search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முடிஉதிர்வு பிரச்சினை"

    • தலைமுடி வளர்வதற்கு முறையான பராமரிப்பும் ஊட்டச்சத்தும் தேவை.
    • முடியின் வேரை பலப்படுத்தவும் முடி உதிர்வை தடுக்கவும் உதவுகிறது.

    தலைமுடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர்வதற்கு முறையான பராமரிப்பும் ஊட்டச்சத்தும் தேவை. நம்முடைய வீட்டில் உள்ள பொருட்களான கடுகு எண்ணெய், கறிவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தலைக்கு தேய்க்கும் எண்ணெயை எளிதாக தயார் செய்யலாம்.

    தொடர்ந்து 3 முதல் 6 மாதங்களுக்கு ரோஸ்மேரி எண்ணெயை பயன்படுத்தி வந்தால் மினாக்சிடிலில் கிடைக்கும் பயன்கள் அனைத்தும் இதிலும் கிடைக்கும் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. வெந்தயம் தலைமுடி வளர்ச்சியை தூண்டி, உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. மேலும் வெந்தயத்தில் உள்ள புரதம் முடி உதிர்வை குறைத்து புதிய தலைமுடி வளர உதவுகிறது

    தேவையான பொருட்கள்:

    கடுகு எண்ணெய்

    கறிவேப்பிலை

    ரோஸ்மேரி இலை

    வெந்தயம்

    பாதாம் எண்ணெய்

    விளக்கெண்ணெய்

    செய்முறை:

    முதலில் பாத்திரத்தில் கடுகு எண்ணெயை சூடுபடுத்தவும். அதோடு ரோஸ்மேரி, கறிவேப்பிலை, வெந்தயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்கவும். பின்னர் அடுப்பை அனைத்து எண்ணெய் குளிரானதும் பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும். இதில் பாதாம் மற்றும் விளக்கெண்ணெய் சமமான அளவில் சேர்க்க வேண்டும்.

    கடுகு எண்ணெயில் அதிகளவு ஆல்பா ஃபேட்டி ஆசிட் உள்ளது. முடியில் ஈரப்பதத்தை தக்கவைக்கவும், முடியின் வேர் முதல் நுனி வரை நல்ல ஊட்டம் கிடைக்கவும் இந்த ஆசிட் உதவுகிறது.

    வெந்தயம் தலைமுடியை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள புரதம் மற்றும் வைட்டமின் பி3 முடி உதர்வை தடுத்து பொடுகுத் தொல்லையை போக்குகிறது.

    ஆண்டி ஆக்சிடெண்ட் அதிகமுள்ள கறிவேப்பிலை, முடியின் வேரை பலப்படுத்தவும் முடி உதிர்வை தடுக்கவும் உதவுகிறது. இதில் உள்ள பீட்டா கரோடின் உச்சந்தலையை புத்துணர்ச்சி அடைய வைக்கிறது.

    விளக்கெண்ணெயில் ரிசினோலெசிக் ஆசிட் உள்ளது. இதில் உள்ள நுண்ணியிர் எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலைக்கு நன்மை செய்கிறது. தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுத்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

    தலைமுடி ஆரோக்கியமாக இருப்பதற்கு பல வழிகளில் உதவி செய்கிறது பாதாம் ஆயில். வைட்டமின் ஏ, டி மற்றும் இ போன்ற கொழுப்பு கரையும் வைட்டமின்கள் முடிக்கு தேவையான ஊட்டச்சத்தையும் பளபளப்பையும் தருகிறது. மேலும் இதில் மெக்னீசியம், கால்சியம், ஓமேகா 6 மற்றும் ஓமேகா 9 ஃபேட்டி ஆசிட் உள்ளது.

    இத்தகைய இயற்கை எண்ணெய்கள் பொதுவான தலைமுடி பிரச்சினைகளை சரி செய்வதோடு வறட்சியை போக்கி, வழுக்கையை கட்டுப்படுத்தி, முடியின் அடர்த்தி குறையாமல் பார்த்துக் கொள்வதோடு நரை முடி வராமலும் பார்த்துக் கொள்கிறது.

    எனினும் உங்களுக்கு குறிப்பிட்ட தலைமுடி சார்ந்த பிரச்னைகள் இருந்தால், மருத்துவரை நேரடியாக சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. ஏனென்றால் இந்த எண்ணெயில் பயன்படுத்தப்படிருக்கும் சில பொருட்கள், ஒருசிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

    • முடிஉதிர்வு பிரச்சினை மன உளைச்சலை ஏற்படுத்திவிடும்.
    • வழுக்கை விழுந்த தலையில் கூட முடிவளரும்.

    பொதுவாக தலைமுடி உதிர்வதை ஒரு வயதிற்கு மேல் நம்மால் நிறுத்தமுடியாது. குழந்தைப்பேறு, வயோதிகம், உடல்நலப்பிரச்சினை, சத்துக்கள் குறைவது போன்ற காரணங்களால் முடி உதிர்வை தடுக்க முடியாது. பலபேருக்கு அதுவே மன உளைச்சலை ஏற்படுத்திவிடும். இப்படி முடி அதிகமாக கொட்டுகிறதே என்ன செய்வது என்று புரியாமல் யோசித்துக்கொண்டு இருப்பார்கள்.

    கைமேல் பலன் தரக்கூடிய மிக அருமையான தீர்வை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். வழுக்கை விழுந்த தலையில் கூட முடிவளரும் அளவுக்கு இந்த தீர்வு இருக்கும். நமது வீட்டு அடுப்படியில் இருக்கும் சின்ன வெங்காயம் தான் இந்த தீர்வை தருகிறது. இதில் இருக்கக்கூடிய சல்பர் தான் முடிவளச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

    சல்பர் நம் தலையில் ஏற்படக்கூடிய புண், பொடுகு மற்றும் முடிகொட்டுவதற்கு காரணமான தொற்றுகளை அழிப்பதற்கு இந்த சல்பர் உதவுகிறது. இந்த சின்னவெங்காயத்தை எவ்வாறு பயன்படுத்வேண்டும் என்றால் இதனை நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பசைபோல் அரைத்து எடுக்க வேண்டும்.

    இதில் உள்ள சாறினை பிழிந்து எடுத்து அதனை தலையில் உள்ள முடிகள் மற்றும் அதன் வேர்களில் படுமாறு நன்றாக தேய்த்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் ஒரு 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். அதன்பிறகு ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். புண். பொடுகுத்தொல்லை இருப்பவர்கள் கொஞ்சம் அரிப்பு காணப்படும். அதை பொறுத்துக்கொண்டு ஒருமணிநேரம் ஊறவைக்க வேண்டும். கண் எரிச்சல் இருக்கும் அதனால் எந்த பிரச்சினையும் ஏற்படாது. அதன்பிறகு ஒரு மைல்டான ஷாம்பு போட்டு தலைமுடியை அலச வேண்டும்.

    சிலர் எனக்கு சளித்தொல்லை, சைனஸ் பிரச்சினை இருக்கிறது. நாங்கள் எப்படி ஊறவைத்து குளிப்பது என்று கேட்கலாம். அவர்களை இந்த சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து தடவுவதற்கு பதிலாக அவர்கள் சின்ன வெங்காயத்தை சிறிதளவு ஒன்றிரண்டாக தட்டி அதனை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி அதனை தடவி வரலாம்.

    இதனுடன் சேர்த்து எலுமிச்சை சாறு அல்லது புதினா சாறு ஆகியவற்றையும் தலையில் தடவி வரலாம். இதனை சாறு எடுத்து தடவி வந்தால் மட்டுமே முடியில் எந்த வெங்காய சக்கைகளும் படியாமல் இருக்கும். இதனை தொடர்ந்து ஒரு 6 மாதத்திற்கு பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வது குறைந்து முடிவளர ஆரம்பிக்கும். முடி இல்லாமல் வழுக்கை விழுந்தவர்கள் கூட தொடர்ந்து இந்த மாதிரி பயன்படுத்தி வந்தால் நல்ல பலனை பெறலாம்.

    ×