருவாக கொண்டு போற்றி வழிபடுகிறார்கள்.

    தமிழகத்தில் சென்னை, கும்பகோணம், திருவானைக்காவு என பல்வேறு இடங்களில் வீரபத்திரருக்கு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன.

    அவற்றில் மிகவும் கலைநயமிக்க வகையில் தென்காசி காசிவிசுவநாதர் கோவிலில் வீரபத்திரர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    எல்லா கோவில்களிலும் வீரபத்திரருக்கு தனி சந்நதி உள்ளது.

    ஆனால் தென்காசி கோவிலில் மட்டும் தனியாக 2 கல்தூணில் வீரபத்திரர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள கோவில்களிலேயே இங்குள்ள வீரபத்திரர் சிலைதான் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு வீரபத்திரருக்கு தனியாக எந்த வழிபாடும் நடத்தப்படுவதில்லை.

    எப்போதும் நடைபெறுவது போல் பூஜைகள் மட்டும் நடத்தப்படுகிறது.

    அனைத்து கோவில்களிலும் சப்தகன்னிகள் அருகே வீரபத்திரர் சந்நதி அமைக்கப்பட்டிருக்கும்.

    ஆனால் இங்கு மட்டும் தூணில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்த ஒன்றாக உள்ளது.

    • பெண் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்வதில்லை.
    • பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

    ஆண்கள் மட்டுமே வழிபடும் கயத்தாறு வீரபத்திரர் கோவில்

    நெல்லை மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு இலந்தை குளத்தில் அமைந்துள்ளது வீரபுத்திரசுவாமி கோவில்.

    இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

    இக்கோவிலின் சிறப்பு என்னவென்றால் ஆண்கள் மட்டுமே வழிபட்டு வருவதுதான்.

    மேலும் ஆண்கள் மட்டுமே சுவாமிக்கு பூஜைகள் உள்பட பல்வேறு பணிவிடைகளை செய்கின்றனர்.

    பெண் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் செல்வதில்லை.

    • ஸ்ரீ வீரபத்திரருக்கு நெற்றி, மார்பு, பாதங்களில் சந்தனப் பொட்டு வைக்க வேண்டும்.
    • ஸ்ரீ வீரபத்திரர் பரிவாரத் தெய்வமாக இருந்தால் கணுமரச் சந்தனக் குழம்பினால் பொட்டு வைக்க வேண்டும்.

    வீரபத்திரருக்கு சந்தனப்பொட்டு

    வீரபத்திரருக்குப் பெரும்பாலும் அனைத்துக் கோவில்களிலும் சந்தனத்தைக் குழைத்துப் பொட்டு வைப்பார்கள்.

    அபிஷேகம் முடிந்தவுடன் மூச்சினை அடக்கி, சந்தனம் அரைத்து சுவாமியின் நெற்றியில் இடுதல் வேண்டும்.

    ஸ்ரீ வீரபத்திரருக்கு நெற்றி, மார்பு, பாதங்களில் சந்தனப் பொட்டு வைக்க வேண்டும்.

    ஸ்ரீ வீரபத்ர மாகாளிக்கு மார்பு, நெற்றி, கன்னம், தோள், நாடி, உச்சி, கை, பாதங்களில் சந்தனப் பொட்டிடலாம்.

    ஸ்ரீ வீரபத்திரர் பரிவாரத் தெய்வமாக இருந்தால் கணுமரச் சந்தனக் குழம்பினால் பொட்டு வைக்க வேண்டும்.

    கணு மரம் என்பது 40&50 வருடங்களுக்குட்பட்ட சந்தன மரமாகும்.

    ஸ்ரீவீரபத்திரர் பிரதான மூர்த்தியாகவோ உற்சவ மூர்த்தியாகவோ இருந்தால், "கனகப்பட்டை" எனப்படும் 70&80 வருடங்களுக்குட்பட்ட சந்தன மரக் கட்டைகளிலிருந்து அரைக்கப்படும் சந்தனத்தைப் பயன்படுத்த வேண்டும்.

    சந்தனம் அரைக்கும் போதோ சுவாமிக்குப் பொட்டிடும் போதோ சந்தனத்தின் மீதும் சுவாமியின் மீதும் மூச்சுக்காற்று படுதல் கூடாது.

    அதே போன்று ஸ்ரீவீரபத்திரரின் மார்பில் வைத்த சந்தனப் பொட்டு மீது எந்த காரணம் கொண்டும் குங்குமம் வைக்கக்கூடாது.

    ×