search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூடல்"

    • மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய வேண்டும்.
    • மது விற்பனை செய்தால் நடவடிக்கை மேறகொள்ளப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு, டாஸ்மாக்கின் கீழ் இயங்கி வரும் மதுபான கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபான கூடங்கள் ஆகியவை சுதந்திர தினத்தன்று மூடப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய வேண்டும்.

    தவறும்பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேறகொள்ளப்படும் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • சின்னசேலம் வன்முறை சம்பவத்தை கண்டித்து சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் மூடினார்கள்.
    • குறிப்பாக, பள்ளிக் கூட்டத்திற்குள் வைக்கப்பட்டிருந்த மாணவ- மாணவிகளின் கல்வி சான்றிதழ் தீக்கிரையாக்கப்பட்டன.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் இன்டர்நேசனல் பள்ளி வன்முறையாளர்களால் சூறையாடப்பட்டது. குறிப்பாக, பள்ளிக் கூட்டத்திற்குள் வைக்கப்பட்டிருந்த மாணவ- மாணவிகளின் கல்வி சான்றிதழ் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும் பள்ளி முன்பு நிறுத்தியிருந்த காவல் துறையின் பஸ்சை வன்முறையாளர்கள் தீ வைத்து கொளுத்தினார்கள். போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தடுக்க முயன்ற டி.ஐ.ஜி.பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்ரீஅபிநவ் (சேலம்), செல்வகுமார் (கள்ளக்குறிச்சி) உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட 55 போலீசார் காயம் அடைந்தனர்.

    இந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு இன்று முதல் தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் இயங்காது என அறிவித்துள்ளது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1500-க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ.பள்ளிகள், இன்டர்நேசனல் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

    இதில் சேலம் மாநகரத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் இன்று திறக்கப்படவில்லை. அதுபோல் சேலம் புறநகர் மாவட்டத்தில் மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, ஆத்தூர், வீரபாண்டி, ஏற்காடு, கெங்கவல்லி, நங்கவள்ளி, தலைவாசல், பொத்தநாயக்கன் பாளையம், மேச்சேரி, தாரமங்கலம், வாழப்பாடி, ஏத்தாப்பூர், காகாபாளையம், இடங்கணசாலை, ஓமலூர், காடையாம்பட்டி, மகுடஞ்சாவடி, தேவூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

    அதுபோல் நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், ராசிபுரம், குமாரபாளையம், பாண்டமங்கலம், மோகனூர், கொல்லிமலை, சேந்தமங்கலம், பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் திறக்கப்படவில்லை.

    பள்ளிக் கூடங்கள் திறக்கப்படாது என்பது பற்றிய தகவல் முன்கூட்டியே பள்ளி நிர்வாகம் சார்பில் எஸ்.எம்.எஸ், மின்னஞ்சல் முகவரி வாயிலாக மாணவ- மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அளிக்கப்படாத, தகவல் கிடைக்காத பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தனர். பள்ளி முன்பகுதி கேட் மூடப்பட்டு, இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படாது என நோட்டீசு ஒட்டப்பட்டிருந்தது. இதனால் பெற்றோர், மாணவ- மாணவிகள் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பினர்.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில பள்ளிகள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தது. அதுபோல் ஒரு சில தனியார் பள்ளிகள் உயர்நிலை, மேல்நிலை வகுப்புக்காக பள்ளிகள் திறந்திருந்தனர்.

    பல தனியார் பள்ளிகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவர்கள் பள்ளின்கூட்டங்களை சுற்றிலும் கண்காணித்து வருகின்றன.

    • மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
    • பள்ளிக்குள் வைத்திருந்த அனைத்து சான்றிதழ்களும் கருகியது.

    பரமத்திவேலூர்:

    தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜா, மாநில செயலாளர் இளங்கோவன்,மாநில பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் விடுத்துள்ள செய்தில் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே இயங்கிவரும் தனியார் பள்ளியின் விடுதில் தங்கி பயின்று வந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி பள்ளியின் விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று பாதுகாப்புக்கு வந்த போலீசாரை கல்வீசி தாக்கியும், பள்ளி மற்றும் காவல்துறையினரின் வாகனங்களுக்கும், பள்ளி வாகனங்களுக்கும் தீ வைத்த கும்பல் பள்ளி வளாகத்திற்கு புகுந்து பள்ளியின் உடமைகளை சேதப்படுத்தியும் உள்ளனர். பள்ளிக்குள் வைத்திருந்த அனைத்து சான்றிதழ்களும் கருகியது.

    இதனால் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும். தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கும்,பள்ளி உடைமைகளுக்கும்,

    ஆசிரியர்கள்,ஊழியர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தனியார் பள்ளியின் கூட்டமைப்பின் சார்பில் மேற்கண்ட பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் மற்றும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் இன்று கருப்பு வண்ண பேட்ஜ் அணிந்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளனர். எனவே இன்று தனியார் பள்ளிகள் இயங்காது.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், பிரைமரி மற்றும் நர்சரி பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் என அனைத்து பள்ளிகளையும் தனியார் பள்ளி நிர்வாகிகள் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளை மூடி சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    • வாடிக்கையாளர் சேவை மையம் நடத்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன், 5 ஆண்டுக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தியிருந்தது.
    • நாகர்கோவிலில் வாடிக்கையாளர் சேவை மையம் துவக்கியுள்ளனர்.

    அவினாசி,

    தமிழகம் மற்றும் கேரளாவில் பி.எஸ்.என்.எல்., நிறுவனம், தனது வாடிக்கையாளர் சேவை பிரிவை, கார்வி டிஜி கனெக்ட் என்ற தனியார் நிறுவனம் வசம் ஒப்படைத்திருந்தது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில், இரு மாநிலங்களுக்கான வாடிக்கையாளர் சேவை மையம், 3 ஆண்டாக செயல்பட்டு வந்தது. தமிழக வாடிக்கையாளர் சேவை பிரிவில் 51 பேர், கேரள பிரிவில், 49 பேர் என சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், வாடிக்கையாளர் சேவை மையம் மூடப்பட்டுள்ளது.

    அந்த நிறுவனத்தினர் கூறுகையில், வாடிக்கையாளர் சேவை மையம் நடத்த, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன், 5 ஆண்டுக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தியிருந்தது. தற்போது ஒப்பந்தத்தை ரத்து செய்து, வேறு நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தினர் நாகர்கோவிலில் வாடிக்கையாளர் சேவை மையம் துவக்கியுள்ளனர் என்றனர்.

    ×