search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரதியார் புகழ்ந்து பாடிய மகத்துவம் நிறைந்த காவிரிக்கரை வெற்றிலை

    • பயிர்களில் பணப்பயிர் என்று அழைக்கப்ப டும் வெற்றிலை இன்று மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய பொருளாக இருந்து வருகிறது.
    • இறை வழி பாட்டிலும் சரி, சித்த மருத்துவத்திலும் சரி முக்கிய பொருளாக விளங்கி வருகிறது.

    கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம் காவிரி வெற்றி லைக்கு மாறு கொள்வோம் என்றார் பாரதியார். காவிரிக்கரையில் விளையும் வெற்றிலைக்கு என்றுமே மவுசு உண்டு.

    பயிர்களில் பணப்பயிர் என்று அழைக்கப்ப டும் வெற்றிலை இன்று மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய பொருளாக இருந்து வருகிறது. எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் அங்கு வெற்றிலை முதலிடம் பிடித்து வருகிறது. அதேபோல இறை வழி பாட்டிலும் சரி, சித்த மருத்துவத்திலும் சரி முக்கிய பொருளாக விளங்கி வருகிறது.

    வெற்றிலை என்பது மிளகு வகையை சேர்ந்தது, அது கொடி போல படர்வதால் வெற்றிலை கொடிக்கால் என்று சொல்வார்கள். வெற்றிலை என்ற பெயருக்கு முக்கிய காரணம் உள்ளது. வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது, உட்கொள்ளக் கூடிய வெறும் இலை மட்டும்தான் விடும்.

    இதனால் வெற்று இலை என்பது சுருங்கி வெற்றிலை ஆகிவிட்டது. இது வளர்வதற்கு தண்ணீர் அதிகம் தேவை, வெற்றிலையைப் பயிர் செய்ய விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டிப் பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள்.

    வெற்றிலையில் கரும்பச்சை நிறத்தில் இருப்பது ஆண் வெற்றிலை என்றும், இளம்பச்சை நிறத்திலிருப்பது பெண் வெற்றிலை என்றும் 2 வகையாகப் பிரிக்கிறார்கள். சிலர் அதில் பின்புறம் இருக்கும் நரம்புகளைப் பார்த்தும் ரகம் பிரிப்பதுண்டு. ஒரு வருடத்தில் நன்கு வளரும், பின்னர் 3 வருடங்களுக்கு வெற்றிலையை பறிக்கலாம்.

    வெற்றிலை கொடிக்கு பராமரிப்பு மிகவும் தேவை. அது கொடி போல வளர ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு கொடியையும் கட்டிக்கொண்டே வர வேண்டும். அது நன்கு வளர்ந்தவுடன் நீங்கள் வெற்றிலையை கிள்ள ஆரம்பிக்கலாம். சிலர் வெற்றிலையை ஒரு மரத்துடன் கட்டி வளர்த்து வருவார்கள்.

    இதனால் மரம் வளர வளர வெற்றிலைக்கு ஒரு ஊன்றுகோலாய் இருக்கும். ஒரு சிலர் வெற்றிலையை பாத்தி கட்டி வளர்ப்பார்கள், சிலர் திராட்சை கொடி போல படர விடுவார்கள். வெற்றிலை வளர்ப்பது என்பது எளிது, ஆனால் பறிப்பது என்பது மிகவும் கடினம். அது வளர ஆரம்பிக்கும்போது கீழே எளிதாக பறிக்கலாம்.

    ஆனால் மேலே செல்ல செல்ல பறிப்பது என்பது கடினமாக இருக்கும். இந்த வெற்றிலையில் இரண்டு வகை உண்டு. கறுப்பு நிறத்தில் அதிகக் காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை. கற்பூர வாசனையுடன் சிறிது காரமாக இருப்பது கற்பூர வெற்றிலை. மிகுந்த மணத்துடன் காரம் அவ்வளவாக இல்லாமல் ஓரளவு வெளிர் நிறத்தில் இருப்பது சாதாரண வெற்றிலை.

    வெற்றிலை சாகுபடிக்கு தண்ணீர் தேவை, காவிரி ஆற்றின் கரையிலே இருக்கும் ஊர்களில் எல்லாம் தண்ணீருக்கு பஞ்சம் இல்லை, இதனால் வெற்றிலை பாக்கு எல்லாம் அங்கு நிறைய விளைகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வெற்றிலைக்கு தனி மவுசு உண்டு. பரமத்திவேலூர், நன்செய் இடை யாறு, குப்புச்சிபாளையம், ஓலப்பாளை யம், பாலப்பட்டி, செங்கப்பள்ளி, மணப்பள்ளி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக் கான ஏக்கரில் வெள்ளைக்கொடி, கற்பூரி போன்ற வெற்றிலை ரகங்களை பயிர் செய்துள்ளனர். காவிரி ஆற்றின் நேரடி பாசனத்தால் வளர்வதால் ஒரு வாரம் ஆனாலும் வாடாமல் வதங்காமல் அப்படியே இருக்கும். இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த வெற்றிலைக்கு தனி சிறப்புகள் உண்டு.

    வெற்றிலை வேர் குச்சியை நட்டு வைத்தால் அது முளைத்து, அருகில் உள்ள மரம், சுவற்றில் பற்றி வளரும். மண் வளத்தைப் பொறுத்து ஒரு மாதம் முதல் 3 மாதங்களில் வெற்றிலையைப் பறிக்கலாம். வீட்டில் நடக்கும் விசே ஷங்கள், திருமணம், காது குத்து, சீமந்தம்என அனைத்து சுப நிகழ்ச்சி யானாலும் வெற்றிலை பாக்கு இல்லாமல் இருக்காது. வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகள், சுவாச பிரச்சனை, இருமல், சளி என பல வற்றிற்கும் வெற்றிலை ஒரு அருமருந்து. வெற்றிலை போட்டால் தொண்டை கரகரப்பு சரியாகி விடும். குரல் வளமும் பெருகுமாம். கணவன், மனைவி இருவரில் யார் வெற்றிலை போட்டு நாக்கு செக்கச் செவேல்னு சிவந்தால் அவர்கள் மற்றவர் மீது அதிக பாசம் வைத்திருக்கிறார்கள் என்று சொல்லும் வழக்கம் இன்றளவும் கிராமங்களில் உண்டு.

    வெறும் வாயில் வெற்றிலை மென்றால் போதும் வாய் துர்நாற்றம் நீங்கும். தொடர்ந்து தினமும் ஒரு வெற்றிலை சாப்பிட்டால் குடல் புண்வாய், புண்கள் ஆறிவிடும். தலையில் பொடுகு பிரச்சனை இருந்தால் வெற்றி லையை அரைத்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கிவிடும். முகத்தில் ஏற்படும் முகப்பருக்களுக்கு வெற்றி லையை வைத்து தேய்த்தால் போதும் முகப்பரு போய்விடும். உடலில் வியர்வை துர்நாற்றம் அதிகம் அடித்தால் தண்ணீரில் வெற்றிலையை போட்டு காயவைத்து சுடு தண்ணீராக குளித்து வந்தால் வியர்வை துர்நாற்றம் நீங்கிவிடும்.

    குழந்தை பெற்ற தாய்மார்கள் வெற்றிலை தின்றால் பால் அதிகமாக சுரக்கும். வெற்றிலையில் இவ்வளவு மருத்துவ குணம் அடங்கியுள்ளது. ஆயுர்வேத மருந்துகளில் வெற்றிலையே அதிகம் பயன்படுத்தப்படு கிறது. சங்க கால நூல்களான பத்துப்பாட்டு, மணிமேகலை, சீவக சிந்தாமணி, கம்பராமா யணம் உட்பட பல்வேறு நூல்களில் வெற்றி லையின் சிறப்புகள் பற்றி கூறப்பட்டுள்ளது. மருத்துவ குணங்கள் கொண்ட காவிரிக் கரை வெற்றிலை நம் வாழ்வின் அங்கமாக உள்ளது.

    வெற்றிலையில் உள்ள சத்துக்கள்

    நீர்ச்சத்து – 90 சதவீதம், புரதச்சத்து – சதவீதம், கொழுப்புச்சத்து – சதவீதம், தாது உப்பு – சதவீதம், நார்ச்சத்து – சதவீதம், பச்சையம் – 0.25சதவீதம், மாவுச்சத்து – 6.10 சதவீதம், நிகோடினிக் அமிலம் – 0.89 மி.கி, வைட்டமின் சி – 0.01, வைட்டமின் ஏ – 2.9 மி.கி., தயாமின் – 10 கி, ரிபோப்ளேவின் –, நைட்ரஜன் – 7.0சதவீதம், பாஸ்பரஸ் – 0.6சதவீதம், பொட்டாசியம் – 4.6 சதவீதம், கால்சியம் – 0.2 சதவீதம், சத்தூட்டம் –

    44 கலோரி, இரும்புச்சத்து – 0.007சதவீதம்.

    Next Story
    ×